இணையம்

Web 2.0 Logos

நாங்கள் தினம் தினம் பயன்படுத்துகின்ற அல்லது காண்கின்ற பல நிறுவனங்களின் logo களை அவதானித்திருப்பீர்கள். அவற்றில் சிலவற்றினை Web 2.0 slandered இற்கு மாற்றினால் எவவாறு இருக்கும்?

கீழே உள்ள படத்தை பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் படத்தினை பெரிதாக்கி பாருங்கள்).


16 தை, 2007

சிறிய விளையாட்டு

உங்களுக்கு பிடிக்காத இணையத்தளம் ஏதும் இருக்கின்றதா?? அவற்றை ஏதேனும் செய்யவேண்டும் என்று விரும்புகின்றீரகளா?? அப்படியானால் கீழே சொல்லப்பட்டவாறு செய்யுங்கள்.

1. அந்த இணையத்தளத்திற்கு செல்லுங்கள்

2. முகவரிப்பட்டையில் (Address bar) இலுள்ள எழுத்துக்கள் அனைத்தையும் அழித்து விடுங்கள்

3. கீழே தரப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் நிரல் துண்டை Address bar இல் ஒட்டி Enter பண்ணுங்கள் அவ்வளவுதான். சில அதிசயங்களை காண்பீர்கள்.

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.images; DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5; DIS.top=Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5}R++}setInterval('A()',5); void(0);

படங்கள் குறைவான இணையத்தளங்களில் (உதாரணம் google) முதலில் முயற்சித்து பாருங்கள்.

12 தை, 2007

வெளிச்சப்பெட்டி (Light box)

இப்ப சில நாட்களா என்ர பதிவுகளில இருக்கிற படங்களை பெரிசாக்கிறதுக்கு நீங்கள் சொடுக்கி பாத்திருந்தா ஒரு effect ஐ பாத்திருக்கலாம். இதுக்கு பெயர் Light Box. இது தான் இப்ப அனேகமான இணையத்தளங்களில படங்கள் பிழைச்செய்திகள் அறிவுறுத்தல்கள் போன்ற சில விசயங்களை காட்டுறதுக்கு பயன்படுத்தப்படுகுது. நானும் என்ர பதிவுகளில இப்ப படங்களை பெரிசாக்கி காட்டுறதுக்கு இதை பாவிக்க தொடங்கியிருக்கிறன். இதில இருக்கிற நன்மை என்னெண்டா படங்களை பெரிசாக்கி பாக்கிறதுக்கு நீங்கள் இன்னொரு சாளரத்தை திறக்க தேவையில்லை. அதோட திறந்து வைச்சிருக்கிற இணையப்பக்கமும் திருப்பி லோடாகிற தேவைகள் இல்லை.

இதைப்பற்றி மேலதிக விபரம் தேவையெண்டா இங்க போய் பாருங்கோ.

ஆனா இதைப்பாவிக்கிற எண்டா நீங்கள் இந்த ஜாவாஸ்கிரிப்ட் நிரலை அந்த இணையத்தளத்தின்ர வழங்கியில இருந்தே பாவிக்க ஏலாது. அதை பதிவிறக்கி உங்கட ஏதாவது வழங்கியில அல்லது ஜாவாஸ்கிரிப்ட் host பண்ணிற ஏதாவது இணையத்தளங்களை பாவிக்க வேணும். உஙகளுக்கு இதை பயன்படுத்த விருப்பம் இருந்து ஆனா இந்த வசதிகள் இல்லாம இருந்தா எனக்கு ஒரு பின்னூட்டம் போடுங்கோ என்ர வழங்கியின்ர முகவரியை தாறன் (அதில இருந்துதான் நான் பயன்படுத்திறன்).

8 தை, 2007