கூகிள்

கூகிள் நிறுவனம் மற்றும் அவர்களின்இணைய மென்பொருள்ள் தொடர்பான அறிமுகங்கள் மற்றும் செய்திகள்

நான் ரோபோட்டா??

கூகிளில் ஒரு விடயத்தை தேடியபோது கூகிள் சொன்ன பதிலை கீழே பாருங்கள்.

28 வைகாசி, 2007

கைப்பேசியில் கூகிள் Calender

கூகிள் calender பல சிறப்பான பயன்பாடுகளை உடையது. இதில் இருந்த ஒரு குறைபாடு எமது நிகழ்வுகளை பார்க்க ஒவ்வொரு முறையும் கணனியின் முன் இருக்க வேண்டி இருந்தமை ஆகும். பின்னர் இதனை இலகு படுத்த கூகிள் sms அனுப்பும் முறை ஒன்றினை கையாண்டது. அத்துடன் இவ்வசதி தனியே US பயனாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இப்போது இவற்றிற்கெல்லாம் தீர்வாக கைப்பேசியிலேயே பயன்படுத்தக்கூடிய கூகிள் calender இனை கூகிள் வெளியிட்டுள்ளது. போய் பயன்படுத்தி பாருங்கள்

25 வைகாசி, 2007

Google Talk

கடந்த ஐந்து மாதங்களாக எந்த விதமான மேம்படுத்தல்களும், மேம்படுத்தல் அறிவித்தல்களும் இல்லாமல் இருந்து Google Talk இப்போது பெரிய ஒரு மாறுதலுக்கு உள்ளாக இருக்கின்றது. இதன் மூலம் Google Talk இலிருந்து சாதாரண ஒரு தொலைபேசியுடனும் பேச முடியும். இவ்வசதி விரைவிலேயே பொதுமக்களின் பாவனைக்கு வர உள்ளது.

22 வைகாசி, 2007