மென்பொருள்

Graphs in Google Spreadsheet

சில நாட்கள் இணைய இணைப்பு சரியான பிரச்சனையா இருந்து இப்ப திருப்பவும் ஓரளவுக்கு சரியாகிட்டுது. சரி விசயத்துக்கு வருவம்.

கூகிள் நிறுவனம் தனது spreadsheet இல் graph களை உருவாக்கக்கூடிய வசதிகளை சிலநாட்களுக்கு முன்னர் ஏற்படுத்தி இருக்கின்றது. சென்று பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக இட்டுவிடுங்கள்.

கீழே சில திரைவெட்டுகளை (என்னுடையதல்ல) பாருங்கள்.



25 சித்திரை, 2007

யாகூ மின்னஞ்சல் அரட்டையுடன்

மாசி 2006 இல் கூகிள் நிறுவனம் இலகுவான, இணைய உலாவியினுள்ளேய
பயன்படுத்தக்கூடிய தனது Gmail chat இனை அறிமுகப்படுத்தியது. இப்போது 2007 மாசியில் யாகூ தனது அரட்டை மென்பொருளை Yahoo Mail Beta உடன் இணைத்திருக்கின்றது.

அனேகாமாக இன்னும் சில தினங்களில் இது அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக வந்து விடும். இதன் மூலம் தனது அரட்டை மென்பொருளின் பயனாளர்களின் எண்ணிக்கையை (தற்போது 73 மில்லியன், யாகூ மின்னஞ்சல் 250 மில்லியன்) அதிகரிக்க முடியும் என யாகூ நம்புகின்றது.

அது சரி Yahoo Mail Beta என்றால் என்ன? யாகூ சொல்கின்றது

The Yahoo! Mail beta is a true Web 2.0 experience, including a sleek, easy-to-use interface with the speed and responsiveness of a desktop application. In addition to instant messaging, the Yahoo! Mail beta also features enhanced functionality such as drag and drop e-mail organization, message preview, an integrated calendar and an RSS reader.

16 மாசி, 2007

Microsoft Office 2008

Mac இயங்குதள பாவனையாளர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த செய்தியொன்றை மைக்ரோசொவ்ற் நிறுவனம் கடந்த 9ம் திகதி Macworld conference இல் வெளியிட்டது. புதிய Mac இயங்குளத்திற்கான office பதிப்பு Office 2008 என்ற பெயரில் 2007 இன் இரண்டாம் பாதியில் வெளியிடப்பட உள்ளது. இது PowerPC மற்றும் Intel based Macs இரண்டிலும் இயங்கக்கூடியதாக இருக்கும்.

இந்த பதிப்பு பயனாளர்களின் தேவைகளை இலகுவாக்கக்கூடியதாக பல புதிய கருவிகளை கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த Mac பதிப்பு கொண்டிருக்கப்போகும் சில வசதிகள். (இவ்வசதிகள் Windows பதிப்பில் உள்ளடக்கப்படடிவில்லை)

Publishing Layout View – இது பயனாளர்களை newsletters, filers போன்றவற்றை இலகுவாக உருவாக்க உதவும்

Ledger sheet – எந்த ஒரு பயனாளரையும் இலகுவாக Excel இல் கணக்குகளை கையாள இது உதவும்.

My day – இது ஒரு தன்னிச்சையாக இயங்கும் மென்பொருள் போல இயங்கும். அத்தோடு ஒரு நாட்காட்டி போல பயனாளர்கள் தங்கள் தினசரி வேலைகளை குறித்து செயலாற்ற உதவும். இதற்கு Desktop இல் அதிக இடம் தேவையில்லை.

இதைவிட இது Mac இயங்குதளத்துடன் வேறெப்போதையும் விட மிகுந்த ஒத்திசைவை காட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

13 தை, 2007