நீங்களும் வேர்ட்பிரஸ் குருவாகவேணுமோ?? – பாகம் 1

வேர்ட்பிரஸ் எண்டதுமே உங்களுக்கு சிலவேளை ரவிசங்கரை தான் ஞாபகம் வரும். அனேகமா தமிழில வேர்ட்பிரஸ் கதைக்கிற ஆக்களெண்டா ரவிசங்கர், மயூரேசன், மாஹிர் இடைக்கிட நானும் தான். ஏன் நீங்களும் வேர்ட்பிரஸ் பற்றி கதைக்ககூடாது?? ஒரு இரண்டு பதிவாவது வேர்ட்பிரஸ் பற்றி கதைக்க கூடாது?? எண்டு கேட்டால், ஒண்டும் தெரியாது எண்டு சொல்லுறியளோ?? சரி நீங்களும் கதைக்கிறதுக்கேத்தமாதிரி எனக்கு தெரிஞ்சளவுக்கு தொடரா சொல்லப்போறன் கேட்டுக்கொள்ளுங்கோ.. பகுதிகளை தவறவிடக்கூடாது எண்டு நினைக்கிறாக்கள் பக்கத்தில பேப்பர் வாசிக்கிற பையன் மேல சொடுக்கி செய்தியோடைய எடுத்துக்கொள்ளுங்கோ..

சரி தொடங்க முதல் ஒரு கேள்வி. அது சரி ஏன் வேர்ட்பிரஸ் பற்றி தெரிஞ்சுகொள்ள வேணும்??

இந்த உலகத்தில பல்வேறு பதிவுக்கான இணைய மென்பொருள்கள் (blogging) இருந்தாலும், வேர்ட்பிரஸ் மாதிரி ஒரு கையாள்வதற்கு இலகுவான, இலகுவில் எங்கள் தேவைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ள கூடியதான, மிகவும் சிறப்பான உதவிக்குறிப்புக்களை கொண்ட ஒரு புளொக்கிங் மென்பொருள் வேறொன்றும் இல்லை. இதனால் இது உலகில் மிக அதிகளாவன பயனாளர்களை கொண்டுள்ளது. இதனால் இப்பொழுது வேர்ட்பிரசுக்கான அடைப்பலகைகள் மற்றும் பிளகின்சை உருவாக்குவதே மிகவும் பணம் தரும் தொழிலாக கூட அமைந்துள்ளது. (நான்கூட கொஞ்சம் உழைக்கிறன் எண்டா பாத்துக்கொள்ஞங்கோவன்.)

சரி அப்ப வேற வேற என்ன புளொக்கிங் மென்பொருள்கள் இருக்கு??
Blogger
Blog City
Yahoo 360
MSN Spaces
Six Apart
ExpressionEngine
Serendipity
boastMachine
b2evolution
Nucleus CMS
Textpattern

சரி இப்ப விசயத்துக்கு வருவம்.
உங்களிட்ட ஒரு இலவச வேர்ட்பிரஸ் கணக்கு இருந்தாலும் (wordpress.org) நீங்கள் வேர்ட்பிரஸ் பற்றி நான் சொல்பவற்றை செய்து பார்க்கவும், நீங்களாகவே கொஞ்சம் கிண்டிப்பார்ககவும் அது போதுமானதல்ல. எனவே உங்களுக்கு ஒரு தனியாக நிறுவப்பட்ட ஒரு வேர்ட்பிரஸ் வேண்டும். (ஊரோடி இணையத்தளம் போல). அதுக்கா நீங்கள் எல்லாரும் என்னட்ட உடன ஒரு வழங்கியும் ஒரு டொமைனும் வாங்கத் தேவையில்லை. நீங்களே உங்கட கணினியை ஒரு வழங்கியா மாற்றி இவற்றை இலவசமாக செயல்படுத்தி பார்க்க முடியும்.

கணினியை உங்களுக்கேற்ற வழங்கியாக மாற்றல்.
உங்கள் கணினியை வேர்ட்பிரஸ் இயங்கக்கூடிய வழங்கி ஒன்றாக மாற்றுவதற்கு உங்களுக்கு கீழ்வரும் மென்பொருட்கள் தேவை
1. PHP
2. MySQL
3. Apache

அத்தோடு இலகுவாக அலளுஞடு இல் வேலை செய்ய phpMyAdmin.

இவை மூன்றையும் நீங்கள் தனித்தனியே அவற்றிற்குரிய இணையத்தளங்களில் இருந்து தரவிறக்கி நிறுவி ஒத்திசைவாக்கி பயன்படுத்த முடியும். நாங்கள் அது தொடர்பாக இங்கு பார்ப்பது எங்களுக்கு தேவையற்றதோடு அது மிகுந்த நீண்ட சந்தேகங்களை அதிகளவில் எழுப்பக்கூடிய செயன்முறையாகும்.

எனவே நாங்கள் இலகுவாக WAMPP அல்லது XAMPP இனை தரவிறக்கி நிறுவி பாயன்படுத்தி கொள்ளுவோம். இம்மென்பொருள் எமது கணினையை மென்பொருளாக மாற்றி பயன்படுத்த தேவையான மென்பொருட்கள் அனைத்தையும் உள்ளடக்கியது.

இப்பொழுது இங்கே சென்று மிக பிந்திய WAMPP (for windows) அல்லது XAMPP (for Mac OS X) இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். (phpMyAdmin கூட இதனுடன் இணைந்து வருகின்றது.)

