பதிவுகள்

iOS 4 - with all the new features, render Tamil beautifully. (2 months ago)

இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க.

இந்த பதிவை நீண்டநாட்களாகவே எழுதவேண்டும் எனது நண்பர்கள் பலர் கேட்டுவந்தார்கள். இப்பொழுதுதான் அதற்கான நேரமும் அதற்கான தகுதியும் எனக்கு வந்திருக்கின்றது என நினைப்பதால் இப்பதிவை எழுதுகின்றேன். இதுதொடர்பாக உங்களுக்கு எழும் கேள்விகளை பின்னூட்டத்தில் கேளுங்கள். என்னால் முடிந்தளவு பதிலளிக்க முனைகின்றேன்.

பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று வலைப்பதிவெழுதுவது மற்றையது இணையத்தூடு வேலை செய்வது. இரண்டுமே ஆர்வமிருந்தால் இலகுவானதுதான்.

முதலாவதாக வலைப்பதிவெழுதுவதன் மூலம் எவ்வாறு பணம் பெறலாம் என்பதனைப் பார்ப்போம்.

பொதுவாக வலைப்பதிவு மூலம் சம்பாதிப்பதற்கான வழி விளம்பரங்களை வலைப்பதிவுகளில் இடுதல். பொதுவாக இவை உங்கள் பதிவு மிகப்பிரபலமாக இல்லாது விடின் பெருமளவு பணத்தினை உருவாக்கி தரமாட்டா. ஆனாலும் பொழுதுபோக்காக நாங்கள் செய்கின்ற வலைப்பதிவு சிறிதளவு பணத்தினை ஈட்டித்தருமாயின் அது நல்லதுதானே?

இவ்வாறு விளம்பரங்களை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் இருந்தாலும் பலரும் அறிந்தது. கூகிள் அட்சென்ஸ்.

இங்கு செல்வதன் மூலம் ஒரு கணக்கை உங்களுக்கென்று உருவாக்கி கொண்டு உங்கள் வலைப்பதிவெங்கும் அவர்களது விளம்பரங்களை கீழே காட்டப்பட்டது போல வெளிப்படுத்த இயலும். பொதுவாக விளம்பரங்களின் மேல் சொடுக்கப்படுகின்ற ஒவ்வொரு சொடுக்கிற்கும் உங்களுக்கு பணம் கிடைக்கும்.(இந்த பதிவு பிடிச்சிருந்தா நீங்களும் கீழே இருக்கிற எனது விளம்பரத்தில் சொடுக்கி உதவலாம்)

இதைவிட பல பிரபல நிறுவனங்கள் வித்தியாசமான முறைகளின் மூலம் உங்கள் வலைப்பதிவிற்கு விளம்பரம் தரத்தயாராக உள்ளார்கள். இவர்களில் நான் பயன்படுத்துவது textlinkads நிறுவனத்தை. இவர்கள் உங்கள் வலைப்பதிவில் இடுகின்ற ஒவ்வொரு தொடுப்பிற்கும் மாதாமாதம் இவ்வளவு பணம் என்ற அடிப்படையில் பணம் வழங்குகிறார்கள். எவ்வளவுதரம் சொடுக்கியது எனப்து போன்ற விபரங்களை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கீழே சில திரைவெட்டுகளை பாருங்கள்.

இது எனது வலைப்பதிவில் இருக்கும் ஒரு தொடுப்பு சம்பந்தமான விபரம்.

இது ஒரு மாதத்தில் எனது வலைப்பதிவில் இருந்த தொடுப்பகளுக்கு மொத்தமாக அவர்கள் செலுத்திய பணம் பற்றிய விபரம்.

மாத முடிவில் உங்கள் கடனட்டைக்கு அல்லது உங்கள் வீட்டிற்கு காசோலையாக பணத்தை அனுப்பிவிடுவார்கள்.

கீழே இருக்கின்ற தொடுப்பில் சொடுக்கி நீங்களும் ஒரு கணக்கினை ஆரம்பித்து அவர்களது விளம்பரங்களை வெளியிட ஆரம்பியுங்கள்.

மேலும் இவ்வாறான சில இணையத்தளங்கள் பற்றிய விபரங்களை மேலும் ஒரு பதிவில் இடுகின்றேன். இப்பொழுது இரண்டாவது முறைக்கு போவோம்.

இணையத்தினூடாக வேலை செய்தல்.

இதற்கு நீங்கள் வலைப்பதிவு ஏதும் வைத்திருக்க தேவையில்லை. உங்களின் திறமைக்கேற்றவாறு பணம் சம்பாதிக்க முடியும். திறமையிருக்கின்ற அல்லது விருப்பம் இருக்கின்ற பலருக்கு இருக்கின்ற பிரச்சனையே இதற்கான வழிமுறைகள் தெரியாமைதான். கீழே அவற்றிற்கான சில வழிமுறைகளை பார்ப்போம்.

