Posts Tagged "ஊரோடி"

தினக்குரலில் ஊரோடி

தினக்குரலில வாற வலைப்பூக்கள் பற்றிய அறிமுகத்தில இந்த முறை ஊரோடி இடம்பெற்றிருக்கு. இடம்பெற வைத்த தாசன் அண்ணாவிற்கு நன்றிகள். காலையில சில நண்பர்கள் தொலைபேசியில அழைச்சு சொன்னாங்கள் இப்படி உன்ரை வலைப்பதிவு பற்றி எழுதியிருக்கு எண்டு சொன்னாங்கள். பிறகு மாயாவும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இவர்களுக்கும் நன்றி. (கொழும்பு தினக்குரல் யாழ்ப்பாணத்தில் கிடைப்பதில்லை.)

மேலும் வாசிக்க →

உங்கள் பதிவுக்கு ஆங்கில தமிழ் நாட்காட்டி

பல இணையத்தளங்களில நாங்கள் ஆங்கில நாட்காட்டிகளை பெற்றுக்கொண்டு எங்கள் தளங்களில் இணைத்துக்கொள்ளலாம். ஆனால் தமிழ் நாட்காட்டி ஒன்றை பெற்றுக்கொள்ளுறது கஸ்டம். கீழே இருக்கின்ற HTML ஐ உங்கள் தளத்தில் பொருத்திக்கொண்டால் கீழ் காட்டப்பட்டவாறு ஒரு நாட்காட்டியை உங்கள் தளத்தில் காணலாம். ( பொருத்தியதும் அப்பிடியே ஒரு பின்னூட்டமும் போட்டு விடுங்கோ) ...

மேலும் வாசிக்க →

தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் ஊரோடியின் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

மேலும் வாசிக்க →

வலைப்பதிவில் ஒரு வருடம்

“ஊரோடி - பெரிதாக ஒன்றும் யோசிக்காமலேயே இருக்கிற நேரத்தில ஏதாவது அலட்டுவம் என்டு தான் பதியத் தொடங்கியிருக்கிறன். சயந்தன்ர பதிவுகள் தான் இதை தொடங்கத் தூண்டினது. இருந்தாலும் வழமையா எந்த விசயம் எண்டாலும் இழுத்தடிக்கிறனான் இதைமட்டும் ஏனோ படுவேகமா செய்திட்டன். அரைவாசியில் விடப்போறனோ தெரியேல்லை. காலம் நிலைமை எல்லாம் யாழ்ப்பாணத்திலை ஓரளவுக்கெண்டான்ன சரியா இருந்தா தொடர்ந்தும் ஏதாவது அலட்டுவன் எண்டுதான் நினைக்கிறன். இன்னும் தமிழை ரைப் பண்ண ஒரு வசதியும் ...

மேலும் வாசிக்க →

மலைநாடானுக்கு நன்றிகள்.

எல்லாற்ற பதிவுகளும் தமிழ்மணத்தில காட்டுப்படுறது என்றது பொதுவானது. ஆனா என்னுடைய ஊரோடி வானொலியில தெரிஞ்ச செய்தி உங்களுக்கு தெரியுமோ தெரியாது. அப்பிடி தெரிய வைச்சவர் மலைநாடான். தனது இன்பத்தமிழ் வானொலி நிகழ்ச்சியில என்னுடைய இந்த பதிவை பற்றி அறிமுகம் செய்து வைச்சிருக்கிறார். இது நிச்சயமா என்னோடு வாசகர்களின்ர அல்லது விருந்தினர்களின்ர எண்ணிக்கையை கூட்டும் என்பது ஒருபக்கம் இருக்க நானும் ஏதோ எழுதிறன் எண்டு இரண்டு மூன்று பேராவது நினைக்கிறார்கள் எண்டு ...

மேலும் வாசிக்க →