எனக்கு பிடித்த ஐபோன் மென்பொருள்கள்

நேற்று எனக்கு பிடித்த மென்பொருள்கள் சிலவற்றை இங்கே பட்டியலிட்டிருந்தேன். அவற்றில் அனேகமானவை மக் இயங்குதளத்தில் மட்டுமே இயங்கக்கூடியன. விரைவில் எனக்கு படித்தமான சில உபுந்து மென்பொருள்களையும் பட்டியலிடப்போகின்றேன்.

இப்பொழுது எனக்கு பிடித்தமான ஐபோன் மென்பொருள்களை இங்கே வகைப்படுத்தி உள்ளேன். இவற்றில் எந்த விளையாட்டுக்களையும் உள்ளடக்கவில்லை. அவற்றை வேறொரு பதிவில் தருகின்றேன். உங்களிடம் ஐபோன் அல்லது ஒரு ஐபொட் ரச் இருக்குமானால் நீங்களும் இவற்றை நிறுவி பார்க்கலாம்.

BBC
பிபிசி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ மென்பொருள் இது. மிக இலகுவாக செய்திகளை வாசிக்கவும், நேரடி வானொலியை கேட்கவும் கூடியதாக அழகாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றது. பல செய்தி நிறுவனங்கள் தங்களுக்கென்று ஐபோன் மென்பொருள்களை வைத்திருந்தாலும் பிபிசி இனுடையதினைப்போல அவை எவையும் சிறப்பானவை அல்ல.

ALJAZEERA
பொதுவாக செய்திகளை ஒழுங்காக கேட்பவர்களுக்கு மேலத்தேய செய்தி தாபனங்களை தவிர்த்து சிறப்பாக செய்திகளை பெற்க்கூடிய இடம் அல்ஜசீரா. அவர்களுடைய உத்தியோகபூர்வ மென்பொருள் இது. இதில் செய்திகளை வாசிக்க முடிவதோடு மட்டுமன்றி நேரடியாக அவர்களின் தொலைக்காட்சியையும் பார்க்க முடியும். எனக்கு மிகமிக பிடித்தமான மென்பொருளில் ஒன்று இது. (இவர்களிடம் ஒரு நேரடி விளையாட்டுக்குரிய அலைவரிசை மென்பொருளும் உண்டு)

MediaFly
போட்காஸ்ற் களை அதிகம் கேட்பவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய மென்பொருள் இது. மிகவும் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பொட்காஸ்ற்களை இந்த மென்பொருளை கொண்டு நீங்கள் கேட்டு மகிழலாம். செய்திகளாகட்டும், தொழிநுட்ப செய்திகளாகட்டும், சிரிப்புத் துணுக்குகளாகட்டும் தினமும் உங்களுக்கு புதிய புதிய விடயங்கள் இங்கு கிடைக்கும்.

CNET-TV
நீங்கள் தொழிநுட்பச்செய்திகளை அதிகம் விரும்புபவராக இருந்தால் நீங்கள் கட்டாயம் CNET பொட்காஸ்ற்களை பார்க்காது இருப்பவராக இருக்க முடியாது. CNET இன் பொட்காஸ்ற்களை பார்ப்பதற்கு சிறந்த மென்பொருள் இது.

PULSE
ஐபோனில் கிடைக்கும் சிறந்த ஒரு RSS Reader இது. நீங்கள் தினமும் வாசிக்கும் இணையத்தளங்களை ஐபோனின் சிறிய திரையிலேயே சிறப்பாக வாசிக்கக்கூடியதாக தரும் மென்பொருள் இது. நீங்கள் RSS Reader பயன்படுத்துபவராயின் இம்மென்பொருள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

AMP
ஐபோனுடன் வரும் Music player க்கு சிறந்த ஒரு மாற்று இந்த மென்பொருள். நீங்கள் பாடல்கள் கேட்பதில் பிரியராயின் உங்களிடம் ஏராளமான பாடல்கள் இருக்கின்றன எனில் இந்த மென்பொருள் நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும். பாடல்கள் கேட்கும்போதே பாடல்களின் வரிகளை தேடித்தருவதும், உங்கள் பாடலுக்குரிய ஒளிப்படங்களை யுருயூபில் தேடித்தருவதும் இம்மென்பொருளின் சிறப்பம்சமாகும்.

