Posts Tagged "Google"

கூகிளுடன் AIM

கூகிள் நிறுவனம் ஜிரோக் இனை தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலுடன் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து பெரியளவிலான எந்த விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை. இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் AOL நிறுவனத்தில் கூகிள் ஒரு பில்லியன் டொலர்களை முதலீடு செய்ததிலிருந்து ஜிரோக் இன் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இப்போது அனேகமாக அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் கூகிள் நிறுவனம் AIM இனை தனது அரட்டை சேவையுடன் இணைக்கப்போகின்றது.

இதைவிட இரண்டு சுவாரசியமான இரண்டு தகவல்கள் என்னவென்றால் அப்பிள் நிறுவனத்தின் புதிய இயங்குதள ஐசற் ஜிரோக் உடன் சிறப்பாக ஒத்துழைப்பதும், கூகிள் மிக அண்மையில் ஸ்கைப் (இப்போது ஈபே நிறுவனத்தின் ஒரு பிரிவு) உடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டதுமாகும்.

கீழிருக்கும் திரைவெட்டை பாருங்கள்.

(யாழப்பாணத்தில் இருக்கும் மிக மோசமான இணையப்பிரச்சனை காரணமாக நீண்ட காலமாக பதிவை மேம்படுத்த முடியவில்லை.)

20 கார்த்திகை, 2007

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இணைய உலகின் சக்கரவர்த்தியாக இருந்து வருகின்ற கூகிள் இன்று தனது 9 வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இவரை உற்றார் உறவினர் மற்றும் ஊரோடி என்போர் வாழ்த்தி மகிழ்கின்றனர்.

கூகிள் என்கின்ற டொமைன் 1997 இல் பதியப்பட்டிருந்தாலும் அது இணையப்பக்கமாக செயற்படத்தொடங்கியது 1998 செப்ரெம்பரிலேயே.

கூகிள் 1998 இல்

அப்புறமா




28 புரட்டாதி, 2007

கூகிள் றீடர்

கூகிள் நிறுவனம் தவறுதலாக தனது கூகிள் றீடர் சம்பந்தமான சில தகவல்களை கூகிள் வீடியோவில் வெளியிட்டுவிட்டது. பொதுவாகவே கூகிள் தனது உள்விடயங்கள் வெளியிடப்படுவதை விரும்புவதில்லை. அந்த தகவல்கள் உங்களுக்காக.

  • Google Reader uses 10 TB for storing all the raw data
  • Google Reader crawls 8 million feeds
  • The rate of user growth = the rate of growth for the number of feeds
  • Search requires a lot of computational resources. Google Reader uses two indexes for search: a big tree updated twice a day (150 machines, 600 million documents) and 40 small trees for recent posts, updated every 5 minutes (40 machines, 40 million documents)
  • Some upcoming features are also mentioned in the video: internationalization, feed recommendations, and accepting pings sent to Google Blog Search
14 புரட்டாதி, 2007