அனுபவம்

எனது அனுபவங்களின் தொகுப்பு

ஜெயா தொலைக்காட்சிக்கு என்ன நடந்தது??

காலமையில வேலைக்கு போக முதல் கண்ணில அதிகமா அகப்படுற நிகழ்ச்சியில ஒண்டு ஜெயா தொலைக்காட்சியின்ர தகவல்.கொம். இணையம் பற்றினது எண்டிறதால எந்த இணையத்தளத்தை பற்றி சொல்லுறாங்கள் எண்டு நிண்டு பாக்கிறது. ஆனா நிகழ்ச்சியில காட்டின இணையத்தளங்களை பாத்த பிறகு நிகழ்ச்சி நடத்திறவரில இருந்து தொகுப்பாளர் வரைக்கும் யாருக்கும் இணையம் சம்பந்தமான அறிவு இல்லை எண்டு விளங்குது. போன ஒரு மாதத்தில மட்டும் மூண்டு தரத்துக்கு மேல விளம்பர இணையத்தளங்களை காட்டியிருக்கினம். அதை காட்டிறதோட மட்டுமல்லாமல் அதுக்கும் விளக்கம் வேற.. அரைகுறை தமிழில..




கீழ இருக்கிற படங்களை பாருங்க விளங்கும்.

16 ஆனி, 2008

புதுவருசம், புது உடுப்பு, புதுப் பிரச்சனை

புது வருசம் பிறந்தாப்பிறகு போடுற முதற் பதிவு இதுதான். வருசத்தண்டே வாழ்த்துப்போட வேணும் எண்டு நினைச்சிருந்தனான். புதுப்பிரச்சனைகள். நாலாவது தடைவயா ஊரோடி புது வடிவம் எடுத்திருக்கு (இடையில பாத்து திருத்தங்கள் சொன்னவர்களுக்கு நன்றி – குறிப்பா கௌபாய் மதுவுக்கு). ஆனா ஒண்டை கவனிச்சியள் எண்டா தெரியும் நான் எழுதின கன பதிவுகள் காணாமல் போயிருக்கிறது. தரவுத்தளத்தில வந்த பிரச்சனை காரணமா (அதில ஒண்டும் பிரச்சனை வரயில்ல நான்தான் பிழையாக்கி விட்டன்) காரணமா என்ர எல்லா பதிவுகளும் என்னை ஊக்கப்படுத்தின எல்லா பின்னூட்டங்களும் அப்பிடியே இல்லாமல் போயிட்டுது.

பழைய பதிவுகளை மீண்டும் இணைக்க முயற்சிக்கிறன், ஆனா பின்னூட்டங்கள்??? அவ்வளவுதான்…

என்ன பிழை நடந்தது எண்டதை விரிவா ஒரு பதிவில தர முயற்சிக்கிறன். புதிசா தனித்தளத்தில பதிய வாறாக்களுக்கு நிச்சயமா உபயோகமா இருக்கும்.

பிறகென்ன புது உடுப்பு எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ.

24 சித்திரை, 2008

தினக்குரலில் ஊரோடி

தினக்குரலில வாற வலைப்பூக்கள் பற்றிய அறிமுகத்தில இந்த முறை ஊரோடி இடம்பெற்றிருக்கு. இடம்பெற வைத்த தாசன் அண்ணாவிற்கு நன்றிகள். காலையில சில நண்பர்கள் தொலைபேசியில அழைச்சு சொன்னாங்கள் இப்படி உன்ரை வலைப்பதிவு பற்றி எழுதியிருக்கு எண்டு சொன்னாங்கள். பிறகு மாயாவும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இவர்களுக்கும் நன்றி. (கொழும்பு தினக்குரல் யாழ்ப்பாணத்தில் கிடைப்பதில்லை.)

25 மாசி, 2008