எனக்கு பிடித்தமான மென்பொருள்கள் 10

ஒவ்வொரு இயங்குதளத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதற்கு பல மென்பொருள்கள் இருக்கக்கூடும். அவற்றிலிருந்து எமக்கு வசதியான எம்மால் இலகுவாக கையாளக்கூடிய மென்பொருள்களை கண்டறிவதென்பது நிச்சயமாக மிகவும் கடினமான ஒரு வேலையாகும்.

இங்கே நான் எனக்கு பிடித்த, தினமும் பயன்படுத்தும் மென்பொருட்களை வகைப்படுத்தி உள்ளேன். நான் மக் மற்றும் உபுந்து இயங்குதளங்களை மட்டுமே பயன்படுத்துவதால் இவற்றில் அனேக மென்பொருகள் மக் இயங்கு தளத்திற்குரியவை. ஒன்று அனைத்து இயங்குதளத்திற்கும் பொதுவானது. இன்னுமொன்று மக் மற்றும் வின்டோஸில் இயல்பாக வேலைசெய்யக்கூடியது. பல இலவசமானவை. சில வணிகரீதியான மென்பொருள்கள்.

1. Alfred
மக் இயங்குதளம் பயன்படுத்துபவர்களுக்கு அனேகமாக இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று டொக் வேகமாக நிரம்பிவிடுவது. இதனால் அவர்களுக்கு ஒரு மென்பொருள் தொடக்கி ஒன்று இருப்பது அவசியமாகின்றது. Alfred இதற்கு சிறப்பான ஒரு மென்பொருளாகும்.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக்

2. Colloquy
நீங்கள் ஒரு IRC பாவனையாளர் எனில் உங்களிடம் கட்டாயம் இருக்கவேண்டிய மென்பொருள் இதுவாகும். மிக இலகுவான அழகிய பயனாளர் முகப்பு மற்றும் விரைவான செயல்திறன் மிக்க IRC client இதுவாகும்.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக்

3. Evernote
உங்களின் நினைவகம் இது என்று சொல்லுமளவிற்கு சிறப்பானதொரு மென்பொருள் இதுவாகும். நீங்கள் வாசித்தவற்றை அவ்வாறே சேமித்து வைக்கவும், ஏனையவர்களுடன் பகிரவும் இலகுவான ஒரு மென்பொருள் இதுவாகும்.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக், வின்டோஸ், அனேக மொமைல் இயங்குதளங்கள் மற்றும் இணையமூடாக.

4. NetNewsWire
எனக்கு மிகப்பிடித்த சுளுளு உடநைவெ இதுவாகும். இதைப்போல சிறந்த ஒரு சுளுளு உடநைவெ இனை நான் எந்த இணையத்தளத்திலும் பயன்படுத்தியதில்லை. இலகுவான அழகிய பயனர் முகப்பு மற்றும் புழழபடந சுநயனநச உடன் இணைத்துக்கொள்ளும் வசதி என்பன இதனை நீங்கள் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டியதன் தேவையை உணர்த்தும்.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக்

5. Miro
இலகுவாக இலவசமாக Podcast களை தரவிறக்கி பார்க்க சிறப்பான ஒரு மென்பொருள் இதுவாகும். ரொறன்ற் கோப்புகளை தரவிறக்கும் வசதியும் உண்டு. இணையமூடாக உங்கள் தொலைக்காட்சி இந்த மென்பொருள்.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக், லினிக்ஸ் மற்றும் வின்டோஸ்

6. Sequential
நீங்கள் கணினியில் படக்கதை வாசிப்பவராக இருந்தால் உங்களுக்கு கட்டாயம் தேவையான மென்பொருள் இதுவாகும்.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக்

7. Skitch
அழகான திரைவெட்டுக்களை பெற்றுக்கொள்ளவும், அவற்றில் இலகுவாக குறிப்புக்களை செய்துகொள்ளவும் பயன்படும் அழகிய மென்பொருள் இதுவாகும்.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக்

8. Sparrow
மிக அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு மின்னஞ்சல் மென்பொருள் இதுவாகும். நீங்கள் ஒரு ஜிமெயில் பயனாளர் ஆயின், மிக அழகான இலகுவான இம்மென்பொருள் உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக்

9. Tweetie
நீங்கள் ஒரு ருவிற்றர் பாவனையாளர் எனின், இம்மென்பொருளை நீங்கள் ஒருமுறை கட்டாயம் பயன்படுத்தி பார்க்க வேண்டும்.

விலை : இலவச பதிப்பும் உண்டு (இது ருவிற்றர் நிறுவனத்தால் வாங்கப்பட்டு விட்டதால், விரைவில் பூரணமாக இலவசமாகும்).
இயங்குதளம் : மக்.

