இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 4

இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான எனது தொடர்பதிவின் முதலாம் பகுதியில் அடிப்படையாக இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இருக்கின்ற வழிமுறைகள் பற்றியும், பின்னர் இரண்டாம் பகுதியில் இணையத்தில் வேலை செய்வது தொடர்பான அடிப்படை விடயங்கள் சில பற்றியும், பின்னர் மூன்றாம் பகுதியில் கோரல் ஒன்றினை செயவது எப்படி என்பது தொடர்பாயும் பார்த்தோம்.

தொடர்ந்து வாசிக்க:
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

இப்போது நான்காம் பகுதியில் கோரல் தொடர்பாக மேலும் சில விடயங்களை பார்ப்போம்.

வேலைக்கு எடுக்கும் காலம்.

கோரல் ஒன்றினை இடும்போது எவ்வளவ காலத்தில் அவ்வேலையை முடித்து கொடுக்க முடியும் எனவும் குறிப்பிட வேண்டும். இதுவும் எங்களின் கோரல் தேர்வு செய்யப்படுவது தொடர்பில் முக்கியமான ஒரு விடயமாகும். சிலர் குறைந்தளவு நாட்களை கொடுத்தால் இலகுவாக வேலை கிடைத்துவிடும் என நினைப்பதுண்டு. ஒரு வகையில் அது உண்மைதான் எனினும், நாங்கள் குறிப்பிட்ட நாளில் வேலையை முடித்து கொடுக்காது விடின் எதிர்மறையான விழைவினை ஏற்படுத்திவிடும். தொடர்ச்சியாக எமக்கு வேலை கிடைப்பதை இது தடை செய்து விடும். நீங்கள் குறிப்பிடும் காலத்துக்கு முன்னர் வேலையை முடித்துக்கொடுக்கக்கூடியதாக வேலைக்கான காலத்தை குறிப்பிட வேண்டும். அதற்காக 500 சொற்களில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்கின்ற வேலைக்கு ஒரு கிழமை எடுத்துக்கொள்ளுவது முட்டாள்தனமானது. இரண்டு நாட்கள் என குறிப்பிட்டு ஒரு நாளில் முடித்து கொடுத்தால் அவர் தனது அடுத்த வேலைக்கும் எம்மை அணுகுவார்.

வேலைக்காக நாங்கள் கேட்கும் பணம்

பெரும்பாலான வேலை தருபவர்கள் குறைந்தளவு பணத்தில் தங்கள் வேலையை செய்து முடிக்க ஆர்வமாயிருப்பார்கள். அதற்காக மிக குறைந்த அளவிலான பணத்தினை கேட்பதும் எமக்கு வேலையை பெற்றுத்தரா. ஒரு வேர்ட்பிரஸ் அடைப்பலகை ஒன்றினை உருவாக்கும் வேலைக்கு 50 அமெரிக்க டொலர்கள் என்று கேட்பது மிகவும் குறைவான பணமாகும். இவ்வாறு நீங்கள் ஒரு கோரலை செய்தால் நிச்சயமாக அந்த வேலை உங்களுக்கு கிடைக்காது. அதேபோல அது உங்கள் திறமையை குறைத்து காட்டுவது போல அமைந்து விடும். (சாதாரணமாக பெரிய நிறுவனங்கள் அவ்வாறான வேலைக்கு ஏறத்தாள 400 தொடக்கம் 500 அமெரிக்க டொலர்களை கேட்கும்.) எங்கள் திறமைக்கும் நேரத்திற்கும் ஏற்ற ஒரு பணத்தை கோருதலே நலம். இது பொதுவாக அனுபவத்தில் வந்துவிடும்.

சரி உங்களுக்கு ஒரு வேலை கிடைத்து விட்டது, வேலை செய்யும் போது என்ன கவனிக்க வேண்டும்?

வேலை செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுதான். இப்பொழுது நீங்கள் எந்தளவில் வேலையை முடித்து விட்டீர்கள் என்று குறைந்தது தினமும் ஒரு தடவையாவது வேலை தருபவருக்கு அறிவிக்க வேண்டும். இது உங்கள் மேல் ஒரு நம்பிக்கையை வேலை தருபவருக்கு ஏற்படுத்தும். தனது அடுத்தடுத்த வேலைகளையும் உங்களுக்கு தர அவர் விரும்புவார், அது போல உங்கள் வேலை தொடர்பாக நல்லதொரு பின்னூட்டத்தையும் உங்களுக்கு தருவார். இது மற்றைய வேலை தருபவர்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ள காரணமாக அமையும். கீழே திரைவெட்டை பாருங்கள்.

