யாழ்ப்பாணத்து புத்தகக் கடைகள் எல்லாம் பூட்டியிருக்கு அல்லது பழைய புத்தகக் கடையாப்போச்சு. கொழும்பில வாங்கின புத்தகங்கள் எல்லாம் வாசிச்சும் முடிஞ்சுது. இப்போதய திட்டம் எல்லாம் இருக்கிற புத்தகங்களை திருப்பி வாசிக்கிறது தான். முதலாவதா ஆத்மாநாம் படைப்புகளை எடுத்து வச்சிருக்கு. முதல் வாசிக்கேக்க யோசிச்சனான் மனிசன் ஒரு ரெண்டு வருசமெண்டாலும் கூட உயிரோட இருந்திருக்கலாம் எண்டு. உங்களுக்கு ஏதாவது நல்ல புத்தகம் அம்பிடடால் எனக்கும் சொல்லுங்கோ காசு அனுப்பிறன் வாங்கி அனுப்புங்கோ. ...
மேலும் வாசிக்க →
யாழ்ப்பாண மண்ணை மீள மிதிச்சதில யாழ்ப்பாணத்திற்கு கொஞ்சம் பாரமெண்டாலும் எனக்கு சரியான சந்தோசம். இரண்டு நாளா சுத்திப்பாத்தன் போகக்கூடிய இடங்களுக்கு. அனேகமா எல்லா சாப்பாட்டுக்கடையும் பூட்டு. எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துது. யாழ்ப்பாணத்து விலைகள்தான் கொஞ்சம் பயப்பிடுத்துது. பால்மா, மின்கலம் எல்லாம் வாங்கவே ஏலாது. இப்பத்த விலைகளை நீங்களும் கொஞ்சம் பாருங்கோவன். முந்திவித்த விலைகள் அடைப்புக்குறிக்குள்ள போட்டிருக்கு.தேங்காய் எண்ணெய் - 480.00 (240.00)அரிசி - 110.00 (38.00)சீனி - இல்லை ...
மேலும் வாசிக்க →
சரி கடைசியா இரண்டு மாதத்துக்கு பிறகு ஒருமாதிரி நேற்று பின்னேரம் யாழ்ப்பாணம் வந்து சேந்தாச்சுது. UN இன்ரை ஸ்பெசல் பிளேனில. பாப்பம் இனி கொஞ்சம் கூட வாசிக்கலாம் கொஞ்சம் கூட எழுதலாம். யாழ்ப்பாண நிலமை பாக்க கொஞ்சம் கவலையாத்தான் கிடக்கு. இணைய வசதியும் குறைவுதான். ஆண்டவன் அருள்தரோணும் அலட்டுறதுக்கு..
மேலும் வாசிக்க →