நூல் வாசிப்பு

ஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு

பரிமளம் சுந்தர் அவர்களின் முனைவர் பட்டத்திற்கான ஆய்வாகச்செய்யப்பட்ட இந்த ஒப்பாய்வு நூலுருப்பெற்றிருக்கின்றது (கரோன் - நீரோன் பதிப்பகம் புரட்டாதி 2005). நூலை வாசிக்கும் போது நூலாசிரியர் இது சம்பந்தமாய் ஆய்வு செய்தார் என்பதைவிட தவம் செய்தார் என்பது தகுமெனலாம்.ஆறு தலைப்புகளாக ஆய்வு வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது.ஜப்பானிய ஹைக்கூவின் தோற்றமும் வளர்ச்சியும்.தமிழில் ஹைக்கூவின் வரவும் வளர்ச்சியும்ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள்தமிழில் ஹைக்கூ கவிதைகள்ஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஒப்பீடுமுடிவுகள்.நல்ல ஹைகூசளை அடையாளம் காண முடிகின்றது. உதாரணத்துக்கு ...

மேலும் வாசிக்க →

நுட்பம் – 2006

கொழும்பு மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆண்டு மலராக நுட்பம் வெளிவந்திருக்கினறது. உபயம் நண்பன் கேதாரசர்மா (புடவை முகாமைத்துவ மாணவன் - மொரட்டுவ பல்கலைக்கழகம்) ஆனால் நான் வாசிப்பதற்கு மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது வேறு விடயம். வெளியீட்டு விழாவிற்கு போக முடியாத குறை வாசித்த போது இன்னும் அதிகமாகியது. தமிழருவியும் சடகோபனும் தங்கள் பிரிவுகளை ஆய்வுசெய்ததாக அறியக்கிடைத்தது. மலைபோல் இடர்வரினும் தலைநிமிர்ந்து நிற்போம் நாங்களும் - எங்கள் கலைகளும் எம் பனைகளைப்போலவே.. உள்அட்டையில் ...

மேலும் வாசிக்க →

புத்தகங்கள்…. புத்தகங்கள்……

கொழும்பு புத்தகச் சந்தைக்கு போனனான் எண்டு சொன்னனான் எல்லோ. அங்க வாங்கின புத்தகங்களின்ர விபரத்தை தந்திருக்கிறன். இதை வாசிச்சுப்போட்டு நான் என்ன விதமான வாசகன் எண்டு நீங்கள் யாராவது சொன்னால் குலுக்கல் முறையில முதல் பரிசு பெறுகிற ஆளுக்கு ஒரு இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான அப்பிள் நோட்புக் கணனியின்ர படம் பரிசாக தரப்படும். உ. வே. சா - பன்முக ஆளுமையின் பேருருவம் தொகுப்பு பெருமாள் முருகன் - ...

மேலும் வாசிக்க →

புத்தகச்சந்தை

கொழும்பு புத்தகச் சந்தையும் கண்காட்சியும் இந்த மாதம் 16ம் திகதி தொடக்கம் ஒரு கிழமை மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. வழமைபோல ஒரு தொகை புத்தகங்கள் வாங்கின சந்தோசம். இருந்தாலும் ஒரு கவலை கனக்க புத்தகம் வாங்கமுடியாமப் போச்சு. வேறென்ன காசு காணது. அதைவிடுவம். பிறகு ஆறுதலா வாங்கின புத்தகங்களின்ர விபரம் தாறன். முதல்ல புத்தகச்சந்தை விபரம். 440 புத்தகக் கடைகள். குறைஞ்சது 1 மில்லியன் புத்தகத் தலைப்புகள். போன ...

மேலும் வாசிக்க →