வேர்ட்பிரஸ் 3 – புதிய வசதிகள்

மிகப்பிரபலமான வேர்ட்பிரஸ் வலைப்பதிவு மென்பொருள் தனது 3.0 வது பதிப்பினை எட்டியுள்ளது. (இப்பொழுது RC1 வெளியிடப்பட்டுள்ளது, விரைவில் பயனர் பாவனைக்கு வரும்). இந்தப்பதிப்பில் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு என்பதனைத்தாண்டி Content Management System என்றபக்கத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக தெரிகின்றது. இப்பொழுது இப்புதிய பதிப்பில் கிடைக்கும் சில முக்கிய வசதிகளை பார்ப்போம்.

நிறுவுதல்.

வழமைபோன்ற மிக இலகுவான நிறுவதலை இந்த பதிப்பு கொண்டிருந்தாலும் பயனாளர்கள் தங்களுக்குரிய பயனாளர் பெயரையும், கடவுச்சொல்லையும் நிறுவலின்போதே தேர்ந்தெடுக்கும் வசதி இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. சாதாரண பயனாளர்களுக்கு தங்கள் வலைப்பதிவின் பாதுகாப்பினை ஒரு படி அதிகமாக்கக்கூடியதானதாக இந்த வசதி உள்ளது.

Installation window

அடைப்பலகை

இவ்வளவு காலமும் இருந்துவந்த Kubrick அடைப்பலகை மாற்றப்பட்டு அழகிய புதிய அடைப்பலகை இந்த பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

Current Default theme

புதிய இடுகை வகைகள். (custom post types)

வேர்ட்பிரஸ் பொதுவாக இடுகைகள், பக்கங்கள் என்ற இரண்டு வகையான இடுகைகளையே செய்ய அனுமதிக்கும். ஆனால் இந்த பதிப்பில் நீங்கள் விரும்பினால் உங்களுக்கு விரும்பியவாறான ஒரு இடுகை வகையினை உருவாக்கிகொள்ள முடியும். உதாரணத்திற்கு நீங்கள் தொடர்ச்சியாக புத்தகங்களை அறிமுகம் செய்பவரானால் Add new post அல்லது Add new page என்பது போல Add new book என்ற ஒரு இடுகை வகையினை உருவாக்கி வைத்துக்கொண்டு பயன்படுத்த முடியும். உள்ளடக்கம், தலைப்பு மட்டும் என்றல்லாது நீங்கள் விரும்பினால், விலை, பதிப்பகம் போன்ற பிற தகவல்களையும் உங்களால் இணைத்துக்கொள்ள முடியும்.

Custom post image

Menu

வேர்ட்பிரஸ் 3.0 இல் உள்ள மற்றுமொரு முக்கிய அம்சம் சிறப்பாக Menu க்களை கையாள முடிகின்றமையாகும். வேர்ட்பிரஸின் முன்னைய பதிப்புகளில் வேர்ட்பிரஸை நன்கு மேம்படுத்த தெரிந்தவரால் மட்டுமே மெனுக்களை நன்கு கையாள முடிந்தது. இப்பொழுது ஒரு சாதாரண பயனாளராலும் இலகுவாக இதனை செய்ய முடியும்.

New menu options

WordPress MU உள்ளடக்கப்பட்டிருத்தல்.

இதன்மூலம் நீங்கள் உங்கள் வலைப்பதிவுகளை ஒரு ஒன்றிணைக்கப்பட்ட தளமாக இலகுவாக மாற்றிக்கொள்ள முடியும்.

networked site

உங்கள் தளத்தில் இந்த வசதியை கொண்டுவர கீழ்வரும் நிரலை நீங்கள் உங்கள் wpconfig.php கோப்பில் இணைக்க வேண்டும்.

define('WP_ALLOW_MULTISITE', true);

மேம்படுத்தப்பட்ட Export வசதி.

இது உங்கள் வலைப்பதிவை நீங்கள் இடம்மாற்றும்போது பயன்படும். இப்பொழுது அதிக வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Export options

29 வைகாசி, 2010

Boks – Visual gird editor

நேற்றைய எனது பதிவில் இணையத்தள அடிப்படை அமைப்பை இலகுவாக உருவாக்குவதற்கு பயன்படும் CSS Grid framework குகள் பற்றி சொல்லியிருந்தேன். அவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பம்சம் இருந்தாலும் நான் பயன்படுத்துவது blueprint grid framework. இதற்கு முக்கியமான ஒரு காரணம் Boks எனும் மென்பொருள்தான்.

இந்த மென்பொருள் AIR மென்பொருள் ஆக இருப்பதனால் அனைத்து இயங்குதளத்திலும் இயங்கும். இந்த மென்பொருளினை பயன்படுத்தி நீங்கள் இலகுவாக உங்கள் layout களை வரைந்து கொள்ள முடியும். முடிவில் இம்மென்பொருள் உங்களுக்கு அதற்கான CSS கோப்பையும் HTML கோப்பினையும் தந்துவிடும். பிறகென்ன அங்கிருந்து உங்கள் அழகுபடுத்தும் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.

இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

27 வைகாசி, 2010

ஆறு CSS Grid framework குகள்

ஒரு சாதாரணமான இணையத்தளத்தை வடிவமைப்பதாயினும் சரி சிக்கலான சஞ்சிகை போன்ற வடிவமைப்பை கொண்ட இணையத்தளம் ஒன்றை வடிவமைப்பதாக இருந்தாலும் சரி அதன் இனை இலகுவாக அனைத்து உலாவிகளிலும் சரியாக வேலைசெய்யக்கூடியதானதாக உருவாக்கிக்கொள்ள CSS Grid framework குகள் பயன்படுகின்றன.

நீண்ட காலமாகவே பக்க வடிவமைப்புகளை செய்ய அச்சகங்களில் Grid பயன்படுகின்றது. இணைய வடிவமைப்பில் Grid இனை பயன்படுத்துவதும் ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த Grid framework கள் layout ஒன்றினை உருவாக்கும் நேரத்தினை சில நிமிட வேலைகளாக குறைத்துவிடுகின்றது.

இவற்றை பயன்படுத்துவதனால் ஏற்படும் குறிப்பிடத்தக்க பயன்கள்.

  • ஒன்றிற்குள் ஒன்றாக அடுக்கப்பட்ட ரேபிள்களை பயன்படுத்த தேவையில்லை.
  • மிகவும் சிக்கலனா வடிவமைப்புகளை இலகுவாக செய்துகொள்ளலாம்.
  • எல்லா உலாவிகளிலும் சரியாக வேலைசெய்யும்.
  • உங்கள் நேரத்தை வெகுவாக குறைக்கும்.
  • CSS எழுதும்போது ஏற்படும் பிழைகளை குறைக்கும்.

கீழே பிரபலமான சிலவற்றை தந்திருக்கின்றேன். உங்கள் வடிவமைப்பு வேலைகளுக்கு பயன்படுத்த தொடங்குங்கள். (நான் பயன்படுத்துவது blueprint)

960

blueprint

Elastic CSS

YAML

YUI

1KB CSS Grid

26 வைகாசி, 2010