இணையம்

உங்கள் தேடல் முடிவுகளை ஒப்பிட


நேற்று இணையத்தளங்களை சுத்தி வரேக்க இந்த இணையத்தை கண்டுபிடிச்சன். இந்த தேடுபொறியில நீங்கள் ஏதாவது சொல்லை உள்ளி்ட்டு தேடினா அது Google, msn, yahoo மூன்று தேடுபொறியில கிடைக்கிற முதல் 50 முடிவுகளையும் ஒப்பிட்டு சொல்லும். இப்ப இது text மற்றும் Image தேடல்களை மட்டும் தான் ஒப்பிடுது. போகப்போக இன்னும் வசதிகள் வருமெண்டும் சொல்லுகினம். நீங்களும் ஒருக்கா போய் பாருங்கோவன்.

பிடிச்சிருந்தா எனக்கு ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கோ.

6 தை, 2007

Web 2.0 என்றால் என்ன ?

அறிமுகம்.
Web 2.0 என்பது இணையத்தளங்களின் புதியதொரு பதிப்பாகும். Web 2.0 அடிப்படையில் அமைவதன் மூலம் இணையத்தளங்கள் கவர்ச்சிகரமானவையாயும், பயன்படுத்த இலகுவானவையாயும், பிரகாசமானவையாயும் மாறப்போகின்றன. இது வெறுமனே இணையத்தளங்களின் வடிவமைப்பில் மட்டும் மாற்றங்களை மேற்கொள்ளுவதாயல்லாது இணையத்தளங்களின் வியாபாரக் கொள்கைகள், திட்டமிடல் கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு கொள்கைகளிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

Web 1.0 சின்னங்களுக்கும் Web 2.0 சின்னங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை கீழே பாருங்கள்.

இனி நாங்கள் எங்களின் இணையப்பக்கங்களை எவ்வாறு Web 2.0 அடிப்படைக்கு அமைவாக மாற்றுவது என பார்ப்போம்.

இலகுத்தன்மை
Web 2.0 வடிவமைப்பு பயன்படுத்த இலகுவானதாய் பெரிய எழுத்துக்களையும் அதிக படங்களையும் கொண்டதாய் அமைந்திருத்தல் வேண்டும். வேண்டும். எழுதப்பட்ட விடயங்கள் மிகக் குறைவாயே இருத்தல் வேண்டும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.


மையப்படுத்தப்பட்ட விடயங்கள்.
கீழே காட்டப்பட்டுள்ள உதாரணங்களை போன்று விடயங்கள் இணையப்பக்கத்தின் மையத்தில் அமைதல் வேண்டும். சூழ உள்ள வெறுமையான பிரதேசங்கள் Gradient நிறங்களால் நிரப்பப்பட்டிருத்தல் வேண்டும்.

Web 2.0 இல் Horizontal navigation மிகவும் பொதுவாக பயன்படுத்த படுகின்றத்தப்படும் வடிவமைப்பாகும். இது பெரிய எழுத்துருக்களில் அனைவருக்கும் தெரியக்கூடியதாக அமைக்கப்பட்டிருக்கும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.



பின்னணி.
Web 2.0 இணையத்தளங்களின் பின்னணி பொதுவாக Gradiaent colors இலோ அல்லது diagnol line pattern இலோ காணப்படும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.

ஒளித்தெறிப்பு
Web 2.0 இன் இன்னுமொரு அடிப்படை நீங்கள் இணையப்பக்கத்தில் பயன்படுத்தும் சில படங்களுக்கு (குறிப்பாக சின்னங்களுக்கு) கீழே காட்டப்பட்டுள்ள உதாரணங்களை போன்று ஒளித்தெறிப்பினை ஏற்படுத்துதல்.


வட்டவடிவ மூலைகள்.
இணையத்தளத்தில் பயன்படுத்தப்படும் சதுரங்கள், buttons, text boxes போன்றவற்றின் மூலைகளை வட்டவடிவமாக்கலும் இந்த வடிவமைப்பில் புதியதொரு விடயமாகும்.
கீழே சில உதாரணங்களை பாருங்கள்.

Light box
இதுவும் புதிய வடிவமைப்பு முறையில் காணப்படும் ஒரு விடயமாகும். பெரிய படங்கள் மற்றும் பிழைச்செய்திகள் போன்றவற்றை காட்டுவதற்கு இது பயன்படுத்தபடுகின்றது. கீழே உதாரணத்தை பாருங்கள்.

Ajax
எப்போதும் Web 2.0 இனை பற்றி கதைக்கும்போது AJAX இனைப்பற்றியும் சேர்த்தே கதைக்கின்றோம். இது உங்கள் இணையப்பக்கங்களை கவர்ச்சிகரமானவையாயும், பயன்படுத்த இலகவானவையாயும், வேகமானவையாயும் மற்றுகின்றது.

Syndication
உங்கள் இணையத்தளத்திற்கு RSS Syndication பயன்படுத்தபட்டிருத்தல் வேண்டும். அத்தோடு கீழ் காட்டப்பட்டது போன்று பயன்படுத்த இலகுவாக feed icons உம் காணப்படவேண்ட

ும்.

