சில சுவாரசியமான திறமூல இணைய மென்பொருள்கள்

நாங்கள் சாதாரணமாக கேள்விப்படுகின்ற இணைய மென்பொருள்கள் ஜும்லா, டுருபல், வேர்ட்பிரஸ் என்பன. இவை பொதுவாக எங்கள் இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள பயன்படும். ஆனால் இவற்றைவிட பல விதமான தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய பல சுவாரசியமான திறமூல இணைய மென்பொருள்கள் இருக்கின்றன. இவற்றை நாமும் எங்கள் வழங்கிகளில் நிறுவி பயன்படுத்த முடியும். இவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். உங்களுக்கு தெரிந்தவற்றை நீங்களும் பின்னூட்டங்களில் சொல்ல முடியும்.

1. Simple Invoices
இதனை நீங்கள் உங்கள் வழங்கியில் நிறுவிக்கொண்டால் இலகுவாக இணையத்திலிருந்தே தேவையானவர்களுக்கு சிட்டைகளை அனுப்பிக்கொள்ள முடியும்.

2. Orange HRM
இது சாதாரணமான ஒருவருக்கு பயன்படாவிட்டாலும், ஒரு நிறுவனம் தனது மனிதவளங்களை முகாமை செய்வதற்கு பெருமளவில் பயன்படும். இது ஒரு பூரணமான மிகச்சிறந்த மனிதவள முகாமைத்துவ இணைய மென்பொருளாகும்.

3. Lime Survey
நீங்கள் இணையமூடாக ஒரு கணக்கெடுப்பை நடாத்த இருந்தால் உங்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய மென்பொருள் இது. கணக்கெடுப்புக்களை நடாத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட திறமூல மென்பொருளாகையால் அதற்கான எல்லா வசதிகளும் இங்கு நிறைந்திருக்கின்றன.

4. Gloss Word
இணையத்திலிருந்து இயங்கக்கூடிய அகராதியொன்றை உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஒரு திறமூல இணைய மென்பொருள் இதுவாகும். இதனை உங்கள் வழங்கியில் நிறுவிக்கொள்ளுவதன்மூலம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு அகராதியை நீங்கள் இலகுவாக உருவாக்கிவிட முடியும்.

5. Bug Genie
நீங்கள் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளராகவோ அல்லது ஒரு குழுவாக கணினியில் பணிபுரபவராகவோ இருந்தால் இது உங்களுக்கு மிகவும் பயன்படும். பிரச்சனைகளை கண்காணித்துக்கொள்ளவும், திட்ட மேலாண்மை செய்யவும் இது ஒரு சிறந்த திறமூல மென்பொருள்.

25 ஆடி, 2011

அப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை

சாதாரணமாக அப்பிள் கணினிகளில் தமிழில் உள்ளீடு செய்ய தமிழ்99 மற்றும் அஞ்சல் எழுத்துரு வடிவமைப்பு முறைகளே காணப்படும். நான் அவை இரண்டையுமே பயன்படுத்துவதில்லையாகையால் அப்பிள் கணினி வாங்கிய புதிதில் (2007இன் ஆரம்பத்தில்) எனக்கென பாமினி முறையில் யுனிக்கோட் உள்ளிடுவதற்கான விசைப்பலகை ஒன்றினை உருவாக்கி வைத்திருந்தேன். ஆனால் அது பல வழிகளில் ஒரு பூரணப்படுத்தப்படாததாகவே இருந்து வந்தது.

நீண்ட காலத்தின் பின்னர் இப்பொழுது அதனை மேம்படுத்தி அனைவரும் பயன்படுத்துமளவிற்கு பூரணப்படுத்தியுள்ளேன். நீங்களும் கீழுள்ள தொடுப்பில் சொடுக்கி தரவிறக்கி நிறுவிக்கொள்ள முடியும்.

குறிப்பிடத்தக்க விடயங்கள்

ஸ்ரீ (S+R U+0BB8 U+0BCD U+0BB0) இற்கு பதிலாக சரியான ஶ்ரீ (SH+R U+0BB6 U+0BCD U+0BB0) பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கங்கள்
தமிழ் இலக்கங்கள் CABS உடன் சேர்த்து எண் விசைகளை சொடுக்கும்போது வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரணமாக இலக்கங்களும் SHIFT உடன் நெடில் எழுத்துக்களும் உள்ளிடப்படுவது மாற்றமின்றி உள்ளது.) அதிக இலக்கங்கள் காரணமாக சைபர் ஆனது ஒன்றிற்கு முன்னும், சைபர் இடத்தில் பத்தும், கழித்தல் அடையாளம் வருமிடத்தில் நூறும், சமன் அடையாளம் வருமிடத்தில் ஆயிரமும் வைக்கப்பட்டுள்ளன.

சைபர் – – CABS+`
ஒன்று – – CABS+1
இரண்டு – – CABS+2
மூன்று – – CABS+3
நான்கு – – CABS+4
ஐந்து – – CABS+5
ஆறு – – CABS+6
ஏழு – – CABS+7
எட்டு – – CABS+8
ஒன்பது – -CABS+9
பத்து – – CABS+0
நூறு – – CABS+-
ஆயிரம் – – CABS+=

தமிழ் குறியீடுகள்
தமிழிலுள்ள அனைத்து குறியீடுகளும் இன்னமும் சேர்க்கப்படவில்லையாயினும் – நாள், மாதம், வருடம், செலவு, வரவு, மேற்படி, ரூபாய், இலக்கக் குறியீடு மற்றும் நீளக் குறியீடு என்பன சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் CAPS உடன் Q இல் தொடங்கி உள்ளன.

