ஊரோடி மைதானம்

கொஞ்சக்காலமா ஊரோடி எண்ட பெயரில விசயம் இருக்கோ இல்லையோ ஏதோ அலட்டிக்கொண்டிருக்கிறன். இப்ப புதுசா ஒரு ஆசை வந்து செய்யத்தொடங்கியிருக்கிறது தான் இந்த ஊரோடி மைதானம். இந்த புளொக்கர் எஞ்சின் (Back end) இல என்னவிதமா நாங்கள் ஏதாவுது மாற்றங்கள் செய்யலாம், அல்லது front end இல எனக்கு (ஓரளவுக்கு) தெரிஞ்ச ஜாவா(Java), அக்சன்ஸகிரிப்ட்(AS 2), பிளெக்ஸ்(flex), php இதுகளை வச்ச என்னென்ன மாறுதல்கள் செய்யலாம். புதுசா ஏதாவது செய்தா சரியா வேலை செய்யுதா எண்டு பாக்கிற விளையாட்டு மைதானம் தான் இது. அதவிட ஏதோ புளொக்கர் அபி எண்டு அதையும் ஒரு ஆசையில எடுத்து படிக்கத் தொடங்கி இருக்கிறன். எங்க போய் முடியுதோ தெரியேல்ல. இதையெல்லாம்
ஊரோடியிலயே செய்து பாக்கலாம்தான் ஏதாவது பிசகிபோன என்ன செய்யிறது எண்ட பயத்திலதான் புதுசா ஒரு இடம். இருந்தாலும் இப்ப எங்கட இடத்தில இருக்கிற இணையத்தின்ர வேகத்திலயும் இணையம் பாவிக்ககூடிய நேரத்திலும் இதை தொடங்கியிருக்கிறன். ஏதோ ஒரு துணிவுதான். இத தமிழ்மணத்தில இணைக்கிற பிளான் ஒண்டும் இல்லை. எனக்கு இதில உதவி செய்யிறன் எண்டொருபெடியள் சொல்லியிருக்கிறாங்கள். பாப்பம் ஏதாவது பிரியோசனம் வருகுதோ எண்டு (பிரியோசனம் வராட்டியும் பிரச்சனை வராட்டி சரிதான்).

http://oorodiground.blogspot.com

7 மார்கழி, 2006

யாழ்ப்பாணம் பாக்கலாம்

இப்ப பாதைகளும் மூடினா பிறகு கொழும்பில இருக்கிற ஆக்களோ ஏன் வவுனியாவில இருந்து கூட யாழ்ப்பாணம் வந்து பாக்கேலாம ஆக்கள் இருக்கினம். வெளிநாட்டில இருந்து வாற ஆக்களும் இல்லாமப்போச்சு. அவயளுக்கு மட்டும் யாழ்ப்பாணத்தை பாக்கிற ஆசை இல்லாம இருக்குமே. அதுதான் படு கடுமையா யோசிச்சு யாழ்ப்பாணத்தை என்னென்ண்டாவது காட்டிறது எண்டு முடிவெடுத்திட்டன். இது மாதிரி வடமராட்சி தென்மராட்சி எண்டு பிரிச்சு பிரிச்சு காட்டிறதெண்டும் முடிவெடுத்திறக்கிறன் சரியா.

கீழ வடிவா யாழ்ப்பாணத்தை பாத்திட்டு அப்பிடியே நன்றி சொல்லி ஒரு பின்னூட்டத்தையும் போட்டு விடுங்கோ.

6 மார்கழி, 2006

புளொக்கர் – சில வித்தைகள் -1

சில புளொக்கர் தளங்களுக்கு செல்லும் போது மேலிருக்கும் புளொக்கர் பட்டை (Nav bar) காணாமல் போயிருப்பதை அவதானித்திருக்கின்றேன். (உதாரணம் – வவாசங்கம்) இது சம்பந்தமாக வலையில் தேடி பெற்றதை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.

உங்கள் வலைப்பதிவின் மேல் உள்ள பட்டையை நீக்க வேண்டுமாயின் கீழிருக்கும் வரிகளை மற்றும் இடையில் எங்கு வேண்டுமானாலும் சேர்த்து விடுங்கள் அவ்வளவுதான்.

புளொக்கர் பயனாளர்கள்

#b-navbar {
height: 0px;
visibility: hidden;
display: none;
}

புளொக்கர் பேற்றா பயனாளர்கள்

#navbar-iframe {
height: 0px;
visibility: hidden;
display: none;
}

இதை பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

4 மார்கழி, 2006