Google Knol அனைவருக்கும் – விக்கிபீடியாவிற்கு போட்டியா?

கடந்த மார்கழி மாதம் அல்பா பதிப்பாக கூகிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட knol சேவை இப்பொழுது அனைத்து பயனாளருக்குமாக திறந்து விடப்பட்டுள்ளது. இது விக்கிப்பீடியாவிற்கு போட்டியாக உருவாக்கப்ட்டுள்ளதாக பலர் கருத்துக் கூறி வந்தாலும் கூகிள் தொடர்ச்சியாக அதனை மறுத்து வந்திருக்கிறது. இருந்த போதும் இது ஒரு வகையில் விக்கிப்பீடியாவை ஒத்த ஒரு சேவைதான்.

இவை இரண்டும் ஒரே மாதிரியான சேவையாக தோற்றமளித்தாலும் உண்மையில் இரண்டினதும் பார்வைத்தன்மை அடிப்படையில் வேறுபடுகின்றது. விக்கிப்பீடியா உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தும் அதே நேரம் knol authorship இல் கவனம் செலுத்துகின்றது.

இன்னொரு முக்கியமான விடயம் விக்கிப்பீடியாவை போலல்லாது எங்களால் நாங்கள் உருவாக்கும் கட்டுரைகளின் காப்புரிமையை இங்கு மாற்றி அமைக்க முடியும்.

சரி இங்க வந்து ஒருக்கா சுத்தி பாருங்க.

25 ஆடி, 2008

பொழுது போகேல்லையா.. வாங்க

பெரிசா பொழுது போகேல்லையா?? எதாவது வித்தியாசமா செய்யவேணும் போல இருக்கா? வாங்க வித்தியாசமா கேள்விகள் கேக்கலாம்.

இந்த இணையத்தளத்தில உங்களுக்கு விரும்பின கேள்விகளை கேட்டு வித்தியாசமான பதில்களை பெறலாம். கீழ உதாரணத்திற்கு ஒரு கேள்வியும் அதுக்கு வந்திருந்த முதல் இரண்டு பதிலும்.

21 ஆடி, 2008

துர்க்காபுரம் – தெல்லிப்பளை

நீண்ட நாட்களின் பின்னர் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலிக்கு செல்லும் வாய்ப்பு இன்று கிடைத்தது. வாசலிலேயே அமர்ந்திருந்து கண்களாலேயே காரியங்களை செய்விக்கும் சிவத்தமிழச்செல்வியை தவிர ஏனைய அனைத்தும் அவ்வவ்வாறே அழகாய் இருந்தன.

சில படங்கள் உங்களுக்காக.








18 ஆடி, 2008