இப்பொழுது நாங்கள் ஒரு வேலையினை செய்து முடித்து விட்டோம். இனி எம்மை நிலைநிறுத்திக்கொள்ளுவது எவ்வாறு.

தொடக்கத்தில் அதிக வேலை என்பதனை விட கிடைக்கின்ற சில வேலைகளை திறமையாக செய்து முடித்தால் காலப்போக்கில் உங்களை வேலைகள் தேடிவரும். கடந்த கிழமைக்கான எனது இன்பொக்சின் ஒரு பகுதியின் திரைவெட்டை பாருங்கள்.

தொடர்ச்சியாக வேலை தருபவர்கள் அல்லது நீண்டகாலத்துக்கு வேலை தருபவர்களின் வேலைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்தல் நல்லம். இதனால் உங்களால் தொடர்ச்சியாக பணமீட்ட முடியும். (உதாரணமாக பதிவு மேற்பார்வை செய்வது போன்ற வேலைகள்)

உங்களால் செய்ய முடியாத வேலை ஒன்றை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் கூட, உங்கள் வேலை தொடர்பான கரும்புள்ளி ஒன்றினை நீங்களே குத்தியவர்களாகி விடுவீர்கள். அதற்கு நீங்கள் இடமளிக்க கூடாது.

நீங்கள், ஒரு நிறுவனமல்லாமல் தனிப்பட்டவராக இருந்தால் எல்லா விதமான வேலைகளையும் எடுத்து செய்வதை விட குறிப்பிட்ட ஒரு வகையிலான, உங்களிடம் மிகுந்த திறமையுள்ள வேலையினை எடுத்து செய்தல் பயன்தரும். உதாரணமாக “மொழிபெயர்ப்பு வேலை”. இப்படி செய்வதனால் அவ்வாறான ஒரு வேலை வைத்திருப்பவர் இது தொடர்பான வேலை செய்பவர்களை தேடும் போது உங்கள் பெயர் முதல் வருவதற்காள வாய்ப்பு அதிகம். இதனால் உங்களுக்கு வேலை கிடைப்பது இலகுவாகிவிடும். (கூகிளில் தேடும்போது முதல் பக்கத்தில் வரும் தேடல் முடிவுகளோடு நாங்கள் நிறுத்திக்கொள்ளுவது போல)


இந்த பதிவுடன் இத்தொடர் முடிவுக்கு வருகின்றது. இதனை தொடர்ந்து நீங்கள் இணையத்தில் வேலை செய்ய தொடங்கிவிட்டால் உங்களுக்கு உதவக்கூடிய சில பதிவுகள் வர இருக்கின்றன. தவறவிடாமல் இருக்க இங்கு சொடுக்கி எனது செய்தியோடையினை பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்களிடம் ஏதும் கேள்விகள் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள் முடிந்தளவு பதிலளிக்க முயற்சிக்கின்றேன். செய்தியோடை ஊடாக என்னை பின்தொடர்பவர்கள் மற்றும் அனைவரும் இத்தொடர் எவ்வாறிருந்தது என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் முடிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

குறிச்சொற்கள்: , , ,

38 பின்னூட்டங்கள்

 1. Tamilish.com சொல்லுகின்றார்: - reply

  இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 4…

  இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான எனது தொடர்பதிவின் முதலாம் பகுதியில் அடிப்படையாக இணைய…

 2. நிமல் - NiMaL சொல்லுகின்றார்: - reply

  மிகவும் பயனுள்ள தொடராக இருந்தது.
  நன்றி.

