AS Library.org
நீண்ட காலமாக flash மற்றும் Flex சம்பந்தமான எனது இணையத்தளத்தை ஆரம்பிக்க வேண்டு என்று எண்ணி வந்தேன் (ஏறத்தாள 5 வருடங்கள்). எனது இந்த ஊரோடி வலைத்தளத்தை ஆரம்பித்த போது கூட எனது முதலாவது பதிவில் இதனை குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுதுதான் அதனை ஆரம்பிக்க முடிந்துள்ளது. இன்னும் நிறைய வேலைகள் பாக்கி உள்ளது.
வருகை தந்து பாருங்கள்.
பகீ
ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.
எனக்கு இது தொழில் இல்லை என்றாலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை உண்டு.
இதை உங்கள் வலைப்பக்கத்தில் போட்டால் பிழைச்செய்தி வருகிறது.
அங்கு ஆங்கிலம் மட்டும் தான் அனுமதிக்குமா?
வடுவூர் குமார் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நான் இதனை ஆங்கில பதிவாகவே உருவாக்கி இருப்பதனால் தமிழ் தொடர்பாக பரிசோதிக்கவில்லை. நான் ஆங்கிலத்திலேயே பின்னூட்டங்களையும் அங்கு எதிர்பார்க்கின்றேன்.
நன்றி
ஆனாலும் தமிழை எதிர்பார்க்கிறோம் . . .
ஆனாலும் தமிழை எதிர்பார்க்கிறோம் . . .
ஏன் ஆனாலும் அப்பிடி எதிர்பாக்கிறீங்க?? ஒரு ஆங்கில பதிவில நான் ஒரு போதும் தமிழை இணைக்க விரும்பவில்லை.
உங்கள் ஒத்துளைப்புக்கு நன்றி மாயா.
பகீ,
உங்கட முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் ஆங்கிலத்தில் actionscript பற்றி எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் பல இணையத்தளங்கள் இருக்கு. உங்கள் போன்ற இளைஞர்கள், குறிப்பாக இப்படியான இணையம் சார் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் – கற்றுத்தேர்ந்தவர்கள் – அவற்றை முடிந்தளவு தமிழில் அறியத் தந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். நானும் java – as – html – css – php போன்றவை பற்றி தமிழில் எழுதவேணும் எண்டு அடிக்கடி நினைப்பதுண்டு. நமது அன்றாட வேலைகளில் அவற்றுக்கான நேரம் ஒதுக்கமுடிவதில்லை. உங்கள் போன்றவர்கள் அதை செய்வார்கள் என்றால் மிகவும் வரவேற்கத்தக்கது. ஆங்ககிலப்பக்கத்தை இயக்கும் அதேநேரத்தில் தமிழிலும் இப்படியான முயற்சியை மேற்கொள்ளுவீர்கள் என நம்புகிறேன். மீண்டும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
– அருண்
யாழிலை இருந்து கலக்கிறியள், வாழ்த்துக்கள்
எதுக்கும் மின்சாரப் பெருமானுக்கும், இணையக்கடவுளுக்கும் பிரார்த்தனை செய்து அவை தொடர்ந்தும் கருணை காட்டவேண்டும் என்று வழிபடுவோமாக.