அடொபி

அடொப் புதிய வெளியீடுகள்

அடொப் நிறுவனம் இப்போது மக்ரோமீடியா நிறுவனத்தையும் தன்னுள் இணைத்துக்கொண்டு இணைய மற்றும் Graphics உலகில் முடிசூடா மன்னனாகியுள்ளது. இப்பொழுது அடொப் நிறுவனம் தனது அனைத்து மென்பொருட்களதும் புதிய பதிப்புகளை வெளியிட உள்ளது. (அனேகமாக ஏப்பிரல் 20)இப்பொழுதே அடொப் போட்டோசொப்பின் பீற்றா பதிப்பு வெளியாகி உள்ளமை அனைவருக்கும் தெரியும்.


(படத்தை சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்)

இவை பயனாளர்களின் நன்மைகருதி பல தொகுப்புகளாக வெளிவர உள்ளன.

  • Design premium
  • Design slandered
  • Web premium
  • Web slandered
  • Production premium
  • Master collection

வெளிவர இருக்கும் சில புதிய பதிப்புகள்
* Adobe InDesign CS3 for professional page design
* Adobe Photoshop CS3 Extended for new dimensions in digital imaging
* Adobe Illustrator CS3 for powerful vector graphics creation
* Adobe Acrobat 8 Professional for Adobe PDF creation and collaboration
* Adobe Flash CS3 Professional for creating rich interactive content
* Adobe Dreamweaver CS3 for developing standards-based websites and applications
* Adobe Fireworks CS3 for web prototyping and designing
* Adobe Contribute CS3 for updating websites and blogs
* Adobe After Effects CS3 Professional for industry-standard motion graphics and visual effects
* Adobe Premiere Pro CS3 for capturing, editing, and delivering video
* Adobe Encore CS3 for preparing DVD titles
* Adobe Soundbooth CS3 for creating and editing audio quickly and intuitively

26 பங்குனி, 2007

அடொப் அப்பலோ வெளியானது

இன்று நாளை என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அடொப் அப்பலோ சில நாட்களின் முன்னர் அல்பா பதிப்பாக வெளியானது. நீண்ட நாட்களாக இதனை எதிர்பார்த்து காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். வெளியிடப்பட்டவுடனேயே ஒரு பதிவு இடவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட போதும் மேலோட்டமாகவேனும் விளங்கிக்கொண்ட பின்னரே பதிவிடவேண்டும் என்று அதனை தவிர்த்துவிட்டேன். இப்போது எனது முதலாவது மென்பொருள் ஏறத்தாள தயாராகிவிட்டது.

இந்த அல்பா பதிப்பு அனைத்து வசதிகளுடனும் வெளியிடப்படவில்லை. 2007ம் ஆண்டின் இரண்டாம் பாதியில்தான் பூரணமான முதற் பதிப்பு வெளியிடப்படும் என அடொப் அறிவித்துள்ளது. அப்போது அதன் அளவு ஏறத்தாள 9mb ஆக அமையும் (இப்போது 6mb)

இப்பொழுது மென்பொருள் எழுதுபவர்களின் பிரதான runtime களான java மற்றும் .NET க்கு இது பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான காரணங்களாக அமையக்கூடியன

அளவு (9mb)
HTML, DHTML, Javascript, AJAX, Flash, Flex, ActionScript எதைவேண்டுமானாலும் மென்பொருள் உருவாக்கத்திற்கு பயன்படுத்த முடியும்.
எங்களுக்கு விரும்பியவாறு மாற்றி அமைக்கும் வசதி (customizable)
இணையத்தோடு இணைந்து வேலைசெய்யக்கூடிய வசதி
உருவாக்கப்படும் மென்பொருட்களின் அளவு
மிக அழகிய GUI களை உருவாக்கக்கூடிய வசதி

மிகவிரைவில் அடொப் அப்பலோ சம்பந்தமான பூரண விளக்கப்பதிவு ஒன்றினையும் இட முயற்சிக்கின்றேன்.

அடொப் அப்பலோ சம்பந்தமான கருத்துக்கள் பிரச்சனைகள் என்பவற்றை பின்னூட்டமாக இடுங்கள். பதிலளிக்க முயற்சிக்கின்றேன்.