 3. etamil.net சொல்லுகின்றார்: - reply

  இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 4 | :: oorodi :: ஊரோடி ::…

  இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான எனது தொடர்பதிவின் முதலாம் பகுதியில் அடிப்படையாக இணைய…

 4. Asfar சொல்லுகின்றார்: - reply

  Dear brother,

  Continusly I read your article, I couln’t explain about but extremely very happy to see. before I didn’t have any idea about Internet earning but I wish to improve my knowledge after see your article. If you dont mind i like to contact you via email or skpye: auss20 or msn messanger asfar_m@msn.com to ask few more about.
  I hope you will response as soon as possilbe.
  Thanks and Regards…
  asfar

 5. பகீ சொல்லுகின்றார்: - reply

  அஸ்வர் வாங்க,

  உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் போட்டிருக்கிறன் பாருங்க.

 6. Asfar சொல்லுகின்றார்: - reply

  Hi Bage, Nice to meet once again via this message. I would like to know how can add comment box like this to my web? I wish to get much with you and your website.
  Continue your work, it is very helpful for us to improve our knoweldge…

  Thanks and best regards..

 7. நிலவன் சொல்லுகின்றார்: - reply

  வணக்கம் பகீரதன்,

  இதை இதை இதைத்தான் எதிர்ப்பார்த்தேன் என்று சொல்லும் அளவிற்கு உங்களது பதிவுகள் உள்ளது.

  சிறிது மாதங்களுக்கு முன்பு உங்களின் தளம் மூலம் wordpress கற்றுக் கொண்டு மறந்து விட்டேன். தற்போது ஞாபகத்தில் திரும்ப வந்து படிக்க ஆரம்பித்து விட்டேன். Elance கோரல் செய்து ஒண்ணும் கிடைக்காமல் வெம்பிக் கொண்டிருந்த எனக்கு தெம்பைக் கொடுத்து விட்டீர்கள்.

  உங்களின் உதவிகளுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

  ஜூம்லா பற்றி எழுதுங்களேன்.

  வாழ்க தமிழுடன்,
  நிலவன்.

 8. நிலவன் சொல்லுகின்றார்: - reply

  // மறந்து விட்டேன் //

  தளத்தை தொடர்ந்து படிப்பதை மறந்துவிட்டேன்.

 9. பகீ சொல்லுகின்றார்: - reply

  நிலவன் வாங்க,

  கட்டாயம் ஜூம்லா பற்றி விரைவில் எழுதுகின்றேன் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

 10. Subash சொல்லுகின்றார்: - reply

  மிகவும் பயனுள்ள தொடர் நண்பா
  மிக்க நன்றி.

 11. Subash சொல்லுகின்றார்: - reply

  இந்த தொடரின் சுட்டியை எனது பக்கத்தில் தந்திருக்கிறேன்.

 12. கிருத்திகன் சொல்லுகின்றார்: - reply

  நன்றி
  பயகனுடையதாயிருந்தது இன்னும் எதிர்பார்ப்போம்.

 13. rathi சொல்லுகின்றார்: - reply

  I want simple work through my E-Mail id .Kindly help me immediately.

 14. rathi சொல்லுகின்றார்: - reply

  I am a poor girl.i want some extra income from online jobs.I want simple jobs.(ex.E-Mail read jobs,(say good or not good job)

  Kindly help me brother

 15. பகீ சொல்லுகின்றார்: - reply

  சுபாஷ், கிருத்திகன் வாங்க,

  உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

 16. பகீ சொல்லுகின்றார்: - reply

  ரதி வாங்க,

  எனக்கு தெரிய மின்னஞ்சலூடாக செய்யக்கூடியதாக எந்த வேலையும் இருப்பதாக தெரியவில்லை. இந்த தொடரில் குறிப்பிட்டிருக்கும் முறைகளை முயற்சிபண்ணி பாருங்கள்.

  நன்றி
  பகீ

 17. senthutan சொல்லுகின்றார்: - reply

  ஹாய் எனக்கு உங்கள் விளக்கம் பிடித்திருக்கு என்னுடைய e-mail address க்கு இணையத்தில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பது சம்பந்தமான முழுமையான விளக்கம் அனுப்பமுடியுமா? please
  என்னுடைய e-mail address :p.senthutan@yahoo.com

 18. dhivyanathan சொல்லுகின்றார்: - reply

  hai iam dhivyanathan now tell me please how to get money in the internet

 19. sivanadiyan சொல்லுகின்றார்: - reply

  மிகவும் பயனுள்ள தொடர் நண்பா
  மிக்க நன்றி.