10. Espresso
நீங்கள் ஒரு இணையத்தள பாவனையாளர் ஆயின் உங்களிடம் நிச்சயம் இருக்க வேண்டிய மென்பொருள் இது. ஏராளமான வசதிகள் இவ்வழகிய மென்பொருளில் நிறைந்திருக்கின்றன.

விலை : ரூ 9500.00
இயங்குதளம் : மக்

குறிச்சொற்கள்:

15 பின்னூட்டங்கள்

  1. amalan சொல்லுகின்றார்: - reply

    தகவல்கள் மிகவும் உபயோகமாக உள்ளவை. பாராட்டுகள்.

  2. Loshan சொல்லுகின்றார்: - reply

    பயனுள்ள பதிவு..
    தெரியாத சில மென்பொருள்களின் பயன்களை அறிந்தேன். நன்றி பஹீ.

    LOSHAN
    http://www.arvloshan.com

  3. என்.கே.அஷோக்பரன் சொல்லுகின்றார்: - reply

    நல்ல தகவல்கள்!
    மக் புக் வாங்குமளவுக்கு இன்னும் வசதியில்லை… நேற்றும் ஒன்று பார்த்தேன் விலை இரண்டரை இலட்சமாம் – என்ட ஆண்டவனே!

    என்றாவது வாங்கினால், இது எல்லாவற்றையும் (அப்ப இன்னும் அப்டேடட் வேர்ஷன்ஸ் வந்திருக்கும்) இன்ஸ்ரோல் செய்து கலக்க வேண்டியதுதான்!

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      அஷோக்பரன்,

      வாங்க. ஆனா மக்புக் கொஞ்சம் விலை கூட எண்டாலும், ஒரு இலட்சத்துக்கே வாங்கலாம். அண்மையில என்னுடைய நண்பர் ஒருவர் வாங்கினவர்.

      • என்.கே.அஷோக்பரன் சொல்லுகின்றார்: - reply

        உண்மையா ஒரு லட்சத்திற்கு கிடைக்குதா? முந்தநாள் BT Store ல் பார்த்தனான் ஒரு மக் புக் – இரண்டரை லட்சம். இரண்டு லட்சத்திற்கு குறைவா அவங்களிட்ட மக் புக் இல்லையெண்டினம்.

  4. நிரூஜா சொல்லுகின்றார்: - reply

    பகிர்வுக்கு நன்றி.
    சில மென்பொருட்கள் முன்பு அலுவலக நிமித்தமாக மக் பயன்படுத்திய நேரம் உபகயோகித்துள்ளேன். இப்போது மக் இல்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கலாம்.

  5. asfer eseak சொல்லுகின்றார்: - reply

    நானும் ஒரு மெக் வாங்கினன்.. காலை எழும்பிப்பாத்தா காணோமே.. 🙂

  6. திலீபன் சொல்லுகின்றார்: - reply

    நண்பா … மிக்க நன்றி.. புதிய பதிவுகளை எதிர்பார்கின்றேன்.

  7. Amalan சொல்லுகின்றார்: - reply

    Sparrow super…!
    I Love Sparrow…….

  8. மதுவதனன் மௌ. சொல்லுகின்றார்: - reply

    நாங்கள் உபுண்டுக்கு மக் தீம் பாவிக்கிறம். 😀

  9. யோ வொய்ஸ் (யோகா) சொல்லுகின்றார்: - reply

    நாங்களெல்லாம் விண்டோஸ் பாவனையாளர்கள்,

    உபுண்டுவுக்கு மாறி பின்னர் எனது புரோட்பேண்ட் கனெக்சன் உபுண்டுவில் வேலைசெய்யாததினால் மீண்டும் விண்டோஸ் 7க்கு மாறி விட்டேன், மக்புக் வாங்கினால் பாவித்து பார்க்கிறேன்..

  10. […] பிடித்த மென்பொருள்கள் சிலவற்றை இங்கே பட்டியலிட்டிருந்தேன். அவற்றில் அனேகமானவை மக் […]

  11. மதிசுதா சொல்லுகின்றார்: - reply

    அருமையான தகவல் நன்றி சகோதரம்.
    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    http://mathisutha.blogspot.com/

  12. பகீ சொல்லுகின்றார்: - reply

    அஷோக்பரன், அவர் அது சிங்கப்பூரில இருந்து கொண்டுவந்தவரிட்ட வாங்கினது. அங்க ஆரும் தெரிஞ்சாக்கள் இருந்தா ஒருக்கா விசாரிச்சு பாருங்கோ.

  13. Manikandan சொல்லுகின்றார்: - reply

    மிகவும் உதவியாக இருக்கும். மனமார்ந்த நன்றி