புளொக்கருக்கு ஒரு எழுதுகருவி

புளொக்கரில நாங்கள் ஏதாவது பதிவு போடும்போது அதிலுள்ள எடிட்டரையே பயன் படுத்துகின்றோம். ஆனால் அதிலுள்ள வசதிகள் எமக்கு சிலவேளைகளில் போதுமானவையாக இருப்பதில்லை. சாதாரமாக ஒரு வேர்ட் பாட் இல் இருக்கின்ற வசதிகள் கூட இந்த எடிட்டரில் இல்லை.

இதில் அட்டவணைகள் போன்றவற்றை சேர்க்க விரும்பினாலும் முடிவதில்லை. இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக வந்துள்ளதுதான் WriteToMyBlog.

இங்கேயே நீங்கள் உங்கள் பதிவுகளை எழுதி பப்ளிஸ் பண்ணி்க்கொள்ள முடியும். இதற்கு இது உங்கள் புளொக்கர் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கேட்கும். இதனால் நீங்கள் பாதுகாப்பு பிரச்சனை பற்றி கவலைப்படத்தேவையில்லை. ஏனென்றால் இந்த வலைத்தளம் அவற்றை சேமித்து வைப்பதில்லை. கீழே இதன் படத்தை பார்த்து இதன் வசதிகளை தெரிந்துகொள்ள முடியும்.

இதனைப்பயன்படுத்தி உருவாக்கிய பதிவொன்றினை கீழே பாருங்கள்.

13 மார்கழி, 2006

யாழிலிருந்து கிளம்பிடும் வீரம்

திராவிட முன்னேற்ற கழகம் சென்னையில் 13.03.1962 அன்று சுமார் ஐந்து இலட்சம் மக்கள் மத்தியில் நடாத்திய கண்டனக்கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சு.

கப்பற் படையும் தரைப்படையும் சென்றன! மாற்றாருடன் போர் தொடுக்கவா? அல்ல அல்ல. சொந்த மண்ணிலே உழைத்து அம்மண்ணிலேயே சாவோம் எனச் சங்கநாதம் செய்திடும் அண்ணன் தம்பிகளை ஒடுக்க. படை தடை எதனாலும் பயந்து விட முடைநாற்றம் வீசும் முட்டைக்கூட்டமல்ல நாங்கள். மூச்சடக்கி முத்தெடுத்த இனம். முழுமதியென உலெகெலாம் ஒளி வீசி நின்ற பரம்பரை. எங்களை அழிக்க ஆயுதங்களால் முடியாது. அன்பால் வென்றோருண்டே ஒழிய அதட்டலால் எம்மை மிரட்டியோர் அவனியிற் கிடையாது என முழக்கமிட்டனர். படைவீரர்கள் பாயந்தனர். எதிர்நோக்கி வந்து இதோ மார்பு என்று காட்டினர். கீழே தள்ளி உருட்டி “கேடு கெட்டவர்களே துப்பாக்கி முனையிலிருக்கும் கத்தி கிழிக்கும் உமது குடலை” என்றனர். இருதயத்தையே எடுக்கத் துணிந்து விட்ட இந்த அரசியலில் குடல் போனால் என்ன உடல் போனால் என்ன எதற்கும் துணிந்தே விட்டோம் எனக் கூவினர் மக்கள். படைவீரர்கள் இதென்னடா தொல்லை என நிமிர்ந்தனர். காலிகளும் கூலிகளுமாயிருந்தால் அவர்களை எளிதில் அடக்கிவிட முடியும். இவர்களோ நல்லதொரு காரியத்துக்காக மக்கள் மனை போனால் என்ன என்று பாடிக்கொண்டு வந்துவிட்ட அறப்போர் வீரர்கள். அடி உதை என்று அகிம்சை பிறழ்ந்த முறையில் ஏதாவது காரியங்களில் ஈடுபட்டாலும் அதைக்காரணமாகக் கொண்டு சுட்டுத்தள்ளலாம். துப்பாக்கியை காணும்போது கூட, சுடுசொல் கூறாமல் அன்புரையே தருகிறார்கள். என்ன செய்வது என்று யோசித்தது அரசு. யோசனையின் விளைவாக முரட்டு மூளையில் உதித்தது ஒரு குருட்டு எண்ணம். நம்மை நம்பி வாழும் இந்த மக்களுக்கு அரிசி கிடைக்காமற் செய்துவிட்டால்? சோறின்றி இவர்கள் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்? வயிறு வாடினால் எதுவும் வழிக்கு வந்துவிடுமன்றோ? இதனால் தானே அந்தக் காலத்தில் எதிரிகளை ஒடுக்க அவர்களுக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களை தடுத்து விடுவது ஒரு போர் முறையாகக் கருதப்பட்டது. ஆட்சி நம்முடைய கையில் அரிசி கிடைக்காமற் செய்துவிட்டால் பிறகு அறப்போராவது அட்டகாசப்போராவது. எல்லாம் அடங்கிவிடவேண்டியது தானே. சொந்த மண்ணில் வாழும் மக்கள் மீது இந்தப் பாணத்தை பாய்ச்சினர். மிக மிகக் கொடுமையான பாணம். கொடுங்கோலர் தம் மனத்தில் மட்டுமே உருவாக வேண்டிய பாணம். எத்தனை நாளைக்கு பட்டினி கிடக்க முடியும்? தானிருக்கலாம், தன் மனையாட்டியை இருக்கச் செய்யலாம், தாயிடம் கைகூப்பிக் கேட்டு பசியை அடக்கிக் கொள்ளச்சொல்லலாம், தான் பெற்ற மழலைச் செல்வங்கள் பசியால் துடிப்பதைப் பாதகன் கூடச் சகிக்க மாட்டானே? என்ன செய்வது, இந்தத் தடையை எப்படி நொறுக்குவது, என்று அறப்போர் வீரர்களல்ல நாட்டு மக்களே எண்ணினார்கள்.

