இலக்கியம்

இலக்கியம் சார் பதிவுகள்.

கவிஞர்கள்

இது பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையாகும். இலக்கிய வாசிப்பில் விருப்புடையோருக்காக இங்கே பதிவாகின்றது. கவிதைகள் புத்தக வடிவத்திலும் பத்திரிகைகளிலும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. கவிதை விமரிசனங்களும் நடக்கின்றன. மேலைத்தேசத்திலே ஒருவர் ஒன்று செய்தால் அதற்கு நூறு விமரிசனம் வந்துவிடும், இங்கே அவ்வளவு தூரம் அந்தத்துறை விரியவில்லை என்று ஒரு விமரிசனர் அழுகின்றார். பாவம் இனி அவர் கண்ணீர் வடிக்க வேண்டா. தினசரிப்பத்திரிகைகளிற் கூட ஒரு பகுதி கவிதை ...

மேலும் வாசிக்க →

தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டு

யோகர் சுவாமி அருளிச்செய்த நற்சிந்தனையில் வரும் பாடல் இதுவாகும்.தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டுஉய்யும் மார்க்கம் உணர்ந்தோர்க் குண்டுபொய்யும் பொறாமையும் புன்மையோர்க் குண்டுஐயன் அடியிணை அன்பர்க் குண்டேகல்லா தார்பாற் கபட முண்டுஎல்லா ரிடத்து மீச னுண்டுவில்லா ரிடத்தில் வீத்தொழில் உண்டுஎல்லாச் சக்தியும் இறைபால் உண்டேதேடுவார் மாட்டுச் செல்வம் உண்டுதேடுவார் மாட்டுத் தெய்வம் உண்டுநாடுவார் மாட்டு நன்மை உண்டுபாடுவார் மாட்டுப் பரமன் உண்டேசீவன் சிவனெனல் தேறினோர்க் குண்டுஆவதும் அழிவதும் அசடர்க் குண்டுஈவது விலக்கார்க் ...

மேலும் வாசிக்க →

ஈழத்து இலக்கிய வழி

இந்த கட்டுரை இலக்கிய வழி நூலில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சைவாசிரிய கலசாலையிலே 30 ஆண்டுகளாக சைவம் தமிழ் இரண்டையும் இரு கண்களென பேணி வளர்த்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வருங்காலத்தோர்க்காய் எழுதிய முன்னுரையாகும். தமிழ் நாட்டிலே தமிழ் வரலாறு அகத்தியரிலிருந்து தொடங்குகின்றது. ஈழநாட்டிலே தமிழ் இலக்கிய வரலாறு அரசகேசரியிலிருந்து தொடங்குகின்றது.ஆங்கிலேயரும் அவர்களுக்கு முன் ஒல்லாந்தரும் அவர்களின் முன் போர்த்துக்கீசரும் ஈழநாட்டை ஆண்டார்கள். இற்றைக்கு நானூறு வருடங்களிற்கு முன் அதாவது போர்த்துக்கீசருக்கு ...

மேலும் வாசிக்க →

கந்தபுராணத்தில் ஒரு பாடல்

இந்ததிருப்பாடல் கந்தபுராணத்தில் தேவகாண்டத்தில் தெய்வயானையம்மை திருமண படலத்தில் வருகின்றது. முசுகுந்தச் சக்கரவர்த்தி ஆறுமுகப்பெருமானின் திருமணத்திற்கு செல்லும்போது நடக்கின்ற காட்சிகளில் ஒரு பாடலாய் நிற்கின்றது. கந்த புராணம் இப்பிடி இருக்கும் எண்டு தெரிஞ்சிருந்தா ஏன் நம்ம பையன்கள் எல்லாம் கந்தபுராணம் படிக்காம போகப்போறாங்க?காமரு கொங்கையாற் கரிம ருப்பினைஏமுற வென்றுளார் யானைக் கோடுகள்மாமருங் கடைதலும் மருண்டங் கோடினார்தாமுதற் செய்வினை தம்மைச் சூழ்ந்தென.ஆண்யானையின் கொம்பு, பெண்யானையை அதன் மேல் மையல் கொள்ளும்படி வைக்கும் எழில் ...

மேலும் வாசிக்க →

நற்சிந்தனை பற்றி…..

சிவயோக சுவாமிகள்(யோகர் சுவாமிகள் பற்றி அறிய http://kanaga_sritharan.tripod.com/yogaswami.htm இங்கு செல்லுங்கள்) அருளிய திருப்பாடல்களே நற்சிந்தனை எனப்படுவன. இவை திங்கள்தோறும் சிவதொண்டன் இதழில் வெளிவந்தவை (சிவதொண்டன் இதழ் இன்றளவும் சிவதொண்டன் சபையினரால் வெளியிடப்படுகின்றது). பின்னர் இவை 1959 இல் தொகுக்கப்பெற்று புத்தகமாக வெளிவந்தன. இப்பாடல்கள் அனைத்தும் எளிய இனிய தமிழ் நடையில் அமைந்தன. நற்சிந்தனைச் செய்யுள்கள் ஞானப்பொக்கிசமாயும், வேதோபநிடத ஆகம சாரமாயும் விளங்குவன.தன்னை அறிந்தால் தவம் வேறில்லை.தன்னை அறிந்தால் தவம்வே றில்லைத்தன்னை ...

மேலும் வாசிக்க →