Hidef Radio
இணைய வானொலிகளை ஐபோனில் கேட்க ஒரு நல்ல மென்பொருள் இது. கனாபிரபாவின் குரலையும் லோசனின் குரலையும் உலகின் எம்மூலையிலிருந்தும் உங்களால் கேட்க முடியும்.

Dropbox
நீங்கள் ஒரு இணையப்பாவனையாளர் எனின் உங்களுக்கு அனேகமாக Dropbox பற்றி தெரிந்திருக்கும். கோப்புகளை கணினிகளிடைய பகிர்ந்துகொள்ளவும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உள்ள சிறந்த ஒரு மென்பொருள் இது. அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கும் இம்மென்பொருளின் ஐபோன் பதிப்பு இது. இன்னமும் உங்களிடம் ஒரு கணக்கு இல்லாது விடின் இங்கே சொடுக்கி உருவாக்கிக்கொள்ளுங்கள்.

Champions
நீங்கள் ஒரு கிரிக்கட் பிரியராயின் உங்களிடம் இருக்கவேண்டிய மென்பொருள் இது. இலகுவாக கிரிக்கட் முடிவுகளை பார்க்க சிறந்த மென்பொருள் இது.


Emoji
உங்கள் ஐபோனில் சிரிப்பான்களை உள்ளிட உதவும் ஒரு மென்பொருள்.

IMDB
திரைப்படங்கள் பார்க்கின்ற எவருக்கும் IMDB இணையத்தளத்தை தெரியாதிருக்க வாய்ப்பில்லை. அந்த இணையத்தளத்தின் உத்தியோகபூர்வ மென்பொருள் இது. திரைப்படங்களை பற்றி தேடிஅறிந்து கொள்ள ஒரு நல்ல மென்பொருள் இது.

VLC
உங்கள் கணினியில் இருக்கும் சிறந்த Media player இப்போது ஐபோனிலும். ஐபோனில் சாதாரணமாக அனைத்து ஒளிப்படக்கோப்புகளையும் இயக்க முடியாது. VLC இனைப்பயன்படுத்தி இப்பொழுது உங்களால் எல்லாவித ஒளிப்படக்கோப்புகளையும் பார்த்து மகிழ முடியும்.

WORDPRESS
உங்கள் வேர்ட்பிரஸ் பதிவுக்கு ஐபோனில் இருந்தே பதிவெழுதவும், பின்னூட்டங்களை மட்டறுக்கவும் நல்லதொரு மென்பொருள் இது. (நொக்கியா போனுக்கும் இம்மென்பொருள் உண்டு).

Allrecipes.com
நீங்கள் ஒரு சமையல் பிரியராயின் (சாப்பாட்டு பிரியர் அல்ல) உங்களிடம் இருக்க வேண்டிய ஒரு மென்பொருள் இது. மிக அழகாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான சமையல் குறிப்புகளை கொண்டது இந்த மென்பொருள்.

25 கார்த்திகை, 2010

எனக்கு பிடித்தமான மென்பொருள்கள் 10

ஒவ்வொரு இயங்குதளத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதற்கு பல மென்பொருள்கள் இருக்கக்கூடும். அவற்றிலிருந்து எமக்கு வசதியான எம்மால் இலகுவாக கையாளக்கூடிய மென்பொருள்களை கண்டறிவதென்பது நிச்சயமாக மிகவும் கடினமான ஒரு வேலையாகும்.

இங்கே நான் எனக்கு பிடித்த, தினமும் பயன்படுத்தும் மென்பொருட்களை வகைப்படுத்தி உள்ளேன். நான் மக் மற்றும் உபுந்து இயங்குதளங்களை மட்டுமே பயன்படுத்துவதால் இவற்றில் அனேக மென்பொருகள் மக் இயங்கு தளத்திற்குரியவை. ஒன்று அனைத்து இயங்குதளத்திற்கும் பொதுவானது. இன்னுமொன்று மக் மற்றும் வின்டோஸில் இயல்பாக வேலைசெய்யக்கூடியது. பல இலவசமானவை. சில வணிகரீதியான மென்பொருள்கள்.

