Google Talk

கடந்த ஐந்து மாதங்களாக எந்த விதமான மேம்படுத்தல்களும், மேம்படுத்தல் அறிவித்தல்களும் இல்லாமல் இருந்து Google Talk இப்போது பெரிய ஒரு மாறுதலுக்கு உள்ளாக இருக்கின்றது. இதன் மூலம் Google Talk இலிருந்து சாதாரண ஒரு தொலைபேசியுடனும் பேச முடியும். இவ்வசதி விரைவிலேயே பொதுமக்களின் பாவனைக்கு வர உள்ளது.

22 வைகாசி, 2007

Windows Live Folders – beta

மைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது புதிய சேவையான Windows Live Folders இனை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இது கூகிளிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Gdrive எனும் சேவையினை ஒத்தது. இப்போது இது இலவசமாக 250mb இட அளவை கொடுத்தாலும் பின்னர் இது அதிகரிக்கப்படும் என்று மைக்ரோசொவ்ற் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

இது எமது கோப்புகளை சேமித்து வைக்க ஒரு சிறந்த தீர்வாக அமையக்கூடும். கீழே படங்களை பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகும் என்று நான் சொல்லத் வேண்டியதில்லை)



15 வைகாசி, 2007

கூகிள் விளம்பரம் அச்சில்.

கூகிள் தனது Adword உடன் Google Print இனை ஒன்று சேர்த்திருக்கின்றது. இதன்மூலம் இலகுவாக செய்தித்தாள்களில் கூகிள் ஊடாக விளம்பரம் செய்ய முடியும். விளம்பரப்படுத்துபவர்கள் தங்களின் விளம்பரங்களை கொடுக்கும் போது

  • எந்நாள்களுக்கிடையில் விளம்பரம் வரவேண்டும்?
  • ஒவ்வொரு கிழமையும் எவ்வளவு பணம் செலவழிக்க விரும்புகின்றீர்கள்?
  • எந்த பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த விரும்புகின்றீர்கள்?

என்பவற்றை கொடுத்தால் போதும் மீதியை கூகிள் பார்த்துக்கொள்ளும். கீழே சில திரைவெட்டுகளை பாருங்கள்.



9 வைகாசி, 2007