மென்பொருள்

பயனுள்ள சில திறமூல மென்பொருள்கள்

1. Notepad++ வின்டோஸ் இயங்குதளத்திற்கு கிடைக்கின்ற ஒரு மிகச்சிறந்த text editor இதுவாகும். நீங்கள் ஏதாவது ஒரு கணினி மொழியை பயன்படுத்துபவராகவும், வின்டோஸ் இயங்குதள பாவனையாளராயும் இருப்பின் இம்மென்பொருள் உங்களுக்கு ஏற்கனவே பரீட்சயமான ஒன்றாகத்தான் இருக்கும். இம்மென்பொருளுக்கு ஏராளமான செருகிகளும் (plugins) இருப்பது குறிப்பிடத்தக்கது. இம்முகவரிக்கு சென்றால் அவற்றுள் ஏராளமானவற்றை கண்டுகொள்ள முடியும். 2. Blender மிகச்சிறந்த ஒரு முப்பரிமாண உருவங்களை உருவாக்கக்கூடியதும் அவற்றினை அசை படங்களாக உருவாக்குவதற்குமான ஒரு மென்பொருள் இதுவாகும். பல ...

மேலும் வாசிக்க →

அடொபி எட்ஜ் (Adobe Edge)

போட்டோசொப், பிளாஸ் போன்ற மிகச்சிறந்த மென்பொருள்களை வௌியிடும் அடொபி நிறுவனம் Edge என்கின்ற பெயரில் புதியதொரு மென்பொருளினை Labs இனூடாக வௌியிட்டுள்ளது. இம்மென்பொருளினை பயன்படுத்தி உங்களால் இணையத்தளங்களில் பயன்படுத்தக்கூடிய அனிமேசன்களை HTML5, CSS3 மற்றும் ஜாவாஸ்கிரிப்ற் இனை பயன்படுத்தி இலகுவாக உருவாக்கிக்கொள்ள முடியும். இம்மென்பொருளில் உள்ள சில வசதிகள். 1. மிக இலகுவாக பயன்படுத்தக்கூடிய User Interface. நீங்கள் ஒரு பிளாஸ் பாவனையாளரெனின் உங்களுக்கு இது புதிதாய் தெரியாது. 2. அடொபி நிறுவனத்தின் மற்றைய ...

மேலும் வாசிக்க →

சில சுவாரசியமான திறமூல இணைய மென்பொருள்கள்

நாங்கள் சாதாரணமாக கேள்விப்படுகின்ற இணைய மென்பொருள்கள் ஜும்லா, டுருபல், வேர்ட்பிரஸ் என்பன. இவை பொதுவாக எங்கள் இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள பயன்படும். ஆனால் இவற்றைவிட பல விதமான தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய பல சுவாரசியமான திறமூல இணைய மென்பொருள்கள் இருக்கின்றன. இவற்றை நாமும் எங்கள் வழங்கிகளில் நிறுவி பயன்படுத்த முடியும். இவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். உங்களுக்கு தெரிந்தவற்றை நீங்களும் பின்னூட்டங்களில் சொல்ல முடியும். 1. Simple Invoices இதனை நீங்கள் உங்கள் வழங்கியில் நிறுவிக்கொண்டால் ...

மேலும் வாசிக்க →

புத்தகக்குறிகளுக்கு xmarks

நான் பகுதிநேரமாக ஒரு இணையத்தள வடிவமைக்கும் பணி செய்து வருவதனால் தினமும் பல இணைய உலாவிகளை பயன்படுத்துவது வழமை. எனக்கு தேவையான ஏதாவது விடயத்தை இணையத்தில் கண்டால் எனது கை தனாகவே அதனை புத்தகக்குறிகளுக்குள் சேர்த்துவிடும். இதனால் ஒவ்வொரு இணைய உலாவியிலும் வேறு வேறு பல புத்தகக்குறிகள் இருக்கும். ஏதாவது ஒரு சேர்த்துவைத்த புத்தக்குறியை தேட ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கும். எல்லா இணைய உலாவிகளையும் திறந்து தேடவேண்டிய தேவை ஏற்படுவதோடு ...

மேலும் வாசிக்க →

கோப்புகளை இலகுவாக பரிமாறிக்கொள்ள DropBox

நீங்கள் அடிக்கடி கோப்புகளை உங்கள் கணினிகளிடையேயும் உங்கள் நண்பர்களிடையேயும் பரிமாறிக்கொள்பவராகவும், உங்கள் கோப்புகளை இணையத்தில் சேமித்து வைப்பவராகவும் இருந்தால் உங்களிடம் கட்டாயம் இருக்கவேண்டிய ஒரு மென்பொருள் DropBox. இதற்கு நீங்கள் செய்யவேண்டியது DropBox இனை உங்கள் கணினியில் தரவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டியதுதான். அதன்பின்னர் அம்மென்பொருள் ஊடாகவே உங்களுக்கு ஒரு இலவச கணக்கை உருவாக்கி கொள்ளலாம். இதன் இலவச சேவை உங்கள் கோப்புகளுக்கு 2GB இடத்தை வழங்குகின்றது. தரவிறக்க மேலதிக தகவல்கள் இயங்குதளம் : வின்டோஸ், மக், ...

மேலும் வாசிக்க →