இதற்கு பொதுவாக இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று இதற்கான வழிகளை செய்துதருகின்ற இணையத்தளங்கள் மற்றையது இணையத்தளமூடாக வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள்.

இதில் முன்னைய வழிமுறையைப்பற்றி இப்போது பார்ப்போம்.

இணையத்தூடாக வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்து தரும் இணையத்தளங்கள் பல உள்ளன. அவற்றில் என்னைப்பொறுத்தவரை இலகுவானது என கருதும் இணையத்தளங்கள் இரண்டு கீழே.

Elance



Elance

மேலே சொடுக்கி இந்த இணையத்தளத்தில் நீங்கள் ஒரு கணக்கினை ஆரம்பித்து கொண்டால் உங்கள் திறமைக்கேற்ப வேலைகளை பெற்றுக்கொள்ள முடியும். இங்கு இருக்கின்ற முக்கியமான பிரச்சனை உங்களை நீங்கள் சந்தைப்படுத்துவதுதான். அங்கே உங்களுக்கேற்ற வேலை ஒன்றினை நீங்கள் கண்டுகொண்டால் உடனே நீங்கள் ஏன் அந்த வேலைக்கு தகுதியானவர் என்றும் உங்களால் எவ்வாறு அந்த வேலையை முடித்துக்கொடுக்க முடியும் என்றும் ஒரு கோரல் (Bid) ஒன்றினை செய்ய வேண்டும். நீங்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். இங்க ஆகக்குறைந்த தொகை 50 அமெரிக்க டொலர்கள் என்பதால் சிறிய வேலைக்கே நீங்கள் நல்ல பணத்தினை சம்பாதித்து கொள்ள முடியும்.

வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் வேலை வகைகள்.

GetAFreelancer

இந்த இணையத்தளமும் மேலே குறிப்பிட்டதைப்போன்றதுதான். இங்கு ஆகக்குறைந்த தொகை 30 அமெரிக்க டொலர்கள்.

நாங்கள் இப்பதான் வலைப்பதிவெண்டாலே என்னெண்டு பாத்திருக்கிறம். உதில கேட்டிருக்கிற விசயம் தெரியுமெண்டா நான் ஏன் இப்படி இருக்கிறன். இதைவிட சுகமான வேலை ஏதும் இருந்தா சொல்லு எண்டுற ஆக்களுக்குதான் கீழ இருக்கிற இணைத்தளம்.

Mturk

இந்த இணையத்தளம் அமேசன் நிறுவனத்தின் ஒரு பகுதி. இங்கு நீங்கள் மிகச்சிறயளவு பணத்திற்கு சிறிய சிறிய வேலைகளை செய்ய முடியும். வீட்டில ஒரு பொழுதும் போகேல்ல நல்ல இணைய இணைப்பு இருக்கு எண்டு சொல்லுறாக்களுக்கு இது நல்ல இடம். இந்த படம் நல்லா இருக்கு. இது நல்லா இல்லை எண்டு சொன்னாலே காசு கிடைக்கும்.

போய் ஒரு இரண்டு வேலை செய்து பாருங்க.

இணையத்தளமூடாக வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள்

இரண்டாவது முறையில வேலைகளை தேடிக்கண்டுபிடிக்கிறதே கஸ்டமான வேலை. என்னுடைய பங்கிற்கு கீழ ஒரு தொடுப்பு தந்திருக்கு போய் பாருங்க. அவ்வளவுதான்.

Work with Yaro


அடுத்த பதிவில ஒரு சிறந்த கோரல் (Bid) ஒன்றை எப்பிடி செய்யிறது, எப்பிடி இலகுவா வேலைகள் எடுக்கிறதென்பதை பற்றி விரிவா பாப்பம். தவறவிடக்கூடாதெண்டால் இங்க சொடுக்கி செய்தியோடையை பதிவு செய்து கொள்ளுங்கள்.

கேள்விகள் இருந்தா பின்னூட்டத்தில கேளுங்க. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம்.

35 பின்னூட்டங்கள்


  1. Tamilish.com
    Jan 21, 2009

    இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க….

    பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று வலைப்பதிவெழுதுவது…

  2. நல்ல தகவல் நன்றி.


  3. satheesh
    Jan 21, 2009

    நல்ல தகவல்

    பிளாக்பாஸ்டில் வத்திருந்தால் தான் கூக்ளி போன்ற நிறுவனங்கள் மூலம் பணம் பண்ண முடியுமா?

