இணையம்

இணையத்தளங்களுக்கான கருவிகள்

இணையத்தளங்களில் பொருத்தி பயன்படுத்தக்கூடிய கருவிகள் பல கருவிகள் (gadgets) இலவசமாக இணையமெங்கும் கிடைத்தாலும், அவை குறிப்பிட்ட வசதிகளை கொண்டவையாகவும் அதைவிட விளம்பர நோக்கத்துடனுமேயே வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் பதிபவர்கள் பலர் அவ்வாறன கஜெற்சை உருவாக்கும் வல்லமையுடையவர்களாயிருப்பதை அவர்களின் பதிவுகளிலிருந்து உணரக்கூடியதாக உள்ளது. இதனால் தமிழ் பதிபவர்கள் நாங்களாகவே எங்களுக்கு தேவையான கருவிகளை உருவாக்கிகொண்டால் அவை தேவைக்கேற்றபடி மாற்றி பயன் படுத்தக்கூடியதாக இருக்கும். இப்படி யராவது உருவாக்கினால் அவற்றை இணையத்தில் ஏற்ற நம்பிக்கையான எனது இணையப்பிரதேசத்தினை(web hosting place) தரமுடியும்.

இதன் மூலம் ஏனைய வலைப்பதிபவர்களும் பயன்பெற முடியும்.

உங்கள் பயனுள்ள கருத்துகளை எதிர்பார்க்கிறேன்

28 கார்த்திகை, 2006

வானம்பாடி


கடைசியா யாழ்ப்பாணத்தில இருந்து பதியப்படிற பதிவு ஒண்டை கண்டு பிடிச்சிட்டன். வானம்பாடி என்ற பெயரில தான் பதியப்படுது. கலிஸ் எண்டவர் பதியிறார். பதியத்தொடங்கி இரண்டு மூன்று நாள்தான் ஆகுது. நீங்களும் ஒருக்காப்பாத்து வரவேற்றாத்தானே ஒரு உற்சாகமா இருக்கும். எங்க உங்கட பின்னூட்டங்களை பாப்பம்.

22 கார்த்திகை, 2006

பணம் பண்ணலாம் பணம்

இண்டைக்கு வழமைபோல இணையத்தை சுத்தி வரேக்க இந்த இணையத்தளத்தை கண்டு பிடிச்சனான். இதுகும் google adsence போலத்தான். நீங்களும் ஒருக்கா முயற்சி பண்ணி உங்கட தளத்தாலையும் பணம் பண்ணேலுமோ எண்டு பாருங்கோ……………

9 கார்த்திகை, 2006