1. Alfred
மக் இயங்குதளம் பயன்படுத்துபவர்களுக்கு அனேகமாக இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று டொக் வேகமாக நிரம்பிவிடுவது. இதனால் அவர்களுக்கு ஒரு மென்பொருள் தொடக்கி ஒன்று இருப்பது அவசியமாகின்றது. Alfred இதற்கு சிறப்பான ஒரு மென்பொருளாகும்.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக்

2. Colloquy
நீங்கள் ஒரு IRC பாவனையாளர் எனில் உங்களிடம் கட்டாயம் இருக்கவேண்டிய மென்பொருள் இதுவாகும். மிக இலகுவான அழகிய பயனாளர் முகப்பு மற்றும் விரைவான செயல்திறன் மிக்க IRC client இதுவாகும்.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக்

3. Evernote
உங்களின் நினைவகம் இது என்று சொல்லுமளவிற்கு சிறப்பானதொரு மென்பொருள் இதுவாகும். நீங்கள் வாசித்தவற்றை அவ்வாறே சேமித்து வைக்கவும், ஏனையவர்களுடன் பகிரவும் இலகுவான ஒரு மென்பொருள் இதுவாகும்.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக், வின்டோஸ், அனேக மொமைல் இயங்குதளங்கள் மற்றும் இணையமூடாக.

4. NetNewsWire
எனக்கு மிகப்பிடித்த சுளுளு உடநைவெ இதுவாகும். இதைப்போல சிறந்த ஒரு சுளுளு உடநைவெ இனை நான் எந்த இணையத்தளத்திலும் பயன்படுத்தியதில்லை. இலகுவான அழகிய பயனர் முகப்பு மற்றும் புழழபடந சுநயனநச உடன் இணைத்துக்கொள்ளும் வசதி என்பன இதனை நீங்கள் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டியதன் தேவையை உணர்த்தும்.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக்

5. Miro
இலகுவாக இலவசமாக Podcast களை தரவிறக்கி பார்க்க சிறப்பான ஒரு மென்பொருள் இதுவாகும். ரொறன்ற் கோப்புகளை தரவிறக்கும் வசதியும் உண்டு. இணையமூடாக உங்கள் தொலைக்காட்சி இந்த மென்பொருள்.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக், லினிக்ஸ் மற்றும் வின்டோஸ்

6. Sequential
நீங்கள் கணினியில் படக்கதை வாசிப்பவராக இருந்தால் உங்களுக்கு கட்டாயம் தேவையான மென்பொருள் இதுவாகும்.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக்

7. Skitch
அழகான திரைவெட்டுக்களை பெற்றுக்கொள்ளவும், அவற்றில் இலகுவாக குறிப்புக்களை செய்துகொள்ளவும் பயன்படும் அழகிய மென்பொருள் இதுவாகும்.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக்

8. Sparrow
மிக அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு மின்னஞ்சல் மென்பொருள் இதுவாகும். நீங்கள் ஒரு ஜிமெயில் பயனாளர் ஆயின், மிக அழகான இலகுவான இம்மென்பொருள் உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று.

விலை : இலவசம்
இயங்குதளம் : மக்

9. Tweetie
நீங்கள் ஒரு ருவிற்றர் பாவனையாளர் எனின், இம்மென்பொருளை நீங்கள் ஒருமுறை கட்டாயம் பயன்படுத்தி பார்க்க வேண்டும்.

விலை : இலவச பதிப்பும் உண்டு (இது ருவிற்றர் நிறுவனத்தால் வாங்கப்பட்டு விட்டதால், விரைவில் பூரணமாக இலவசமாகும்).
இயங்குதளம் : மக்.

10. Espresso
நீங்கள் ஒரு இணையத்தள பாவனையாளர் ஆயின் உங்களிடம் நிச்சயம் இருக்க வேண்டிய மென்பொருள் இது. ஏராளமான வசதிகள் இவ்வழகிய மென்பொருளில் நிறைந்திருக்கின்றன.

விலை : ரூ 9500.00
இயங்குதளம் : மக்

24 கார்த்திகை, 2010

Boks இனை பயன்படுத்தி அழகிய இணையத்தளம் ஒன்றை உருவாக்குவோம்.

