இணையம்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இணைய உலகின் சக்கரவர்த்தியாக இருந்து வருகின்ற கூகிள் இன்று தனது 9 வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இவரை உற்றார் உறவினர் மற்றும் ஊரோடி என்போர் வாழ்த்தி மகிழ்கின்றனர்.

கூகிள் என்கின்ற டொமைன் 1997 இல் பதியப்பட்டிருந்தாலும் அது இணையப்பக்கமாக செயற்படத்தொடங்கியது 1998 செப்ரெம்பரிலேயே.

கூகிள் 1998 இல்

அப்புறமா




28 புரட்டாதி, 2007

Windows skydrive

கூகிள் மற்றும் அப்பிள் நிறுவனங்களின் இணைய இடங்களுக்கு மாற்றாக மைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது windows live folders எனும் சேவையின் பேற்றா பதிப்பினை இவ்வருட மே மாதமளவில் அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால் அது உடனடியாகவே பொது பயனாளர்களின் பாவனைக்கு நிறுத்தப்பட்டது. பின்னர் இப்போது மைக்ரோசொவ்ற் நிறுவனம் 500Mb இடவசதி கொண்ட (முன்னையது 250) windows skydrive இன் பேற்றா பதிப்பினை அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

இங்கு நீங்கள் உங்களுக்கு விரும்பிய எந்தவகையான கோப்புகளையும் சேமித்து வைக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதைவிட உங்கள் கோப்புகளை public, shared மற்றும் private என உங்களால் வகைப்படுத்திக்கொள்ளவும் முடியும்.



இருந்தாலும் கூகிளின் இலவச 3.8Gb கொள்ளளவம் (gmail + picassa web albums) மற்றும் அப்பிள் நிறுவனத்தின் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய 10Gb கொள்ளளவம் (இலவசமல்ல வருடத்திற்கு 99$, இதுவும் விரைவில் இலவசமாகலாம் எனும் கருத்தும் நிலவி வருகின்றது.) என்பவற்றின் போட்டியை எவ்வாறு இது சமாளிக்கப்போகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

15 ஆவணி, 2007

அனைவருக்கும் மடிக்கணினி

அனைவருக்கும் மடிக்கணினி என்ற கருப்பொருளின் கீழ் சுவிற்சிலாந்தை சேர்ந்த Medison என்கின்ற நிறுவனம் Medison Celebrity என்கின்ற மடிக்கணினியை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதன் விலை 150 அமெரிக்க டொலர்கள் மட்டுமே. இதில் இயங்கு தளமாக லினிக்ஸ் பயன்படுத்தப் பட்டிருப்பதுடன் office மற்றும் multimedia மென்பொருள்கள் நிறுவப்பட்டே விற்பனைக்கு வருகின்றது.

இதன் பிரதான விடயங்கள் வருமாறு

  • Intel® Celeron 1.5 GHz CPU
  • 14″ Widescreen X-bright LCD
  • 256 MB Ram memory
  • 40 GB Hard Drive
  • 802.11g Wireless LAN
  • Optimized Linux operating system
  • Pre-installed office and multimedia applications

மேலதிக விடயங்களுக்கு அவர்களின் இணையத்தளத்தை பாருங்கள்.

28 ஆடி, 2007