    வேர்ட்பிரசில் சாத்தியம் தானே. அப்படி இல்லை எனில் கூக்ளி தவிர்த்து மற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை வேர்ட்பிரசில் எவ்வாறு இணைப்பது.

    நன்றி…
    சதீஸ்


  4. மாயா
    Jan 22, 2009

    http://www.inlinks.com/
    Durupal க்கும் Wordpressக்கும் தான் வேலைசெய்யுமாம் :(

    கூகிள் அட்சென்ஸ் மொழி பிரச்சினையென்டு சொல்லுது
    வேறையேதாவது இருக்கா ? ? ? ?


  5. பகீ
    Jan 22, 2009

    சதீஸ்,

    இலவச வேர்ட்பிரஸ் எங்களை வேறு நிரல் கோப்புகளை இணைக்க அனுமதிப்பதில்லை.

    உங்களிடம் சொந்த தளம் ஒன்று வேர்ட்பிரஸில் இருக்குமாயின் உங்களால் கூகிள் அட்சென்ஸை இணைத்துக்கொள்ள முடியும்.


  6. பகீ
    Jan 22, 2009

    இலங்கேஸ்வரன் வாங்க,

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.


  7. ila
    Jan 22, 2009

    nanri bagee


  8. sasi
    Jan 23, 2009

    Very usefull feed back


  9. கடகம்
    Jan 23, 2009

    நல்ல தகவல் நன்றி.
    அடுத்த பதிவினை விரைவாக இடுங்கள்.
    [(Bid) ஒன்றை எப்பிடி செய்யிறது, எப்பிடி இலகுவா வேலைகள் எடுக்கிறதென்பதை பற்றி ]


  10. பகீ
    Jan 27, 2009

    மாயா வாங்க,

    Inlinks HTML நிரலை பெற்றுக்கொண்டால் எங்கு வேண்டுமானாலும் உங்களால் அதனை சேர்க்க முடியும். அட்சென்ஸ் தொடர்பான கேள்விக்கு பகுதி இரண்டில் பதிலளித்திருக்கிறேன் பாருங்கள்.

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.


  11. பகீ
    Jan 27, 2009

    இளா, சசி வாங்க,

    உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.


  12. பகீ
    Jan 27, 2009

    கடகம் வாங்க,

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    கோரல் தொடர்பான பதிவு பகுதி மூன்றில் இடப்பட்டுள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.


  13. ponvendhan
    Jan 27, 2009

    Inlinks எனது கணக்கை ஏற்றூக்கொள்ள மறுக்கிறது! Wordpress 2.0 ஐ மட்டுமே ஏற்கும்போல (wordpress 2.0 என்றால் என்ன?) நான் wordpress ல் இலவச கணக்கு ஒன்று வைத்துள்ளேன்! நான் Wordpress 2.0 ஐ எவ்வாறு பெறுவது? அதற்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்?


  14. பகீ
    Jan 27, 2009

    பொன்வேந்தன் வாங்க,

    வேர்ட்பிரஸ் இலவச கணக்கு ஒன்றினை நீங்கள் வைத்திருந்தால் உங்களால் inLinks விளம்பரங்களை அதில் விளம்பரப்படுத்த முடியாது. inLinks மட்டுமென்றல்ல வேறெந்த வெளி நிரல்களையும் அதனுடன் இணைத்துக்கொள்ள முடியாது.

    அவர்கள் வேர்ட்பிரஸ் எனக் குறிப்பிடுவது, வேர்ட்பிரஸினை நீங்கள் உங்கள் வழங்கியில் நிறுவிக்கொள்ளுவதன் மூலம் வைத்திருக்கும் வலைப்பதிவினை ஆகும். வேர்ட்பிரஸ் 2 என்பது அதன் இரண்டாம் பதிப்பு (அதாவது புதிய பதிப்பு – இப்பொழுது 2.7) இதனை நீங்கள் http://www.wordpress.org இலிருந்து இலவசமாக தரவிறக்கி கொள்ளமுடியும். இதனை நிறுவுவதற்கான வழங்கிக்கு நீங்கள் செலுத்தும் பணமே உங்களுக்கான செலவாகும். பல விலைகளில் வழங்கி இருக்கிறது. (ஆண்டுக்கு 50 அமெரிக்க டொலர்களில் இருந்து 500 வரை)

    தமிழ் வலைப்பதிவுலகில் பலர் இவ்வாறாக தளங்களை வைத்திருக்கின்றார்கள். ஊரோடியும் கூட அப்படியான ஒரு தளம்தான்.

    மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.


  15. Raji
    Jan 29, 2009

    for tamil blog,how can i get income from adsense?
    google rejected my adsense form due to this reason only(tamil)…
    give some help bagee!


