அட…………..

இந்த வியக்க வைக்கும்படியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்களுக்கு சிலவேளைகளில் புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தை தூண்டக்கூடும். வந்து பாருங்கள்.





19 ஆனி, 2007

YouTube in Mobile

இனிமேல் நீங்கள் தினமும் சென்று பார்க்கும் Youtube தளத்தினை உங்கள் கைப்பேசியிலேயே கண்டு களிக்கலாம். அத்தோடு உங்களுக்கு விரும்பிய வீடியோக்களை 3g வடிவில் தரவிறக்கியும் கொள்ளளலாம். முகவரி : http://m.youtube.com

உடனே அவசரப்பட்டு செல்லாமல் உங்கள் data plan இனை unlimited ஆக மாற்றி விட்டு செல்லுங்கள் இல்லையேல் வீட்டை விற்றுத்தான் கைப்பேசி பில் கட்ட வேண்டி வரும். இதனை அவர்களே அவர்களது முற்பக்கத்தில் சொல்கின்றார்கள்.

17 ஆனி, 2007

சிறுத்தை களத்தில்

மிக நீண்ட காலமாக (ஏறத்தாள ஒரு வருடம்) எதிர்பார்த்திருந்த சிறுத்தை இப்பொழுது களத்திற்கு வந்துள்ளது. அப்பிள் நிறுவனம் தனது இயங்கு தளத்தின் பிரதான பதிப்பான Mac OSX 10.5 இனை வெளியிட்டுள்ளதோடு அதற்கு ஏற்றாற்போல் தனது இணையத்தளத்தினையும் மீள் வடிவமைப்பு செய்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் அப்பிள் இணைத்தளத்திற்கு சென்று மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

16 ஆனி, 2007