௳ ௴ ௵ ௗ ௶ ௷ ௸ ௹ ௺

நிறுவுதல்

தரவிறக்கிக்கொண்ட ஸிப் கோப்புறையினுள் இருக்கும் இரண்டு கோப்புகளையும் ~/Library/Keyboard Layouts இனுள் பிரதிசெய்து சேர்த்துவிடுங்கள். இப்பொழுது System Preferences–>international இல் இவ்விசைப்பலகையை தேர்வுசெய்து கொள்ள முடியும். சிலவேளைகளில் உங்கள் கணினியை மீள இயக்க வேண்டி இருக்கும்.

மேம்படுத்தல்

கீழே பின்னூட்டத்தில் அமலன் கேட்டவாறு விசைப்பலகை இப்போது சுருக்க விசைகள் வேலை செய்யக்கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இதனை முன்னரே நிறுவியிருந்தால் மீளவும் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

தரவிறக்கம்

கீழே சொடுக்கி விசைப்பலகையினை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

Bamini Keyboard Layout (76)

பயனுள்ளதெனி்ன் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

1 ஆடி, 2011

புத்தகக்குறிகளுக்கு xmarks

நான் பகுதிநேரமாக ஒரு இணையத்தள வடிவமைக்கும் பணி செய்து வருவதனால் தினமும் பல இணைய உலாவிகளை பயன்படுத்துவது வழமை. எனக்கு தேவையான ஏதாவது விடயத்தை இணையத்தில் கண்டால் எனது கை தனாகவே அதனை புத்தகக்குறிகளுக்குள் சேர்த்துவிடும். இதனால் ஒவ்வொரு இணைய உலாவியிலும் வேறு வேறு பல புத்தகக்குறிகள் இருக்கும். ஏதாவது ஒரு சேர்த்துவைத்த புத்தக்குறியை தேட ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கும். எல்லா இணைய உலாவிகளையும் திறந்து தேடவேண்டிய தேவை ஏற்படுவதோடு தேவையற்ற நேரவிரயமும் உண்டு.

இதற்கு தீர்வாக கிடைத்த மென்பொருள்தான் xmarks. இதனை உங்கள் அனைத்து இணைய உலாவிகளிலும் நிறுவி பயன்படுத்துவதன் மூலம் அனைத்து உலாவிகளிலும் ஒரே புத்தகக்குறிகளை கொண்டுவந்து விட முடியும்.

புத்தக்குறி – Bookmark

அத்தோடு உங்கள் புத்தகக்குறிகள் இணையத்திலும் பாதுகாப்பாக சேமிக்கப்படுவதால், நீங்கள் உங்கள் கணினியன்றி வேறு கணினிகளிலும் உங்கள் பயனர் கணக்கூடாக புத்தக்குறிகளை அணுகமுடியும்.

மேலும் விபரங்களுக்கு இங்கே வாருங்கள்.

25 ஆனி, 2011

கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பான்

கூகிள் நிறுவனத்தின் இலவச சேவைகளில் மிகவும் பயனுள்ளதான ஒரு சேவை மொழிபெயர்ப்பு சேவை ஆகும். வேறு மொழிகளில் உள்ள பதிவுகளை ஆங்கிலத்தில் மாற்றி பயன்படுத்த நான் அடிக்கடி இச்சேவையை பயன்படுத்துவதுண்டு. இன்று கூகிள் மேலதிகமான ஐந்து மொழிகளை அங்கு இணைத்துள்ளது. இவற்றுள் தமிழும் ஒன்று. இனிமேல் உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று சொல்லாமல் எந்ந ஒரு மொழியில் இருக்கும் இணையத்தளத்தையும் தமிழில் வாசித்து மகிழ முடியும். மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்லுங்கள்.

22 ஆனி, 2011

படக்கதை வாசிப்பவர்களுக்கு Graphic.ly

நீங்கள் ஒரு படக்கதை வாசிப்பவராக இருந்தால் நீங்கள் கட்டாயம் பார்கக்வேண்டிய தளம் graphic.ly. இசைக்கு itunes போல படக்கதைகளுக்கு graphic.ly என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிறைந்திருக்கின்றன படக்கதைகள். ஒரு சொடுக்கில் படக்கதைகளை வாங்கிக்கொண்டு வாசிக்கத்தொடங்க வேண்டியதுதான். நூற்றுக்கணக்கான இலவச கொமிக்ஸ்களும் உங்களுக்காக அங்கே இருக்கின்றன.

இங்கே குறிப்பிட்டு சொல்லக்கூடிய வசதிகள்
1. சிறப்பாக வாசிக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்ட மென்பொருள்கள்.
2. எந்தக்கணினியிலும், இணைய உலாவியிலும் கூட வாசிக்கலாம்.
3. மற்றவர்களுக்கு நீங்கள் வாங்கியவற்றை இரவல் கொடுக்கலாம். (நான் வாங்கியுள்ளவைகளை பின்னர் தருகின்றேன் விரும்பியவர்கள் கேளுங்கள் இரவல் தருகின்றேன்.)
4. உங்கள் சமூக இணையத்தளங்ளுடன் இணைத்துக்கொண்டு உங்கள் கருத்துக்களை சொல்லலாம்.

தாமதிக்காது சென்று பாருங்கள்.

21 மாசி, 2011