அரசு அரிசி அனுப்பாவிடில் போகிறது. கழனிகளிலே நாங்கள் அறுத்தெடுத்த நெல்மணிக்கதிரை விற்றால் எமக்குப் பணந்தான் கிடைக்கும், மானத்துக்கு போரிடும் உம்மைவிடப் பணமோ எமக்குப் பெரிது? அஞ்சி அயராதீர்கள் – அரிசியை, நாங்கள் கொண்டுவந்து தருகின்றோம். இரயிலில் லாரியில் ஏற்றினால் தானே அரசு தடுக்கும். எங்கள் தலையில் முதுகில் சுமந்து வந்து தருகின்றோம், என்று முன்வந்தனர். அறப்போர் நடத்தும் மக்களை பழிவாங்க எண்ணிடும் அரசின் போக்கு கண்டு நாட்டுபுற மக்கள் பதறியது கேட்டு வணிகக் குடிமக்கள் கூடினர். அவர்கள் உள்ளமெலாம் மெழுகாகியது. இத்தனை நாளும் நாம் வாளாயிருந்தோமே? இதோ எமது உதவி எங்கெங்கு அரிசி கிடைக்குமோ அதையெல்லாம் வாங்கி நியாய விலைக்கு நாங்கள் தருகின

13 மார்கழி, 2006

ஊரோடி – புதிய பரிமாணம்.

புதுவருசமும் வரப்போகுது எல்லாரும் ஏதோ புதிசா முடிவுகள் இலட்சியங்கள் எல்லாம் எடுப்பினம். ஊரோடி மட்டும் அப்பிடியே பழசா இருந்தா நல்லாஇருக்காது எண்டு சொல்லி அதுக்கும் ஒரு புதுச்சட்டை போட்டிருக்குது. இவ்வளவு காலமும் புளொக்கர் தந்த அடைப்பலகையை பாவிச்சது இப்ப புதுசா ஒண்டு. இந்த அடைப்பலகை முற்றுமுழுதா CSS மற்றும் javascript இனை பாவிச்சிருக்கு. இதில இருக்கிற விசேசங்கள் என்னெண்டா.

