இணையம்

நீங்களும் கார்ட்டுனாகலாம்.. PS tutorial

நான் இணையத்தை சுத்திவரேக்க இந்த Tutorial கண்ணில பட்டுது. ஒரு புதிய மனித உருவத்தை போட்டோ சொப்பில் உருவாக்க நானும் எவ்வளவோ வழிகளை பார்த்திருக்கிறன். ஆனா இந்த வழிமுறைபோல இலகுவான ஒரு முறையை இப்பொழுதுதான் பார்த்தேன். நான் கீழே காட்டியிருக்கிற படத்தை உருவாக்க எனக்கு கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலந்தான் எடுத்துது. ஒரு நல்ல போட்டோசொப் பயனாளருக்கு அவ்வளவு நேரம் தேவையில்லை. இன்னும் கொஞ்சநேரம் செலவழித்திருந்தால் தலைமயிரைக்கூட மாற்றியிருக்க முடியும்.

சரி இங்க சொடுக்கி தொடங்குங்க வேலையை.

18 மாசி, 2008

இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க..

உங்களிடம் நல்ல இணைய இணைப்பு உள்ளதா?? வேலையும் முடிஞ்சுது. வலைப்பதிவிலையும் எழுதியாச்சு, மற்ற வலைப்பதிவுகளையும் ஒரு சுத்து சுத்தி பாத்தாச்சு. இனியும் நேரம் இருக்கா. வாங்க கொஞ்சம் உழைக்கலாம்.

உங்களுக்கு கணினியில என்ன செய்யத்தெரியும்?? தகவல் உள்ளீடு?? கணினி வரைகலை?? இணைய வடிவமைப்பு?? மொழிபெயர்ப்பு?? பிளாஸ் வடிவமைப்பு?? எல்லா விதமான வேலைகளும் இங்க இருக்கு. கீழ இருக்கிற படத்தின் மேல சொடுக்கி ஒரு கணக்கு ஒன்றை உருவாக்கி கொள்ளுங்க. பிறகென்ன அங்க வரிசைப்படுத்தி இருக்கிற ஆயிரக்கணக்கான வேலைகளை வென்று பணம் பணம் பண்ண தொடங்குங்க.

17 மாசி, 2008

உங்கள் பதிவுக்கு ஆங்கில தமிழ் நாட்காட்டி

பல இணையத்தளங்களில நாங்கள் ஆங்கில நாட்காட்டிகளை பெற்றுக்கொண்டு எங்கள் தளங்களில் இணைத்துக்கொள்ளலாம். ஆனால் தமிழ் நாட்காட்டி ஒன்றை பெற்றுக்கொள்ளுறது கஸ்டம். கீழே இருக்கின்ற HTML ஐ உங்கள் தளத்தில் பொருத்திக்கொண்டால் கீழ் காட்டப்பட்டவாறு ஒரு நாட்காட்டியை உங்கள் தளத்தில் காணலாம். ( பொருத்தியதும் அப்பிடியே ஒரு பின்னூட்டமும் போட்டு விடுங்கோ)



[html]<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,0,0" width="220" height="150" id="today" align="middle">
<param name="allowScriptAccess" value="sameDomain" />
<param name="allowFullScreen" value="false" />
<param name="movie" value="http://www.oorodi.com/fla/today.swf" />
<param name="quality" value="high" /><param name="bgcolor" value="#ffffff" />
<embed src="http://www.oorodi.com/fla/today.swf" quality="high" bgcolor="#ffffff" width="220" height="150" name="today" align="middle" allowScriptAccess="sameDomain" allowFullScreen="false" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" />
</object>[/html]

29 தை, 2008