கூகிள்

கூகிள் நிறுவனம் மற்றும் அவர்களின்இணைய மென்பொருள்ள் தொடர்பான அறிமுகங்கள் மற்றும் செய்திகள்

Google docs updated

கூகிள் நிறுவனம் தனது docs மற்றும் spreadsheet இனை வடிவமைப்பு மற்றும் சில வசதிகளில் மேம்படுத்தி இருக்கின்றது. இதனால் முன்னரை விட இப்பொழுது கோப்புகளை இலகுவாக ஒழுங்குபடுத்தி பயன்படுத்த முடிகின்றது.

இப்பொழுது உங்களால் உங்கள் கோப்புகளை folder களில் ஒழுங்கு படுத்தி வைக்க முடியும். (drag and drop வசதி கூட உண்டு). அத்தோடு அதன் முகப்பு அழகாகவும் உள்ளது. ஒரு முறை சென்றுதான் பாருங்களேன்.

27 ஆனி, 2007

YouTube in Mobile

இனிமேல் நீங்கள் தினமும் சென்று பார்க்கும் Youtube தளத்தினை உங்கள் கைப்பேசியிலேயே கண்டு களிக்கலாம். அத்தோடு உங்களுக்கு விரும்பிய வீடியோக்களை 3g வடிவில் தரவிறக்கியும் கொள்ளளலாம். முகவரி : http://m.youtube.com

உடனே அவசரப்பட்டு செல்லாமல் உங்கள் data plan இனை unlimited ஆக மாற்றி விட்டு செல்லுங்கள் இல்லையேல் வீட்டை விற்றுத்தான் கைப்பேசி பில் கட்ட வேண்டி வரும். இதனை அவர்களே அவர்களது முற்பக்கத்தில் சொல்கின்றார்கள்.

17 ஆனி, 2007

கூகிளின் எதிர்காலம்

இன்னும் சில காலத்தில் கூகிள் எவ்வாறெல்லாம் தேடப்போகின்றது என்கின்ற ஒரு கற்பனையை கீழே பாருங்கள். நிச்சயமாக இது மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது..

29 வைகாசி, 2007