Posts Tagged "யாழ்ப்பாணம்"

ஐஸ்பழம், தேன்முறுக்கு

நேற்று ஞாயிற்றுக்கிழமை, பொழுதும் போகேல்ல சரி ஊரைச்சுத்துவம் எண்டு விடிய வெள்ளணவே (ஞாயிற்றுக்கிழமை எண்டா 11 மணிதான் விடிய வெள்ளன) பெடியள் (????????) எல்லாருமா வெளிக்கிட்டிட்டம். முதலில கண்ணில பட்டது ஐஸ்பழம். பள்ளிக்கூடம் படிச்ச காலத்தில பள்ளிக்கூடம் விட்ட உடனே செய்யிற வேலை ஓடிப்போய் ஐஸ்பழம் வாங்கிறது. ஒரு ஐயா சந்திரா ஐஸ்பழம் வச்சிருப்பார். அன்னாசி அது இது எண்டு கன பேர்களில இருக்கும். 5 ரூபா குடுத்து வாங்கி ...

மேலும் வாசிக்க →

சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)

கனகாலத்துக்கு பிறகு நண்பர்கள் எல்லாரும் வரச்சொல்லுறாங்களே எண்டு சிவாஜி பாக்கப்போனன். இதில முக்கியமான விசயம் என்னெண்டா இந்தியாவில சிவாஜி திரையிட்ட அண்டே இங்க யாழ்ப்பாணத்திலயும் மனோகரா தியேட்டரில ஹவுஸ் வுல். நான் பாக்கப்போனது ஒரு கிழமை கழிச்சு 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (அப்பத்தானே நேரம் கிடைக்குது) கடைசி காட்சி பாக்க நானும் நண்பனுமா போனம். கடைசிக்காட்சியெண்டா 2.30 மணிக்கு, ஊரடங்கு காட்டின விளையாட்டு. முதற்காட்சி விடியக்காலம 7 மணிக்கு பிறகு ...

மேலும் வாசிக்க →

சிக்கிண்குணியா

யாழ்ப்பாணத்தாக்கள் ஒருத்தரையும் விடுறேல்லை பார் எண்டு ஒரு பிடி பிடிச்சுக்கொண்டிருக்கு இந்த சிக்கிண்குணியா. மூண்டு நாளைக்கு முதல் மெதுவா குணங்குறிகள் தெரிஞ்சதுதான் எண்டாலும் பேசாம விட்டுட்டன். முந்தநாள் தொடங்கினது இப்பத்தான் விரலெண்டான்ன கொஞ்சம் வேலைசெய்யுது. எந்த வேலையெண்டாலும் கொஞ்சம் சிலோ மோசனிலதான் செய்யேலும். முதல் இரண்டு நாளும் சரியான தலையிடியும் காய்ச்சலும். அதுகள் குறைஞ்சவுடன இந்த நோவுகள் தொடங்கிச்சு பாருங்கோ பேசாம காய்ச்சலாவே கிடந்திருக்கலாம் போல இருக்கு. யாழ்ப்பாணத்து சனத்தொகையில ...

மேலும் வாசிக்க →

வரதர் ஐயா காலமானார்

ஈழத்து இலக்கிய உலகில் மூத்தானாய் நிமிர்ந்து நின்று அழகு செய்து வரதர் ஐயா அவர்கள் இன்று காலை காலமானார். கதாசிரியர், நாவலாசிரியர், கவிதையாசிரியர், பதிப்பாசிரியர் போன்ற பல தளங்களிலே சளைக்காது தொடர்ந்து செயற்பட்டு வந்தவர் வரதர் ஐயா அவர்கள்.1940 இலே ஈழகேசரிபத்திரிகை மூலம் இலக்கிய உலகிலே நுழைந்து 1943 இலே இலக்கிய மறுமலர்ச்சி சங்கத்துக்கு கால்கோள் அமைத்து 1946 இல் மறுமலர்ச்சி சஞ்சிகையை வெளியிட்டு ஈழத்து இதழியல் வரலாற்றில் தன் ...

மேலும் வாசிக்க →

யாழ்ப்பாணம் பாக்கலாம்

இப்ப பாதைகளும் மூடினா பிறகு கொழும்பில இருக்கிற ஆக்களோ ஏன் வவுனியாவில இருந்து கூட யாழ்ப்பாணம் வந்து பாக்கேலாம ஆக்கள் இருக்கினம். வெளிநாட்டில இருந்து வாற ஆக்களும் இல்லாமப்போச்சு. அவயளுக்கு மட்டும் யாழ்ப்பாணத்தை பாக்கிற ஆசை இல்லாம இருக்குமே. அதுதான் படு கடுமையா யோசிச்சு யாழ்ப்பாணத்தை என்னென்ண்டாவது காட்டிறது எண்டு முடிவெடுத்திட்டன். இது மாதிரி வடமராட்சி தென்மராட்சி எண்டு பிரிச்சு பிரிச்சு காட்டிறதெண்டும் முடிவெடுத்திறக்கிறன் சரியா.கீழ வடிவா யாழ்ப்பாணத்தை பாத்திட்டு ...

மேலும் வாசிக்க →