இந்த கட்டுரை இலக்கிய வழி நூலில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சைவாசிரிய கலசாலையிலே 30 ஆண்டுகளாக சைவம் தமிழ் இரண்டையும் இரு கண்களென பேணி வளர்த்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வருங்காலத்தோர்க்காய் எழுதிய முன்னுரையாகும்.
தமிழ் நாட்டிலே தமிழ் வரலாறு அகத்தியரிலிருந்து தொடங்குகின்றது. ஈழநாட்டிலே தமிழ் இலக்கிய வரலாறு அரசகேசரியிலிருந்து தொடங்குகின்றது.ஆங்கிலேயரும் அவர்களுக்கு முன் ஒல்லாந்தரும் அவர்களின் முன் போர்த்துக்கீசரும் ஈழநாட்டை ஆண்டார்கள். இற்றைக்கு நானூறு வருடங்களிற்கு முன் அதாவது போர்த்துக்கீசருக்கு ...
மேலும் வாசிக்க →
வால்மீகரின் சூத்திரஞானத்திலிருந்து 2ம் மற்றும் 3ம் பாடல்கள் உங்கள் பார்வைக்காக.வந்ததுவும் போனதுவும் வாசி யாகும் வானில் வரும் ரதிமதியும் வாசி யாகும் சிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன் ...
மேலும் வாசிக்க →
இப்பதிவில் 14ம் நூற்றாண்டு தொடக்கம் 18ம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வெளிவந்த நூல்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.சரசோதி மாலை - சோதிட நூல்செகராசசேகரமாலை - சோதிட நூல்செகராசசேகரம் - வைத்திய நூல்பரராசசேகரம் - வைத்திய நூல்தஷிண கைலாச புராணம் - கோணச பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்று கூறும் தலபுராணம்கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல் - சிலப்பதிகார கதை மாற்றங்களுடன் கூடியதுஇரகுவம்மிசம் - காளிதாசரின் இரகுவமிசத்தின் தமிழாக்கம்வையாபாடல் - இலங்கையரசன் குலங்களையும் ...
மேலும் வாசிக்க →
2002ம் ஆண்டு பிரம்மராஜன் தொகுத்து காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிவந்தது. 34 வயதில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன மதுசூதன் எனும் இயற்பெயர் கொண்ட ஆத்மாநாமின் படைப்புகள் பூரணமாக தொகுக்கப்பட்டிருப்பதாய் தொகுப்புரை சொல்கிறது. (ஆனாலும் ஆத்மாநாம் பிரம்மராஜனுக்கு மட்டும் தான் கடிதம் எழுதியிருப்பார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை). கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், கடிதங்கள் என்பன இந்நூலில் காணப்படுகின்றன.ஆத்மாநாமின் கவிதைகள் எப்போதும் அடிமைத்தனத்தை எதிர்ப்பதாயும் சற்றே கமியூனிச இயக்கங்கள் சார்வதாயும் ...
மேலும் வாசிக்க →
அப்துல் ரகுமானின் முட்டைவாசிகள் நூலை நேற்றுத்தான் ரசிக்கக் கிடைத்தது. முதற்பதிப்பு 1995 இல் வெளிவந்தது. 23 தலைப்புகளில் கவிஞர்களின் சுருக்கக் குறிப்புக்களோடு அவர்களின் கவிதைகளின் ஆழமும் அழகும் தெளிவுறச்சொல்லப்பட்டிருந்தது. பப்லு நெருடா ஹைக்கூ கவிஞர் மொரிடாகே போன்ற கவிதை உலகிற்கு பிரசித்தமானவர்களும் அடக்கம்.
பேசாமல் இருப்பதன் மூலம்
சொற்களின் எல்லையை
மௌனத்தை
எட்டிப்பிடிக்கின்றேன்.
பப்லூ நெருதாவின் அழகிய கவி வரிகள் ஆழத்தையும் அழகாய் விளக்குகிறார் அப்துல் ரகுமான்.
இந்த அழகிய பூக்களிடையே
ஒரு மரங்கொத்தி ...
மேலும் வாசிக்க →