24 பங்குனி, 2007

Flash – ஒரு வரலாறு

இன்று எந்த ஒரு இணைய வடிவமைப்பாளரோ அல்லது இணைய மென்பொருள் உருவாக்குபவரோ தவிர்த்துவிட முடியாத ஒரு இடத்தினை அடொப் பிளாஸ் (Adobe Flash) கொண்டுள்ளது. இதன் வளர்ச்சி ஒரே இரவில் நடந்து விட்ட ஒன்றல்ல. எவ்வாறு இது உருவாகியது?

Jonathan Gay என்கின்ற கட்டிட கலைஞர் தனது வரைபடங்களை வரையும்போது இந்த வரைபடங்கள் கட்டடங்கள் ஆன பின்னர் எவ்வாறு இருக்கும் என்று முனனமே அறிந்து கொள்ள முடியவில்லையே என கவலைப்படத்தொடங்கியபோது இந்த மென்பொருளின் உருவாக்கம் தொடங்கிவிட்டது. அப்பொழுது அவரிடம் இருந்த கணனி Apple II. பின்னர் Jonathan மென்பொருள்களை எழுதுவதன் மூலம் தனது தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என அறிந்து கொண்டார். அவர் தனக்கு தேவையான மென்பொருளை எழுதிக்கொண்டாலும் அதற்கு அவரது கணனியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

“If you ever think Flash is difficult to use, you should try drawing with a joystick on an Apple II
before the concept of undo was invented. That will test your patience.”

–Jonathan Gay, Creator of Flash

பின்னர் அவர் Pascal மொழியினை கற்று அவரது முதலாவது Graphic editor (SuperPaint) இனை உருவாக்கினார். இந்த மென்பொருள் Silicon Beach Software எனும் நிறுவனம் மூலம் மக்களின் பாவனைக்கு வந்தது. அதன் பின்னர் SuperPaint இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான SuperPaint II இவரால் உருவாக்கப்பட்டு பாவனைக்கு வந்தது. இதன் பின்னர் Silicon Beach Software நிறுவனத்தில் பூரணமாக வேலைக்கமர்ந்த இவர் C++ மொழியில் Intellidraw என்கின்ற மென்பொருளை எழுதி வெளியிட்டார். இது அப்போது சந்தையில் இருந்த Adobe Illustrator மற்றும் Aldus Freehand (இது பின்னர் macromedia நிறுவனத்தால் வாங்கபபட்டு விட்டது.) இரண்டையும் பின்தள்ளி முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

இதன்பின்னர் இணையத்தின் வளர்ச்சியை தொடர்ந்து படிப்படியாக வளர்ந்திருந்த இந்த மென்பொருள் CelAnimator என்ற பெயருடன் இணையத்தில் இயங்கக்கூடிய வகையில் வெளிவந்தது. பின்னர் இது சிறிய மேம்பாடுகளோடு FutureSplash Animator என பெயர் மாற்றம் பெற்றது. இது வெளிவந்த நேரத்தில் சந்தைவாய்ப்பை பெரிதளவில் கொண்டிருக்கவில்லையாயினும் மிகவிரைவில் சந்தையில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்தது.

பின்னர் 1996 திசம்பரில் Macromedia நிறுவனம் FutureSplash Animator இனை வாங்கி Macromedia Flash 1.0 என்ற பெயருடன் வெளியிட்டது.

இப்போது இது Macromedia Flash 8.0 எனும் அளவிற்கு வளர்ந்து விட்டது. அத்தோடு கடந்த வருடம் இந்த மென்பொருளையும் Macromedia நிறுவனத்தையும் Adobe நிறுவனம் உள்வாங்கி மேலும் புதிய வசதிகளையும் இணைத்து விரைவில் Adobe Flash வெளிவர இருக்கின்றது.

சரி இப்போது Jonathan Gay எங்கே? அவர் இப்போது Adobe நிறுவனத்தில் Flahs இற்கான Technology Vice President ஆக உள்ளார்.

24 மாசி, 2007