இணையம்

சொந்த வலைப்பதிவு

சொந்த வலைப்பதிவு வைத்திருக்க என்னென்ன தேவை என்று ரவிசங்கர் தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கத்தில் வரிசைப்படுத்தி, விளக்கியிருந்தார். அதில் ஒரு அனானி பணம் செலுத்தாமல் விட்டுவிட்டால் என்னவாகும் என்று கேட்டிருந்தார். அந்த கேள்விதான் இந்த பதிவின் இடத்தூண்டியது.

பணம் செலுத்தாமல் விட்டு இல்லாமல் போய்விடும் என்பதனைவிட, சாதாரணமாகவே வழங்கிகளில் இருந்து உங்கள் தரவுகள் மற்றும் கோப்புகள் அழிந்து போய்விட வாய்ப்பிருக்கின்றது. புளொக்கரில்கூட பல வலைப்பதிவுகள் ஒரேயடியாக அழிந்து போய்விட்ட நிகழ்வுகள் நடந்திருக்கின்றது. வழங்கிகள்(எவரிடம் இருந்து வாங்கப்பட்டாலும்) பூரணமாக நம்பத்தகுந்தவை அல்ல. எப்பொழுதுமே உங்கள் கோப்புகள் மற்றும் தரவுகளை நீங்கள் இழந்து விடாமல் இருக்கவேண்டுமென்றால் சிறிது காலத்திற்கொருமுறை (குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு முறையேனும்) அவற்றை Backup செய்து சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். வழங்கி வழங்குனர்களும் பொதுவாக அதனை செய்வார்களாயினும் உங்கள் பிரதி ஒன்று உங்களிடம் எப்போதும் இருப்பது பயன்தரும்.

இலவச புளொக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் என்பன Backup இற்கான பல்வேறு வசதிகளை அளிக்கின்றன. ஆனால் நீங்கள் சொந்தமாக உங்கள் வலைப்பதிவினை வைத்திருந்தால் இந்த வசதியை வழங்கி வழங்குனர்களே வழங்குவார்கள்.

உங்கள் வழங்கப்பட்ட வழங்கியின் control panel இல் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள Backup என்பதனை அழுத்தினால், கீழே காட்டப்பட்டவாறாக வரும்.

இதில் உங்கள் தரவுகள் மற்றும் கோப்புகளை இலகுவாக Backup செய்து கொள்ள முடியும்.

குறிப்பு:
உங்கள் வழங்கியில் கீழே வட்டமிட்டு காட்டப்பட்டது போன்ற Fantastico இருந்தால் உங்களால் வேர்ட்பிரஸ் உட்பட பல்வேறு வகையான வலைப்பதிவு மென்பொருட்களையும், வேறு பல PHP Scripts (மின்வணிகம், CMS உள்ளடங்கலாக) இனையும் இலகுவாக உங்கள் வழங்கியில் நிறுவிக்கொள்ளவும், மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.

5 ஆடி, 2007

Google docs updated

கூகிள் நிறுவனம் தனது docs மற்றும் spreadsheet இனை வடிவமைப்பு மற்றும் சில வசதிகளில் மேம்படுத்தி இருக்கின்றது. இதனால் முன்னரை விட இப்பொழுது கோப்புகளை இலகுவாக ஒழுங்குபடுத்தி பயன்படுத்த முடிகின்றது.

இப்பொழுது உங்களால் உங்கள் கோப்புகளை folder களில் ஒழுங்கு படுத்தி வைக்க முடியும். (drag and drop வசதி கூட உண்டு). அத்தோடு அதன் முகப்பு அழகாகவும் உள்ளது. ஒரு முறை சென்றுதான் பாருங்களேன்.

27 ஆனி, 2007

xcavator.net

நீங்கள் புகைப்படங்கள் மற்றும் கிராபிக்ஸில் ஆர்வம் உள்ளவரா? அப்படியானால் xcavator.net என்கின்ற இந்த தளம் உங்களுக்கு மிகுந்த பயனுள்ள தளாமாக இருக்கும். இதன் தேடுபொறி சில நிமிடங்களிலேயே உங்களுக்கு தேவையான படத்தினை தேடி தந்துவிடும். ஒருமுறை சென்று முயற்சி செய்துதான் பாருங்களேன்.



26 ஆனி, 2007