வித்தியாசமான செய்தியோடை வடிவங்கள் (RSS buttons).

இதில நான் என்னத்தை சொல்ல. வழமையை விட வித்தியாசமா இவை அமைஞ்சிருக்கு. நீங்க உங்கட பதிவில இவற்றை பயன்படுத்திறதெண்டாலும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் காப்புரிமை விலக்கப்பட்டவை.


9 ஆவணி, 2008

Sandy : Flash இல் முப்பரிமாணம் – இலகுவாயும் இலவசமாயும்

நீங்கள் ஒரு Adobe Flash பாவனையாளராக இருந்தால் அல்லது அது பற்றிய ஆர்வம் உள்ளவராக இருந்தால் உங்களுக்குதான் இந்த பதிவு.

Flash மென்பொருளில் இலகுவான அசையும் படங்கள் உருவாக்குவதில் இருந்து மிகவும் சிக்கல் நிறைந்த இணைய மென்பொருள்கள் வரை உருவாக்க முடியும். அது மட்டுமல்லாமல் AIR வெளிவந்த பிறகு பல இயங்குதளத்தில் இயங்கக்கூடிய மென்பொருள்களையும் உருவாக்க முடிகிறது. ஆனால் முப்பரிமாண வடிவங்களை உருவாக்குவதற்கும், எமக்கு ஏற்ற வகையில் அசைய வைப்பதற்கும் வேறு மென்பொருள்களையே நாடவேண்டிய தேவை இருந்து வந்தது.

இதற்கு தீர்வாக வந்துள்ளதுதான் Sandy 3D Engine. இது ActionScript மொழியினை கொண்டு உருவாக்கப்ட்டுள்ள ஒரு கட்டமைப்பு ஆகும்.

sandy logo

இந்த கட்டமைப்பை பயன்படுத்தி இலகுவாக எங்களால் முப்பரிமாண தோற்றங்களை உருவாக்கி கொள்ள முடியவதோடு எமக்கு தேவையான வகையில் அவற்றை அழகுபடுத்தி, அசைவுகளை உருவாக்கி கொள்ள முடியும்.

sandy example

இவர்களது இணையத்தளத்தில் இதனை பயன்படுத்துவதற்குரிய பல்வேறு உதவிக்குறிப்புகளை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். அத்தோடு அதன் மொழி உதவிக்குறிப்பை (documentation) தரவிறக்கிப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

8 ஆவணி, 2008

haXe – புதிய கணினி மொழி

வளர்ந்து வரும் இணைய மற்றும் கணினி சார் மென்பொருள் உருவாக்கத்திற்கு புதிய வரவாகி உள்ளது haXe எனும் கணினி மொழி. இந்த மொழியினை பயன்படுத்தி அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கக்கூடிய மென்பொருட்களை உருவாக்கி கொள்ள முடியும்.

haxe logo

haXe மொழியில் எழுதப்பட்ட ஒரு நிரலை நாங்கள் ஜாவாஸ்கிரிப்டாகவோ, அக்சன் ஸ்கிரிப்டாகவோ, PHP ஆகவோ அல்லது NekoVM ஆகவோ கொம்பைல் செய்து கொள்ள முடியும்.

haxe programming

இதன் (வின்டோஸ், மக், லினக்ஸ் இயங்குளங்களுக்கிரிய) நிறுவல்களை இங்கு சென்று பெற்றுக்கொள்ளுங்கள். இதன் உதவிப்பக்கங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றையும் இங்கு சென்றால் பார்க்கலாம்.

4 ஆவணி, 2008