கூகிள்

கூகிள் நிறுவனம் மற்றும் அவர்களின்இணைய மென்பொருள்ள் தொடர்பான அறிமுகங்கள் மற்றும் செய்திகள்

Google Notebook

கூகிள் நிறுவனம் தனது நோட்புக்கில் பயன்படுத்த இலகுவானதாக சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் முதற்பக்கம் பூராகவும் AJAX இல் மீள வடிவமைக்கப்பட்டு சில வசதிகளும் மேலதிகமாக செய்யப்பட்டுள்ளன. இதனால் இதனை மிக வேகமாக பயன்படுத்த முடிவதுடன் இலகுவாக கையாளவும் முடிகிறது. அத்துடன் கூகிள் நோட்புக்கில் எடுக்கப்பட்ட குறிப்பொன்றினை Google docs இற்கு இலகுவாக அனுப்பவும் முடிகின்றது.

கூகிள் நோட்புக் (புதியது)

கூகிள் நோட்புக் (பழையது)

31 பங்குனி, 2007

கூகிள் கைப்பேசி

கூகிள் நிறுவனத்தின் புதிய பொருளாக வெளிவர இருப்பது Google phone. இதைப்பற்றிய பல்வேறு கதைகள் இப்போது இணையத்தில் உலாவி வருகின்றன. கடைசியாக கூகிள் கைப்பேசியின் படம் கூட வெளிவந்து விட்டது நீங்களும் தான் பாருங்களேன்.

14 பங்குனி, 2007

Picasa Web Albums : மேம்படுத்தப்பட்ட வசதிகள்

கூகிளின் Picasa Web Albums இப்போது பல முன்னேற்றகரமான வசதிகளோடு மேம்படுத்தப்பட்டு பாவனைக்கு வந்துள்ளது. இதன் முக்கிய மேம்பாடுகளை கீழே பார்ப்போம்.

இவ்வளவு காலமும் 250 Mb ஆக இருந்த இதன் கொள்ளளவு இப்போது 1Gb ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது உங்களால் பகிரப்பட்டுள்ள புகைப்படங்களுள் சிறந்த ஒரு தேடுகையை மேற்கொள்ளக்கூடியதாக இதன் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது. கீழே ஒரு சிறிய தேடலை பாருங்கள்.

உங்களின் பதிவுகளில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களையும் இப்போது நீங்கள் Picasa Web Albums இன் உங்கள் கணக்கில் காணலாம். இந்த Album “B” என்ற புளொக்கரின் symbol இனால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.

உங்கள் பகிரப்பட்ட புகைப்படங்களுக்கான பின்னூட்டங்களை உங்கள் மின்னஞ்சலிலேயே பெறும் வசதி.

இதனை விட மேலும் பல சிறிய சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைப்பற்றியும் அறிந்து கொள்ள உங்கள் Web albums இற்கு சென்று பாருங்கள்.

12 பங்குனி, 2007