இணையத்தளம் ஒன்றினை உருவாக்குவது மிகமிக இலகுவான ஒன்றாக இந்நாட்களில் மாறியுள்ளது. Dreamweaver போன்ற மென்பொருட்கள் கொண்டு உங்கள் கற்பனைத்திறத்திற்கேற்ப இலகுவாக இணையத்தளங்களை வடிவமைத்துக்கொள்ள முடியும்.

இப்பதிவு அவ்வாறாக ஒரு இணையத்தளத்தினை உருவாக்குவது பற்றியது அல்ல. இப்பதிவில் நாங்கள் எமக்குத்தெரிந்த HTML மற்றும் CSS அறிவினை கொண்டும் ஒரு Grid Layout இனையும் கொண்டும் இலகுவாக ஒரு இணையத்தளத்தை உருவாக்குவது பற்றி பார்க்கப்போகின்றறோம். இதன்மூலம் இம்மொழிகளில் உங்கள் அறிவினை உங்களால் வளர்த்துக்கொள்ள முடிவதோடு தவறுகளை கண்டுபடித்து திருத்துகின்ற ஆற்றலும் வாய்க்கின்றது.

இதற்காக நாங்கள் இரண்டு மென்பொருள்களை பயன்படுத்தப்போகின்றோம்.

1. Boks – இம்மென்பொருளை முன்னர் நான் ஒரு பதிவில் அறிமுகப்படுத்தி இருக்கின்றேன். பார்த்து தரவிற்க்கி கொள்ளுங்கள்.

2. உங்களுக்கு விரும்பிய Code editor. வின்டோஸ் இயங்குதளம் பயன்படுத்துவோருக்கு நான் பிரேரிப்பது Notepad++ இனை. இலவசமானதும் சிறந்ததுமான ஒரு மென்பொருள் இதுவாகும். மக் இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் Coda அல்லது Espresso பயன்படுத்தலாம்.

இவ்விரு மென்பொருள்களும் இன்னமும் உங்கள் கணினியில் இல்லாவிடின் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

ஒரு இணையத்தளத்தை உருவாக்குவதற்கு முன்னர், அது எவ்வாறு அமையப்போகின்றது என பருமட்டான ஒரு படத்தினை வரைந்து கொள்ளுதல் எப்பொழுதும் பயன்பதும். ஒரு கடதாசியிலோ அல்லது கணினியிலோ கூட நீங்கள் இதனை வரைந்து பார்த்துக்கொள்ள முடியும். நாங்கள் உருவாக்கப்போகின்ற வடிவமைப்பை கீழே பாருங்கள்.

நீங்கள் விரும்பினால் நிறங்கள், எழுத்துருக்கள், எழுத்துருக்களின் அளவுகள் என்பவற்றையும் முன்னரே குறித்துக்கொண்டால் இன்னமும் இலகுவாக இருக்கும்.

இப்பொழுது எங்கள் Boks இனை பயன்படுத்தி இந்த வடிவமைப்பிற்கு அடிப்படையான Layout இனை உருவாக்கி எடுத்துக்கொள்ளுவோம்.

இதற்கு நாங்கள் Boks மென்பொருளை திறந்து 12 நிரல் உடையதான ஒரு அடிப்படை Grid இனை கீழே காட்டியது போல உருவாக்கிகொள்ளுவோம்.

இப்பொழுது நாங்கள் எங்கள் Layout இனை கீழ்காட்டியது போல வரைந்துகொள்ளுவோம்.

இப்பொழுது நீங்கள் உண்மையில் உங்கள் இணையத்தளத்துக்கு வேண்டியதான அடிப்படை HTML மற்றும் CSS நிரல்களை உருவாக்கிக்கொண்டு விட்டீர்கள். Export button இனை அழுத்தி அவற்றை உங்களுக்கு விரும்பிய இடத்தில் சேமித்துக்கொள்ளுங்கள். சேமிக்கும்போது கீழ்வருவனவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்.

சேமிக்கப்பட்ட உங்கள் கோப்புறையில் பின்வரும் கோப்புகள் காணப்படும்.

இவற்றில் நாங்கள் output.html மற்றும் screen.css ஆகிய இரு கோப்புகளை மட்டும் மேம்படுத்துவதனூடாக ஒரு அழகிய இணையத்தளத்தை உருவாக்கிக்கொள்ள போகின்றோம். அதனை அடுத்த பதிவில் காண்போம்.

15 கார்த்திகை, 2010