1. தேடு பொறி – வழமையா புளொக்கில தேடோணுமெண்டா புளொக்கர் search இனை பாவிக்க வேணும். அதில இருக்கிற பிரச்சனை திருப்பி புளொக்குக்க வாறதுக்க சீவன் போயிரும். அத்தனை தரம் back button ஐ அமத்த வேணும். ஆனா இந்த தேடுபொறி அப்பிடியில்லை. கரையிலயே ஒரு பக்கமா முடிவுகளை காட்டும் தேவையில்லையெண்டா நிப்பாட்டிவிடலாம்.

2. பிரிவுகள் – ஒவ்வொரு பதிவையும் வகைப்படுத்தி இருக்கு. அந்த வகைப்படுத்தலை அழுத்தினா உடன அதில இருக்கிற பதிவுகள் எல்லாம் காட்டுப்படும். இது ஏற்கனவே புளொக்கர் பேற்றா பாவிக்கிற ஆக்களுக்கு தெரிஞ்சாலும் இதில இருக்கிற விசேசம் என்னெண்டா இது feeds ஐ பாவிக்குது. அதால வேகமா அது தெரியும். வேறொரு பக்கம் லோட் ஆகிற வேலையெல்லம் இங்க இல்ல. (ஆனா இதை இன்னமும் சரியா நான் முடிக்கல இரண்டு நாளில எல்லா பதிவையும் சேத்திருவன்)

3. பின்னூட்டபெட்டி – இதில ஒரு விசேசமும் இல்ல. இது cocomments பின்னூட்டப்பெட்டியை பாவிக்குது. பின்னூட்டங்களை தொடரா வாசிக்க வேணுமெண்டால் இது உதவி செய்யும்.

4. புளொக்கர் Nav bar – இதில மேல இருந்த புளொக்கர் கருவிப்பட்டையை எடுத்துப்போட்டு அந்த கோப்புகளையே பயன்படுத்தி கீழ எனக்கெண்டு ஒரு கருவிப்பட்டை போட்டிருக்கிறன்.

5. படவேலைப்பாடு – இந்த அடைப்பலகையில ஒரு படமும் பயன்படுத்தப்படேல்ல. எல்லாம் CSS ஐத்தான் பயன்படுத்தியிருக்கு. வேகமா பக்கம் லோட் ஆகும்.

6. பின்னூட்டங்கள் – இந்த அடைப்பலகையில ஒரு பதிவின்ர பின்னூட்டத்தை பாக்க அந்த பதிவை தனியா எடுத்து வாசிக்கோணுமெண்டெல்லாம் இல்லை. பின்னூட்டங்கள் எண்ட லிங்கை அமத்தினா போதும் கீழு தானே வந்திரும் (பின்னூட்டங்கள் இருந்தா மட்டும்).

தொடுப்புகள் இன்னும் சேர்க்கேல்ல. நாளைக்கு அல்லது நாளைக்கு மறுநாளைக்குள்ள சேர்த்திருவன்.

இன்னும் சில வசதிகளை சேக்க இருக்கிறன்.

எல்லாத்தை விட முக்கியமான விசயம் என்னெண்டா இது நெருப்புநரி 2.0, internet explorer 7.0, Opera 9.0 க்குத்தான் வடிவா வேலை செய்யும். மற்ற உலாவிகளுக்கும் வேலைசெய்தாலும் சில வசதிகள் வேலை செய்யாது.

மிகமிக முக்கியமான விசயம் என்னெண்டா இது மொத்தமும் நான் உருவாக்கினதில்லை. அங்கங்க தூக்கி ஒண்டாக்கி சின்ன சின்ன மாற்றம் செய்தது. ஊரோடி மைதானத்தில 10 நாளா போட்டு சரியா வேலைசெய்யுதோ எண்டு பாத்து பாத்து திருத்தினது. இன்னும் பிழை இருக்கும் குறையா நினைக்காதங்கோ.

தயவுசெய்து இது சம்பந்தமான உங்கட பின்னூட்டங்கள தாங்கோ. திருத்திறதுக்கு உதவியா இருக்கும்.

12 மார்கழி, 2006