Is உளறல் a twitter killer?

நம்ம ரவி அண்ணையின்ர உளறலைத்தான் சொல்லுறன். கன பேர் பார்த்திருக்ககூடும். என்னுடைய பங்குக்கு பதிவாவே போட்டிருக்கு.

ரவிசங்கர் வேர்ட்பிரஸையும் புறொலொக் அடைப்பலகையையும் பயன்படுத்து ருவிட்டர் மாதிரி ஒரு இணையத்தை தொடங்கி இருக்கிறார். நான் போய் சேந்ததோட சரி பெரிசா ஒண்டும் உளறேல்ல. (நம்ம ஊரில இருக்கிற இணைய வசதி அப்படி)

இந்த பதிவு ஏனெண்டா எனக்கு தெரிஞ்சவரையில இனி என்ன செய்யலாம் எண்டுறதுதான்.

Logo – புறொலொக் அடைப்பலகையை அப்படியே பாவிக்காமல் கொஞ்சம் நிறமாக்கி ஒரு logo வும் போட்டா நல்லா இருக்கும்.

வேர்ட்பிரஸ் – ஏன் வேர்ட்பிரஸ்? வேற கனக்க Micro blogging platform கள் இருக்கு. அதுகளையும் ஒருக்கா எடுத்து பாக்கலாம்.

IM இணைப்பு – ருவிட்டர் மாதிரி IM இல மேம்படுத்தல்களை பெறுகிற ஒரு வசதி சேத்தா நல்லா இருக்கும். முடிஞ்சா கைப்பேசிக்கும்.

மென்பொருள் – சுகமா உளறுறதுக்கு, உளறினதுகளை பாக்க எண்டு ஒரு மென்பொருளை உருவாக்கி (AIR, Java) விட்டா இணையத்தளத்துக்கு போகாமலே உளறலாம். குறைஞ்சது ஒரு Firefox addon.

இன்னும் கைவசம் நிறைய ஐடியாக்கள் இருக்குது. இதுகளை முடிச்சாப்பிறகு சொல்லுறன்..

31 ஆடி, 2008

Cuil புதிய தேடுபொறி – கூகிளுக்கு போட்டியா??

இணையத்தில் தேட பல தேடுபொறிகள் இருந்தாலும் (Yahoo, Live) பலரது தெரிவாகவும் இருப்பது கூகிள் தேடுபொறிதான். இப்பொழுது அதற்கு போட்டியாக cuil எனும் தேடுபொறி வெளிவந்திருக்கின்றது.

cuil logo

ஏறத்தாள கூகிளை விட 120 பில்லியன் இணையப்பக்கங்களில் அதிகமாக அதாவது 1.12 டிரில்லியன் பக்கங்களில் தேடலை மேற்கொள்ளுவதாக இந்த தேடுபொறி அறிவித்துள்ளது. (கூகிள் 1 டிரில்லியன் பக்கங்களில் தேடுதலை செய்வதாக சில நாட்களின் முன் அறிவித்திருந்தது.)

இந்த தேடுபொறியினை மற்றைய, “தினமும் தோன்றும்” தேடுபொறிகள் போல எண்ணிவிட முடியாத அளவிற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன.

  • ஒன்று இந்த தேடுபொறியினை உருவாக்கி இருப்பவர்கள் முன்னைநாள் கூகிள் பணியாளர்கள்
  • இரண்டு இவர்கள் இதில் ஏற்கனவே 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டிருக்கிறார்கள்.

ஆனால் இது இன்னமும் பீற்றா வடிவில் தான் இருக்கிறது. தேடும் சொல்லிற்கேற்ப related category இனை காட்டுவது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.

Cuil related category

இத்தேடுபொறியும் கூகிளை போலவே மிக வேகமாக தேடுவதாக எனக்கு படுகிறது. ஆனா தமிழில தேடினா ஒரு பதிலும் இல்லை.

cuil search result

29 ஆடி, 2008

NimbleX – New potable linux

லினக்ஸ் இயங்குதளம் அறிமுகமான காலத்திலிருந்தே பல்வேறு லினக்ஸ் வெளியீடுகளை நாங்கள் கண்டு வருகின்றோம். அவற்றில் அனேகமானவை எம்மை மென்பொருள்களை தேடி அலைய வைக்கும் வகையைச் சேர்ந்தவை. உபுந்து போன்ற சில வெளியீடுகள் இலகுத்தன்மை மற்றும் நிரல்கள் தொடர்பில் பெருமளவு மேம்பட்ட தன்மையை காட்டுவதனால் பிரபலமடைந்திருக்கின்றன.

அந்த வகையில் எமது flash memory இல் கூட நிறுவக்கூடிய வசதியுடன் 200 ஆடி அளவுடைய புதிய NimbleX லினக்ஸ் பதிப்பு காணப்படுகிறது. இது ஏறத்தாள Firefox, K3B, XMMS, MPlayer, Gimp போன்ற 550 மென்பொருள்களை உள்ளடக்கி உள்ளது. இதனை Virtual box இலும் நிறுவிக்கொள்ள முடியும்.

பிறகென்ன தரவிறக்கி ஒருக்கா கிண்டிப்பாருங்கோ..

27 ஆடி, 2008