இப்பொழுது மென்பொருளை திறந்து கீழே படத்தில் காட்டியது போல உங்களுக்கு தேவையானவற்றை தொடக்கி விடுங்கள். (வின்டோசிலும் இவ்வாறுதான் இருக்கும்)

இப்பொழுது உங்கள் இணைய உலாவியை திறந்து உங்கள் localhost (127.0.0.1) இனை திறந்து கொள்ளுங்கள். கீழே இருப்பது போன்ற ஒரு பக்கம் திறக்கும். திறக்காது விட்டால், உங்கள் நிறுவலில் அல்லது வேறு எங்கோ பிழை நடந்து இருக்கின்றது.

இப்பொழுது நீங்கள் இந்த தொடக்க இணையப்பக்கத்தை சரியாக கவினித்தால், உங்கள் வழங்கியின் பாதுகாப்பு சரிவரி கவனிக்கபடவில்லை என்று சொல்லுவதை காணலாம். நீங்கள் இதனை ஒரு சோதனைக்காகவே பயன்படுத்த போவதனால், மற்றவர்களை இதனை அணுக அனுமதிக்க போவதில்லையாதலால், இப்பிரச்சனையை பெரிதாக கருதாமல் பேசாமல் விட்டுவிடுங்கள். ஏனென்றால் சிலவேளைகளில் அவர்கள் சொல்லி இருப்பது போல அவற்றை சரி செய்ய முற்பட்டு வழங்கி மொத்தமாக இயங்காமல் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. வழங்கியின் பாதுகாப்பு தொடர்பான செயன்முறைகளை பிறிதொரு பதிவில் விரிவாக பார்க்க முயல்வோம்.

இப்பொழுது கருவிகளில் நிரற்படுத்தபட்டிருக்கும் phpMyAdmin இற்கும் சென்று சரியாக இயங்குகின்றதா என சரிபார்த்து கொள்ளுங்கள்.

உங்கள் வழங்கியன் பிரதான public_html கோப்புறைக்கு இணையான கோப்புறை உங்கள் நிறுவலின் உள் htdocs என்ற பெயரில் கோப்புறையாக காணப்படும். இங்குதான் நீங்கள் தரவேற்றும் கோப்புகள் அனைத்தும் சென்று சேமிக்கப்படும்.

வேண்டுமானால் உங்கள் இலகுத்தன்மைக்காக அதன் ஒரு shortcut இனை டெக்ஸ்ரொப்பில் என்னைப்போல உருவாக்கி கொள்ள முடியும்.

Shortcut in desktop

இப்பொழுது உங்கள் கணினியை வேர்ட்பிரஸ் இயங்கக்கூடிய ஒரு வழங்கியாக மாற்றியாகி விட்டாச்சு, இப்பொழுது வேர்ட்பிரஸை நிறுவவேண்டியது தான் மிச்சம்.

சரி இண்டைக்கு அவ்வளவுதான். அடுத்த பதிவில் வேர்ட்பிரஸ் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பாக பார்ப்போம். நல்லாயிருக்கா பின்னூட்டத்தில சொல்லுங்கோ..

குறிச்சொற்கள்: , , , ,

9 பின்னூட்டங்கள்

  1. ila சொல்லுகின்றார்: - reply

    தனித் தளத்துக்குன்னு வேர்ட்பிரஸ் சுலபமா இருக்குன்னு தெரியவெச்சதுக்கு நன்றி. எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கு, இந்தத் தொடர் அதுக்கு எல்லாம் பதில் அளிக்கும்னு நினைக்கிறேன்

  2. மயூரேசன் சொல்லுகின்றார்: - reply

    அட அட அட அட … எழுதுங்க எழுதுங்க.. காத்திருக்கின்றோம்…!!!

    WAMP நிறுவுதல் பற்றி ஏற்கனவே நானும் ஒரு பதிவு எழுதினேன்.

  3. Lenin சொல்லுகின்றார்: - reply

    மிக்க நன்றி பகீ அவர்களே.. அருமையான ஒரு தொடர். ஆவலுடன் கற்கிறேன்..

    நன்றி..

  4. Lenin சொல்லுகின்றார்: - reply

    எனக்கு இன்னுமொரு சந்தேகம் உண்டு பகீ.

    அடோப்பிம் ப்ளக்ஸ் மென்பொருள் எதற்கு..? அதைப்பற்ரி கொஞ்சம் சுருக்கமாக விளக்க இயலுமா?

  5. பகீ சொல்லுகின்றார்: - reply

    இளா, வாங்க.

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. தொடர்ச்சியாக எழுதுவேன், உங்கள் சந்தேகங்களுக்கு போதுமான விடைகள் கிடைக்காவிடின், பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

  6. பகீ சொல்லுகின்றார்: - reply

    மயூரேசன் வாங்க,

    நிச்சயம் தொடர்ச்சியாக எனக்கு தெரிந்தவரையில் எழுதுகின்றேன்.

    லெனின் வாங்க,
    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இத்தொடர் முடிந்தவுடன் அடொப் பிளெக்ஸ் பற்றி எழுதுவதற்கு முன்னரே எண்ணியிருந்தேன். நிச்சயமாக அதனை விரைவு படுத்துவேன்.

  7. மயூரேசன் சொல்லுகின்றார்: - reply

    ஏதோ நல்லபடியா மாத்திட்டம்!

  8. […] இன்னமும் பார்க்கவில்லையாயின் இங்கு சென்று அதனை வாசித்து கொள்ளுங்கள். […]

  9. Varun சொல்லுகின்றார்: - reply

    Please let me know how you are writing tamil posts.Pls help me