  • பகீ சொல்லுகின்றார்: - reply

   சிவனடியான்,

   உங்களுக்கு பயனுள்ளதாய் அமைந்ததில் மகிழ்ச்சியே. பின்னூட்டத்திற்கு நன்றி.

 20. ikram சொல்லுகின்றார்: - reply

  ஹாய் எனக்கு உங்கள் விளக்கம் பிடித்திருக்கு என்னுடைய e-mail address க்கு இணையத்தில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பது சம்பந்தமான முழுமையான விளக்கம் அனுப்பமுடியுமா
  என்னுடைய e-mail address :ikram921@gmail.com

  • பகீ சொல்லுகின்றார்: - reply

   எனது அனுபவங்களை இங்கே எழுதிவிட்டேன். உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள் பதிலளிக்கின்றேன்.

 21. jayakanthan சொல்லுகின்றார்: - reply

  இணையத்தில் பணம் சம்பாதிக்க மிகவும் அற்புதமான தொடர் நன்றி நண்பா

 22. ராமநாதன் சொல்லுகின்றார்: - reply

  உங்கள் நான்கு பாகத்தையும் பொறுமையாக படித்தேன். ரொம்ப விரிவா சொல்லி இருக்கீங்க. எனக்கு ப்ரோக்ராம் பற்றி அவ்வளவா தெரியாது. தமிழ் வலை பூ வைத்துள்ளேன். தமிழ் தளத்திற்கு அட்சென்ஸ் கிடைக்காதுன்னு சொல்றாங்க.
  எனக்கு உதவ முடிந்தால் Form Filling, Ads Posting பற்றி அறிய தாருங்கள் நண்பரே .

 23. ருத்ரகுமார் சொல்லுகின்றார்: - reply

  வணக்கம் பகீரதன்,

  உங்களது இந்தக் கட்டுரைத் தொகுப்பு மிகவும் பயனுள்ளது, பகிர்ந்தமைக்கு நன்றி.
  தமிழ்நாட்டில் இருந்து கொண்டு inLinks இல் கணக்கு தொடங்க முடியுமா? அதே போல் Google Adsense கணக்கைப் பயன்படுத்தும் போதே மற்ற விளம்பர நிறுவனங்களின் விளம்பரங்களையும் நம் இணையதளத்தில் வைக்கலாமா?

  நன்றி
  ருத்ரகுமார்

  • பகீ சொல்லுகின்றார்: - reply

   Google Adsense குறிப்பிட்டுச் சொல்லாதவரையில் பிரச்சனை இல்லை. “terms of conditions” இனை வாசியுங்கள்

 24. surendran சொல்லுகின்றார்: - reply

  வணக்கம் பகீரதன்,
  நான் ஒரு கிராபிக் டிசைனர் எனக்கு ஈலசரில் வேலை கிடைக்குமா அப்படி கிடைக்குமாயின் என்னுடைய மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி என்னுடைய மின்னஞ்ஜல் முகவரி
  surendranath1973@gmail.com

 25. பிரியா சொல்லுகின்றார்: - reply

  எனக்கு word excel facebook பற்றிய அறிவு உண்டு இணையத்தில் பணம் சம்பாதிப்பாதிக்கலாமா?

  • பகீ சொல்லுகின்றார்: - reply

   தனியே Word மற்றும் excel அறிவினை கொண்டு வேலை கண்டுபிடிப்பது கஸ்டம். Data entry வேலைகளுக்கு முயற்சிக்கலாம்.

 26. g thameem சொல்லுகின்றார்: - reply

  I WANT ERAN MORE MONEY PI HELP ME

 27. kogilawani சொல்லுகின்றார்: - reply

  Copy, paste, typing setting Tamil and Engilsh know that is all

 28. vasudevan சொல்லுகின்றார்: - reply

  i have been waiting for this kind of oppurtunity.

 29. santhosh சொல்லுகின்றார்: - reply

  இணையத்தில் பணம் சம்பாதிக்க மிகவும் அற்புதமான தொடர் நன்றி நண்பா

 30. அருளாந்து ஜோன் சொல்லுகின்றார்: - reply

  பயனுள்ள கட்டுரைத்தொடர். நன்றி

 31. devibala சொல்லுகின்றார்: - reply

  nan banam sambrica vali solunga

 32. mano சொல்லுகின்றார்: - reply

  very good job