நாங்கள் மறந்த தமிழும் iOS 5 உம்

ஏறத்தாள ஒரு வருட காலமாக உருவாக்கப்பட்டு வந்த அப்பிள் நிறுவனத்தின் கைப்பேசி இயங்குதளத்தின் ஐந்தாவது பதிப்பு சில நாட்களின் முன்னர் வௌியிடப்பட்டது. மேம்படுத்தி சில நாட்களே பயன்படுத்தி வந்தாலும், என்னை கவர்ந்த சில வசதிகளை இங்கே வரிசைப்படுத்தி உள்ளேன்.

1. தமிழ் இன்னும் அதிகமாய்
தமிழ் விசைப்பலகையோ அல்லது பயனர் முகப்போ பூரணமாக இன்னமும் iOS இல் இன்னமும் இல்லையாயினும், Regional settings இல் இலங்கை அல்லது இந்திய தமிழை தேர்ந்தெடுத்தால் இலக்கங்கள் மற்றும் திகதிகள் அனைத்தும் தமிழிற்கு மாறிவிடும். சாதாரணமாக அல்ல, நாங்கள் பொதுவாய் மறந்து போன தமிழ் இலக்கங்களுக்கு மாறிவிடும். (நீங்கள் அப்பிள் கணினி பாவனையாளர் எனின், இங்கே இருக்கும் எனது விசைப்பலகையை தரவிறிக்கி கொண்டால் உங்களால் தமிழ் இலக்கங்களை இலகுவாய் தட்டச்சிட முடியம்.)

2. கம்பியில்லா sync மற்றும், sync செய்யப்படும்போதே பயன்படுத்த முடிதல்.

3. iMessage
iOS5 நிறுவப்பட்டுள்ள iPhone, iPod மற்றும் iPad இடையே இலவசமாக குறுஞ்செய்திகள் அனுப்ப முடிதல்.

4. News stand
உங்கள் சஞ்சிகைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இலகுவாய் வாங்கவும் வாசிக்கவும் முடிதல்.

5. iCloud
5GB இலவச இடவசதி மற்றும் உங்கள் தகவல்கள் அனைத்தையும் Backup செய்துகொள்ள முடிதல்.

6. Notification
முன்னைய பதிப்புக்களை போலல்லாது எப்போதும் சென்று பார்த்துக்கொள்ளக்கூடியதான ஒரு பொதுவான Notification இடம்.

23 ஐப்பசி, 2011

buddypress 1.5, bbpress 2.0 வெளியானது

Buddypress 1.5

buddypress என்பது வேஸ்புக் போன்ற ஒரு சமூக இணையத்தளத்தை இலகுவாக உருவாக்கிக்கொள்ள உதவும் ஒரு இணைய மென்பொருள் ஆகும். வேர்ட்பிரஸின் ஒரு செருகியாக இருக்கும் இது நீண்டகாலமாக பதிப்பு 1.2 இலிருந்துவந்து இப்போது புதிய பதிப்பான 1.5 வௌியிடப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க புதிய வசதிகள்

1. வேர்ட்பிரசுடன் சிறந்த ஒத்திசைவு மற்றும் இலகுவாக நிறுவிக்கொள்ளல். (trunk பதிப்பு 1.3 இனை பயன்படுத்தியவர்களுக்கு இது புதிதல்ல)
2. புதிய வார்ப்புரு – மிக அழகானதொரு புதிய வார்ப்புரு. இப்போது இலகுவாக கிடைக்கும் படிபிரஸ் வார்ப்புருக்கள் எல்லாவற்றையும் விட சிறந்தது என்று சொல்லலாம்.
3. மிக இலகுாவன profile field UI.
4. மீள வடிவமைக்கப்பட்ட Activity stream.
5. Photo Gallery மற்றும் புகைப்படங்களை சுவரில் தரவேற்ற முடிதல்.

இவற்றை விட நூற்றுக்கணக்கான பிழைகளும் இப்பதிப்பில் திருத்தப்பெற்றுள்ளன.

bbPress 2.0

bbPress என்பது உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் ஒரு மன்றம் (forum) ஒன்றினை இலகுவாக உருவாக்கிக்கொள்ள உதவும் ஒரு செருகி. பதிப்பு 2.0 இற்கு முன்னர் இது ஒரு செருகியாக இல்லாமல் தனித்தியங்கும் ஒரு மென்பொருளாகவே இருந்தது.

இப்பொழுது இது ஒரு செருகியாக மாற்றம் பெற்றிருப்பதால், மிக இலகுவாக வேர்ட்பிரஸுடன் இணைத்துக்கொள்ள முடியும்.

படிபிரஸ் மற்றும் பிபிபிரஸ் தொடர்பாக உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருப்பின் இங்கு வாருங்கள்.

24 புரட்டாதி, 2011

Coding ஏதும் செய்யாமல் இணையத்தளம் உருவாக்க Adobe Muse

இணையத்தளங்கள் உருவாக்குவதற்கான மிகப்பிரபலமான பல மென்பொருள்களை உருவாக்கி வருகின்ற அடொபி நிறுவனம் தனது புதிய மென்பொருளான Muse இனை அறிமுகப்படுத்தியுள்ளது. Muse என்பது இதன் தற்போதய பெயர் என்பதோடு இம்மென்பொருள் பதிப்பு ஒன்றினை அடையும்போது அதற்கான பெயர் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Adoeb Muse இணை பயன்படுத்துவதன்மூலம் எவ்விதமான Coding உம் எழுதாமல் ஒருவரால் மிக இலகுவாக ஒரு இணையத்தளம் ஒன்றினை உருவாக்கிவிட முடியும். உங்களுக்கு தேவையான html மற்றும் css கோப்புக்களை இம்மென்பொருள் எழுதித்தருவதோடு jQuery போன்ற javascript framework குகளையும் தனாகவே தேவைக்கேற்ப இணைத்துக்கொள்ளும். மேலதிக வசதிகள் தொடர்பாய் அறிந்து கொள்ள இங்கே பாருங்கள்.

இம்மென்பொருள் அடொபி AIR தொழிநுட்பத்தினை பயன்படுத்தி இயங்கினாலும் லினிக்ஸ் கணினிகளில் இயங்காது.

தரவிறக்கிக்கொள்ளவும், பயன்படுத்திப்பார்க்கவும் இங்கே வாருங்கள்.

16 ஆவணி, 2011