  16. பகீ
    Jan 29, 2009

    றஜி வாங்க,

    உங்கள் கேள்விக்கான பதில் பகுதி இரண்டில் இருக்கிறது பாருங்கள்.


  17. shankar
    Feb 10, 2009

    You are doing very good article, Thanks.amazon m turk now says that they will not provide jobs to other countries except us. isn’t it?
    I tried to open an account. In the form itself they told this. do you still do any business with them?
    how to overcome this?


  18. ponvendhan
    Mar 06, 2009

    நண்பரே!

    உங்களுக்கு எனது நன்றிகள்! உங்களின் உதவியால் நான் ரூ.8000 Amazon Mturk ல் விண்ணப்பித்துள்ளேன்.

    ஆனால் அந்த காசோலை எப்பொழுது வந்து சேரும் என தெரியவில்லை! நான் ஏற்கனவே PAN card verify செய்துவிட்டேன்!

    உதவுங்கள்! நன்றி


  19. vijayaragavan
    Mar 12, 2009

    please give me your phone number……


  20. பகீ
    Mar 13, 2009

    சங்கர் வாங்க,

    எனக்கு வேலை எடுக்கிறதில எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.

    பொன்வேந்தன் வாங்க,

    உங்கள் பின்னூட்டத்தினை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது, நன்றி.


  21. பகீ
    Mar 13, 2009

    விஜயராகவன் வாங்க,

    உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருக்கின்றேன் பாருங்கள்.


  22. thamayanthy
    Mar 21, 2009

    thank u bakeerathan u done grate job, i also try.


  23. பகீ
    Apr 01, 2009

    தமயந்தி,

    வாங்க உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. சந்தேகம் ஏதாவது இருந்தா கேளுங்க.

    நீங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கிறீர்களா?


  24. SELVARANI
    Jul 22, 2009

    am


  25. SELVARANI
    Jul 22, 2009

    very very nice


  26. ஆ.ஜெகன்னாதன்
    Oct 07, 2009

    migavum nalla thagaval .

    naan oru oru engineer . Enakku Computer nantraga use panna theriyum.

    Inter job moolamaaga sambathikka aasaippadugiren .

    Mudindhaaal konjam udhavavum


  27. Jeyasree
    Oct 31, 2009

    hi
    It is really very good article.I am updating my software skills after few years break.Hope this site useful to me.thanks for your article,
    Regards,
    ljeyasree@yahoo.co.in


  28. sai
    Nov 16, 2009

    Hai anna!
    http://www.richptc.com
    link click seitha 1$ give.
    Ivarkalai nampalama..
    ple reply.


  29. Madurai Jayasri
    Nov 26, 2009

    Adsenz il ’search’ enkira varathai ubayogikalama?

    enathu URL i parthu seiya vendiya thiruthangal patri kuravum.

    Ubayokika kudatha varigal, varthaigal patri kuravum anna.


  30. Shankar
    Dec 16, 2009

    very nice


  31. Mani.G
    Dec 30, 2009

    http://www.freewebs.com ல் இலவச வெப்தளத்தை எவ்வாரு உருவாக்குவது எப்படி?,

    உருவாக்கி வெப்தளத்தில் கூகிள் அட்சென்ஸை இணைத்துக்கொள்ளவது எப்படி?

    நன்றி.


  32. Tharshi
    Feb 02, 2010

    நான் website open செய்தால் ஒவ்வொரு மாதமும் காசு கட்ட வேண்டுமா?


  33. பகீ
    Feb 02, 2010

    தர்சி அது நீங்கள் எவ்வகையான அல்லது எவ்வாறான இணையத்தளத்தை உருவாக்குகிறீர்கள் என்பதை பொறுத்தது. ஊரோடிக்கு நான் மாதம் மாதம் சிறிதளவு பணம் கட்டுகின்றேன். நீங்கள் இலவசமாக வேர்ட்பிரஸ் சேவையை அல்லது புளொக்கர் சேவையை பயன்படுத்தி வலைப்பத்திவொன்றை உருவாக்கிக்கொள்ள முடியும்.


  34. பகீ
    Feb 02, 2010

    மணி, நீங்கள் உங்களுக்கு விரும்பியவாறு இணையத்தளம் ஒன்றை உருவாக்கி (இப்பொழுது பல மென்பொருள்களை பயன்படுத்தி இதனை செய்ய முடியும்) அதனை freewebs இல் upload பண்ணி விட்டால் சரி.


  35. பகீ
    Feb 02, 2010

    Sai நம்பேலாது.

உங்கள் கருத்தினை சொல்லுங்கள்

முன்னம் அலட்டியது