Bookmarking
உங்கள் இணையப்பக்கத்தை பயனாளர்கள் Bookmark செய்யக்கூடியவாறு digg, delicious, reddit சின்னங்கள் காணப்படவேண்டும்.

பெரிய எழுத்துருக்கள
உங்கள் Web 2.0 வடிவமைப்பில் பெரிய தெளிவான எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

பிரகாசமான நிறங்கள்
உங்கள் வடிவமைப்பிற்கு பிரகாசமான நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் சேவை பற்றிய அறிமுகம்.
உங்கள் இணையத்தளத்தின் முதற்பக்கத்தில் உங்கள் செவை பற்றிய பத்தி காணப்படவேண்டும். இது பெரிய எழுத்திலும் படங்கள் புள்ளடிகள் கொண்டதாயும் அமைந்திருத்தல் வேண்டும்.

Web 2.0 நட்சத்திரம்
அனேகமான Web 2.0 இணையத்தளங்களில் புதிய விடயங்களை அறிமுகப்படுத்துதல், எண்களிடல் போன்ற தேவைகளுக்கு ஒரு நட்சத்திரம் பயன்படுத்தப்பட்டிருப்பதனை அவதானித்திருப்பீர்கள். இவற்றை நீங்களும் பயன்படுத்த வேண்டும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.

Beta version
உங்கள் இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கப்படும் போது அல்லது மேம்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற போது ஒரு Beta சின்னம் அல்லது சொல்லு உங்கள் இணையப்பக்கத்தில் காணப்பட வெண்டும்.



பயனாளர்களின் பங்களிப்பு

உங்கள் இணையத்தளத்திற்கு பயனாளர்களின் பங்களிப்பு கட்டாயம் இருத்தல் வேண்டும். இது ஒரு பின்னூட்டப்பெட்டியாக, விக்கி பக்கமாக அல்லது வேறு எந்த விதமாகவாவது இருக்கலாம்.
உதாரணம்
wikipedia : wiki based
Digg : contents sharing
WordPress : comments sections and ratting.

இது சம்பந்தமான உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டமிடுங்கள்.

4 தை, 2007

கூகிளின் இடைநிறுத்தப்பட்ட சேவைகள்

கூகிள் காலத்துக்கு காலம் பல சேவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றது. அவற்றில் பல வெற்றி பெற்றும் சில தோல்வியுற்றும் உள்ளன. இருந்தாலும் சில சேவைகளை மட்டுமே கூகிள் இடைநிறுத்தி உள்ளது. அவற்றை கீழே பார்ப்போம்.

Google Keyboard shortcuts (2002)
கூகிளின் தேடுபொறியினை இயக்குவதற்கும் அதன் தேடு முடிவுகளுடே உலாவுவதற்கும் விசைப்பலகையினை பயன்படுத்த இது வசதி செய்து தந்திருந்தது.

Google Voice search (2002)
ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் கூகிளில் தேடுதல். இதன்மூலம் பயனாளர்கள் ஒரு சொல்லினை உள்ளிடத்தேவையில்லை. கூகிள் ஒலியினை அடையாளப்படுத்துவதன் மூலம் (voice recognition) தேடுதலை மேற்கொள்ளும்.

Google viewer (2002)
இதன் மூலம் கூகிளின் தேடுதல் முடிவுகளை ஒரு படக்காட்சியாக (Slide show) ஆக பார்க்க முடியும். கூகிள் கருவிப்பட்டை இந்த வசதியை கொண்டிருந்தது. ஆனால் இது சரியாக வேலைசெய்யவில்லை.

Google webquotes (2002)
இதன் மூலம் ஒரு இணையத்தளத்தை பற்றிய விமர்சனங்களை பார்க்க முடியும்.

Google Compute (2002)
இது உங்கள் கணினியில் உள்ள வளங்களை அராய்ச்சிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கும். உங்கள் கணனி Idle நிலையில் இருக்கும் போது மட்டுமே இது வேலை செய்யும்.

Google Answers (2002)
ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு பணம் செலுத்தி ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து பதிலை பெற இந்த சேவை உதவியது. 2006 நவம்பரில் இந்த சேவை இடைநிறுத்தப்பட்டது.

Google Search API (2002)
இது கூகிளின் தேடல் முடிவுகளை மேம்படுத்துபவர்கள் (Developers) தங்கள் applications உடன் இணைக்க உதவிய ஒரு SOAP API. இது 2006 திசம்பருடன் இடைநிறுத்தப்பட்டு விட்டது.

Google Deskbar (2003)
உங்கள் கணினியில் இருந்து கூகிளை தேட உதவிய ஒரு மென்பொருள். இப்போது இது Google Desktop உடன் இணைக்கப்பட்டு விட்டது.

Google X (2005)
இது Mac வடிவில் அமைந்த கூகிளின் முன்பக்கமாகும். இது ஒரு நாள் மட்டுமே பாவனையில் இருந்தது. அப்பிள் கணினி நிறுவனத்தின் எதிர்ப்பினை தொடர்ந்து இது உடனடியாகவே நிறுத்தப்பட்டு விட்டது.

Google vedio (initial version)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தேட உதவிய ஒரு கூகிளின் சேவை.

3 தை, 2007