இந்த தமிழ் தத்துவங்கள் எல்லாம் எனக்கு மின்னஞ்சலில வந்திருந்துது. நீங்களும் வாசித்து பயன் பெறுகிறதுக்காக இதில பதிஞ்சிருக்கிறன். உங்களுக்கு தெரிஞ்ச தத்துவங்களையும் பின்னூட்டங்களில போட்டுவிடுங்கோ.
நாய்க்கு நாலுகால் இருக்கலாம், ஆனா அதால லோக்கல் கால், ஐடிடி கால் ஏன் மிஸ்ட் கால் கூட பண்ண முடியாது.
கங்கை ஆத்தில மீன் பிடிக்கலாம், காவேரி ஆத்தில மீன் பிடிக்கலாம் ஆனா ஐயர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?
என்னதான் உன் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா?
மீன் பிடிக்கிறவனை மீனவன் எண்டு சொல்லலாம்……. நாய் பிடிக்கிறவனை நாயவன் என்று சொல்ல முடியுமா?
என்னதான் ஒருவன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போட முடியாது.
தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும், முடி கொட்டினா வலிக்குமா??
ஸ்கூல் டெஸ்டில பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்டில பிட் அடிக்கலாம், பிளட் டெஸ்டில பிட் அடிக்க முடியுமா?
பொங்கலுக்கு லீவு கொடுப்பாங்க.. ஆனா இட்லி வடைக்கு லீவு கொடுப்பாங்களா??
கோல மாவில கோலம் போடலாம்… கடலை மாவில கடலை போட முடியுமா??
தூக்க மருந்து சாப்பிட்ட தூக்கம் வரும்.. இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா??? (என்ன கொடுமை சார் இது)
வாழை மரம் தார் போடும் அதை வச்சு ரோடு போட முடியுமா??
டீ கப்ல டீ இருக்கும், வேர்ல்ட் கப்பில வேர்ல்ட் இருக்குமா??
பாலில இருந்து பால்கோவா பண்ணலாம்… ரசத்தில இருந்து ரசகுல்லா பண்ண முடியுமா??
சண்டே அன்னைக்கு சண்டை போட முடியும். ஆனா மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியாது.
5 ஆவணி, 2007