அறிவியல்

சில வியப்பூட்டும் விடயங்கள்.

இந்த வியப்பூட்டுகின்ற உண்மையான விடயங்களை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கக்கூடும். இது அறியாதவர்களுக்காக.

  1. ஒரு நான்கு வயது சராசரிக் குழந்தை ஒரு நாளைக்கு நானூறு கேள்விகளுக்கு மேல் கேட்கின்றது.
  2. உலகிலுள்ள நாற்பத்திஎட்டு ஏழை நாடுகள் கொண்டுள்ள சொத்தைவிட உலகின் மூன்று பெரிய பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு அதிகமாகும்.
  3. உலகின் மிகவயது குறைந்த பெற்றார்கள் வயதுகள் முறையே எட்டு, ஒன்பது. இவர்கள் 1910 இல் சீனாவில் வாழ்ந்தார்கள்.
  4. “I am” என்பதுதான் ஆங்கில மொழியிலுள்ள பூரணமான சிறிய வசனமாகும்.
  5. “மொனோலிசா”விற்கு புருவங்கள் இல்லை.
  6. நேரத்தின் மிகச்சிறிய அலகு யொக்ரோசெக்கன்ட் (yoctosecond)
  7. ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிக தடவை கண்சிமிட்டுகின்றார்கள்.
  8. “TYPEWRITER” எனும் ஆங்கிலச் சொல்லுத்தான் விசைப்பலகையின் ஒருவரியினை மட்டும்கொண்டு உள்ளிடக்கூடிய மிகப்பெரிய சொல்லு.
  9. பன்றிகளால் ஒருபோதும் வானத்தினை பார்க்க இயலாது. அவற்றின் உடல்வாகு அதற்கு இடங்கொடுக்காது.
  10. 111,111,111 x 111,111,111 = 12,345,678,987,654,321
  11. உலகிலுள்ள மிகவும் பொதுவான பெயர் “மொகமட்” (Mohammed)
  12. உலகிலேயே துள்ளிக்குதிக்க முடியாத மிருகம் யானை மட்டுமே.
  13. “Stewardesses” என்ற ஆங்கில சொல்தான் இடக்கையால் மட்டும் விசைப்பலகையில் உள்ளிடக்கூடிய மிகப்பெரிய சொல்லாகும்.
  14. சிகரெட் லைற்றர்கள் நெருப்புப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட முன்னரே கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.
31 மார்கழி, 2006

செயற்கைக் கடற்கரை

உலகின் முதலாவது மனிதனால் உருவாக்கப்பட்ட உள்வீட்டு கடற்கரை (Indoor beach) யப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. எப்போதும் நீல வானமும், குளிரும் சூடுமற்ற வானிலையும், உப்பும் அழுக்குமற்ற நீரும், வெண்ணிற மணலும் கொண்ட முதலாவது கடற்கரையாக இது விளம்பரப்படுத்தப்படுகின்றது.

ஒவ்வொரு மணத்தியாலமும் இங்கிருக்கும் செயற்கை எரிமலை வெடித்து சிறிது நேரத்திற்கு உயிருடன் காணப்படுகின்றது. இந்த கடற்கரையின் அழகிய படங்களை கீழே பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்கி படங்களை பெருதாக்கி பாருங்கள்)











31 மார்கழி, 2006

நானும் ஒரு சர்வே..

கடந்த ஒரு கிழமையாக அனேகமாக எந்த பதிவிற்கு போனாலும் ஒரு சர்வே காணப்படுகிறது. இதைப்பார்த்தபின் எனக்கு ஒரு சர்வே நிரலை எழுதும் ஆசை வந்துவிட்டது. முழுவதும் நானே எழுதாமல்(அவ்வளவிற்கு திறமையிருந்தா பிறகென்ன?????) Flash relief இன் Poll component ஐ பலரும் பயன்படுத்தக் கூடியவாறு (Multi user system) உருவாக்கியுள்ளேன். இதன் மூலம் எவரும் இதனை தங்கள் சொந்த சர்வேக்கு பயன்படுத்த முடியும். சர்வேயின் பூரண கட்டுப்பாடும் உருவாக்குபவரிடமே இருக்கும் ஆனால் முடிவுகளை(வாக்குகளின் எண்ணிக்கையை) மாற்ற முடியாது. ஆனால் இது எந்தளவிற்கு சரியாக வேலை செய்கிறுது என்று சரிபார்க்க உங்கள் உதவியை நாடியுள்ளேன். வந்தது வந்ததாக ஒரு வாக்களியுங்கள். ஏனென்றால் அப்போதுதான் இதன் வினைத்திறனை சரிபார்க்க முடியும்.

3 மார்கழி, 2006