உதவிக்குறிப்புகள்

வேறென்ன உதவிக் குறிப்புகள் தான்..

CSS CHEAT SHEET

CSS என்பது எங்கள் இணையப்பக்கங்களை அழகுபடுத்த நாங்கள் பயன்படுத்தும் ஒரு மொழியாகும். (மொழி என்பது சரியென்று எனக்கு படவில்லை, அனால் என்ன சொல்லை பயன்படுத்துவது என்று தெரியவில்லை). இதனை பயன்படுத்தி எந்தவித படவேலைப்பாடுகளும் இன்றி அழகிய இணையபபக்கங்களை வடிவமைத்துவிட முடியும். CSS இனை இலகுவாக ஞாபகப்படுத்திக்கொள்ள இந்த Cheat sheet உதவும். சொடுக்கி பாருங்கள்.இதனைப்பார்க்க இங்கே சொடுக்குங்கள்.

மேலும் வாசிக்க →

உபுந்துவில போட்டோசொப்

கொஞ்சம் கொஞ்சமா உபுந்து லிலிக்சுக்கு பழக்கமாகி கொண்டு வாறன். உபுந்து டேபியன் லினிக்சை அடிப்படையா கொண்டதால முந்தி மாண்ரேவுக்கு எண்டு எடுத்த ஒரு மென்பொருளும் வேலைசெய்யாது. இப்ப புதுசா தான் பதிவிறக்கம் செய்யிறன். அப்பிடியே இப்ப Wine ஐ configure பண்ணி ஒரு மாதிரி போட்டோ சொப்பும் போட்டுட்டன். இப்போதக்கு ஒரு பிரச்சனையும் இல்லாம வடிவா வேலை செய்யுது. சில திரை வெட்டுககளை பாருங்கோவன். நல்லா இருந்தா ஒரு பின்னூட்டத்தை ...

மேலும் வாசிக்க →

Web 2.0 என்றால் என்ன ?

அறிமுகம்.Web 2.0 என்பது இணையத்தளங்களின் புதியதொரு பதிப்பாகும். Web 2.0 அடிப்படையில் அமைவதன் மூலம் இணையத்தளங்கள் கவர்ச்சிகரமானவையாயும், பயன்படுத்த இலகுவானவையாயும், பிரகாசமானவையாயும் மாறப்போகின்றன. இது வெறுமனே இணையத்தளங்களின் வடிவமைப்பில் மட்டும் மாற்றங்களை மேற்கொள்ளுவதாயல்லாது இணையத்தளங்களின் வியாபாரக் கொள்கைகள், திட்டமிடல் கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு கொள்கைகளிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.Web 1.0 சின்னங்களுக்கும் Web 2.0 சின்னங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை கீழே பாருங்கள்.இனி நாங்கள் எங்களின் இணையப்பக்கங்களை எவ்வாறு Web 2.0 ...

மேலும் வாசிக்க →

புளொக்கர் சில வித்தைகள் – 3

சில பதிவுகளில் Header இற்கு பதிலாக ஒரு விரும்பிய படத்தினை இணைத்திருப்பதனை கவனித்திருப்பீர்கள். இது புளொக்கரில் சுலபமாயினும் புளொக்கர் பேற்றாவில் சிறிது கஸ்ரமே. நீங்கள் உங்களுக்கு விரும்பிய ஒரு படத்தினை Header image ஆக சேர்க்க விரும்பின் கீழே காட்டப்பட்ட நிரலியை பொருத்தமான இடத்தில் சேர்த்து விடுங்கள் (Body tag இன் கீழே)ஒரு படத்தினை இணைத்து பார்த்துவிட்டு எனக்கும் ஒரு பின்னூட்டம் இடுங்கள்.

மேலும் வாசிக்க →

புளொக்கர் சில வித்தைகள் – 2

என்னுடைய வலைப்பதிவில் இருப்பது போல Header இன் கீழே முன்னைய பதிவிற்கான தொடுப்பை எப்படி சேர்ப்பதென பார்ப்போம். இதனை செய்தபின்னர் உங்கள் குடிலின் தலைப்பின் கீழே << இல்லம் | முன்னய பதிவின் தலைப்பு >> இப்படியான வடிவில் ஒரு சேர்வை இருக்கும். கீழே தரப்பட்ட நிரலியை blogger tag இன் மேலே சேர்த்துவிடுங்கள் பின் பப்ளிஸ் பண்ணி விடுங்கள் அவ்வளவுதான். « இல்லம் | » செய்து பார்த்துவிட்டு எனக்கும் ஒரு பின்னூட்டம் ...

மேலும் வாசிக்க →