மென்பொருள்

GoLive இனை நிறுத்தியது அடொப்

அடொப்நிறுவனம் தனது இணைய வடிவமைப்பு மென்பொருளான Adobe GoLive இன் மேம்பாட்டினையும் விற்பனையையும் 28.04.2008 இல் இருந்து பூரணமாக நிறுத்தியுள்ளது. தனது Adobe Dreamweaver மென்பொருளில் பூரண கவனத்தினை செலுத்துவதற்காகவே இந்த முடிவினை எடுத்துள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தோடு GoLive பயனாளர்கள் Dreamweaver இற்கு மாறிக்கொள்ளுவதற்கு சலுகை விலையில் அம்மென்பொருளை வழங்கவும் முன்வந்துள்ளது.



அடொப் நிறுவனம் மக்ரோமீடியா நிறுவனத்தை வாங்க முன்னர், GoLive மட்டுமே அவர்களது இணைய வடிவமைப்பு மென்பொருளாக இருந்தது.

16 வைகாசி, 2008

Windows, Mac ஒரு ஒப்பீடு படமாய்..

இந்த ஒப்பீடு சில காலத்துக்கு முன்னர் Gizmodo இணையத்தில் எடுத்தது. பார்க்காதவர்களுக்காக இங்கேயும்..




7 வைகாசி, 2008

Adobe Photoshop Express

அடொப் நிறுவனம் ஏறத்தாள ஒரு வருட காலமாக சொல்லி வந்த Adobe Photoshop Express இனை பீற்றா பதிப்பாக வெளியிட்டுள்ளது. இது எந்த ஒரு பிளாஸ் Plugin உள்ள இணைய உலாவியிலும் செயற்படக்கூடியது. இதன்மூலம் இணையத்திலிருந்த படியே எங்களது புகைப்படங்களை மேம்படுத்தி சேமித்து வைத்துக்கொள்ளுவதோடு அதனை இலகுவாக மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ள முடியும். அத்தோடு அடொப் நிறுவனம் இலவசமாக இரண்டு Gb இட அளவினையும் இதற்காக வளங்குகின்றது.

இங்க சொடுக்கி போய் பாருங்க.

29 பங்குனி, 2008