புதிய வடிவம் புதிய வசதிகள்

வேர்ட்பிரஸ் பதிப்பு 3.1 வெளிவந்ததில் இருந்து ஊரோடியின் வடிவமைப்பை புதிய வசதிகளை உள்ளடக்கி மாற்றுவதற்கு எண்ணயிருந்தேன். நீண்ட காலங்களின் பின்னர் இப்போதுதான் முடிந்திருக்கின்றது.

வேர்ட்பிரஸில் இருக்கும் “இடுகை வகைகள்” என்கின்ற வசதி இவ்வார்ப்புருவில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் tumblr போன்ற பதிவு வகைகளை உருவாக்க முடிவதுடன் அவற்றை சிறிது வித்தியாசமாக வடிவமைப்பும் செய்ய முடிந்துள்ளது.

இதன் மூலம் எனக்கு பிடித்த புகைப்படங்கள் தொடுப்புக்கள் என்பவற்றையும் இலகுவாக இனவருங்காலங்களில் பதிய முடியும் என எண்ணுகின்றேன்.

இப்புதிய வடிவமைப்பு தொடர்பான உங்கள் கருத்தக்களை சொல்லுங்கள்..

18 தை, 2012

வேர்ட்பிரஸ் தமிழ் மொழியில்

வேர்ட்பிரஸ் ஆனது இலவசமான திறமூல நிரலையுடைய, இணையத்தளங்களை இலகுவாக உருவாக்கிக்கொள்ள உதவும் ஒரு மென்பொருளாகும். வலைப்பதிவு எழுதுபவர்கள் தங்களது சொந்த தளத்தில் வலைப்பதிவை வைத்திருக்க விரும்பின் அதற்கான சிறப்பான மென்பொருள் இது மட்டும்தான். (ஊரோடி வலைப்பதிவும் வேர்ட்பிரஸினையே பயன்படுத்துகின்றது.)

கடந்த தை மாதத்தில் வேர்ட்பிரஸினை தமிழ்ப்படுத்துவது என்ற முயற்சியை ஆரம்பித்து சிறிது சிறிதாக மொழிமாற்றம் செய்து வந்தேன். இடைக்கிடையே வேர்ட்பிரஸில் ஆர்வம் உள்ள பலரும் பங்களித்து வந்தார்கள்.

ஏறத்தாள ஒரு வருடமாகிய நிலையில் இப்போது வேர்ட்பிரஸின் 3.3 தமிழப்பதிப்போடு சேர்ந்து வெளிவந்துள்ளது. நீங்களும் தமிழ்ப்பதிப்பை தரவிறக்கி நிறுவிக்கொள்ள http://ta-lk.wordpress.org க்கு வாருங்கள்.

நீங்களும் உங்கள் ஓய்வு நேரத்தில் மொழிமாற்றத்தில் பங்களிக்க விரும்பின் இங்கே வாருங்கள்.

28 மார்கழி, 2011

Ruby கற்றுக்கொள்ளலாம் வாங்க

சில நாட்களின் முன்னர் இலகுவாக ஜாவாஸ்கிரிப்ட்டினை இன்ரரக்ரிவாக கற்றுக்கொள்ள உதவும் codecademy பற்றி ஒரு சிறிய பதிவிட்டிருந்தேன்.

அதேபோல Ruby மொழியினை கற்றுக்கொள்ள உதவும் ஒரு இடம்தான் RubyMonk.com. மிகவும் பிரபலமான கணினி மொழிகளில் ஒன்றான Ruby கற்றுக்கொள்ளுவதற்கு இலகுவானது. அதனை இன்னமும் இலகுவாக்குகின்றது இவ்விணையத்தளம். இது இப்போது அல்பா பதிப்பில் இருந்தாலும், ஏலவே 37 பயிற்சிகள் இணைக்கப்பட்டுவிட்டன.

Ruby மொழியை கற்றுக்கொள்ள நினைக்கின்றவர்கள் கட்டாயம் இவ்விணையத்தளத்தை பாருங்கள்.

3 கார்த்திகை, 2011