இலவச வேர்ட்பிரஸ் வகுப்பு
ஒரு இரண்டு மூன்று வருசமா நான் வேர்ட்பிரஸை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறதால ஏதோ கொஞ்சம் வேர்ட்பிரஸ் பற்றி தெரிஞ்சிருக்கு. இதில முக்கியம் என்னெண்டா நான் கணினி மூலமா ஈட்டிற வருமானத்தில பெருமளவு வேர்ட்பிரஸ் சார்ந்ததா தான் இருக்குது. (மிச்சம் joomla).
இதனால வேர்ட்பிரஸ் பற்றி தெரியாதாக்களுக்கு எனக்கு தெரிஞ்ச கொஞ்சத்தை சொல்லிக்குடுப்பம் எண்டு பாக்கிறன்.
எப்பிடி சொல்லிக்குடுக்க போறன்?
என்னுடைய கணினி டெக்ஸ்ரொப்பை நீங்கள் பாக்க அனுமதிப்பதன் மூலம்.
மொழி மூலம்
தமிழ் அல்லது ஆங்கிலம் (உங்கள் தெரிவினை பொறுத்தது)
உத்தேச பொருளடக்கம்
1. வேர்ட்பிரஸ் என்றால் என்ன?
2. என்ன மென்பொருட்கள் என்னத்துக்கு பாவிக்கிறன்.
3. வேர்ட்பிரஸ் நிறுவல் – எங்கள் கணினியில்
– வழங்கி ஒன்றில்
4. வேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளல்
4.5 CSS அறிமுகம் (நீங்க விரும்பினா மட்டும்)
5. வேர்ட்பிரஸ் theme உருவாக்கம் – கொஞ்சம் விரிவா
6. வேரட்பிரஸை மேம்படுத்தல் – Custom fields.
கால அளவு
ஒண்டு தொடக்கம் ஒண்டரை மணித்தியாலம்
நேரம்
பங்குபற்றுபவர்களை பொறுத்து தீரமானிக்கபடும்
சரி உங்களிட்ட என்ன இருக்கவேணும்.
அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம்
VNC நிறுவப்பட்ட கணினி
வேகமான இணைய இணைப்பு
உங்களுக்கு என்ன தெரிஞ்சிருக்க வேணும்.
CSS பற்றி கேள்விப்பட்டிருக்க வேணும்.
PHP, MySQL எண்டு கொஞ்சம் உலகத்தில இருக்குது எண்டு தெரிஞ்சிருக்க வேணும்.
சரி நீங்கள் குறுக்கால கேள்வி கேக்கலாமா?
வடிவா கேக்கலாம். ஆனா நான் பதில் தெரிஞ்சாத்தான் சொல்லுவன்.
பங்குபற்ற என்ன செய்யவேண்டும்.
உங்களுக்கு எந்தெந்த நாளில என்னென்ன நேரம் சரிவரும் (தயவு செய்து இலங்கை இந்திய நேரத்தை குறிப்பிடவும்), என்ன மொழி மூலம் எண்டா நல்லம் எண்டு சொல்லி ஒரு பின்னூட்டம் போட்டா சரி. (உத்தேச பொருளடக்கத்தில ஏதாவது சேக்க வேணும் எண்ட நினைச்சாலும் பின்னூட்டத்தில சொல்லுங்கோ.
பின்குறிப்பு
உங்களுக்கு தெரிஞ்சாக்களுக்கு இதைப்பற்றி உங்கள் பதிவு மூலமா சொல்லுங்கோ.
இந்த வகுப்பு நல்லா நடந்தா WordPress, Joomla பற்றி மேலும் சில வகுப்புகள் எடுக்கிற யோசனை இருக்கு.
மு.மயூரனிட்ட wiki பற்றி ஒரு வகுப்பு எடுக்கச்சொல்லி எல்லாருமா சேந்து ஒரு அலுப்பு குடுக்கலாம்.